Friday, March 24, 2023

தமிழ் நாடு அறநிலையத்துறை கிட்ட கொடுத்திருந்தா இந்நேரம் கட்சிக்காரர்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிருப்பாங்க!!!

 நடிகை காஞ்சனா சென்னையில் தன் பலநூறு கோடி ரூபாய் சொந்தமுள்ள தன் சொந்த நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்ததும் அவர்கள் அழகான கோவிலை ஆகமவிதிபடி கட்டி கும்பாபிஷேகம் செய்து திறந்து வைத்ததும் போனவாரம் நடந்தது

தமிழகத்தில் ஒரு பக்கம் இந்துகோவில்கள் இடிக்கபட்டாலும் இப்படி *புது ஆலயங்கள் திறக்கபடுவது மகிழ்ச்சி, அவ்வகையில் இந்த* *தேசத்தின் தர்ம சக்கரம் சரியாக சுழல்கின்றது*
*காஞ்சனா இந்த* *நிலத்தை தமிழக இந்து அறநிலையதுறையிடம் வழங்கியிருந்தால்* *என்னாகியிருக்கும் என்பதை* *நினைத்தாலே* அச்சம் மேலிடுகின்றது நல்ல வேளையாக அது நடக்கவில்லை
84 வயதாகும் நடிகை *காஞ்சனா, 1962ல் விமான* *பணிபெண்ணாக இருந்தவர் தெலுங்கு பிராமண வம்சமான அவர் 1963ல் "காதலிக்க நேரமில்லை" படத்தில் அறிமுகமானார் பின் பிரமாதமான* நடிகையாக அறியபட்டார்
*பொதுவாக தமிழ் சினிமாவிற்கு ஒரு சாபம் உண்டு, அங்கு நடித்து பெயர் பெற்ற எந்த நடிகர் நடிகையரும் நிம்மதியாக* *வாழ்ந்ததாக* *சரித்திரமே இல்லை*
*தியாகராஜ பாகவதர் முதல் நடிகர் மயில்சாமி வரை* *இந்த பட்டியல் நீண்டது, தீரா சாபம் அது*
ஜெமினி கணேசன், அய்யா கருணாநிதி போன்ற சில விதிவிலக்கு, அவர்கள் கொள்கையே வேறு
மற்றபடி எல்லா பெரும்பான்மை நட்சத்திரங்களும் சோகத்திலே வாழ்ந்தன,அழுதன, வாடின. அந்த சாபம் காஞ்சனாவுக்கும் வந்தது
உழைத்து வாழ்வோரை விட உழைக்காமல் இருப்போருக்கே சொத்து மேல் ஆசை வரும் என்பது விதி, *அப்படி நடிகர் நடிகையர் சொத்தை குறிவைக்கும் காக்கா கூட்டம் எப்பொழுதும் உண்டு*
*அப்படி சிக்கல் காஞ்சனாவுக்கு வந்தபொழுது திருப்பதி பெருமாளை நம்பினார், பெருமாளும் வழிகாட்ட தான் வணங்கிய தெய்வத்தை எல்லோரும் வணங்கி வழிபட* *வழிசெய்துவிட்டார் காஞ்சனா*
பலநூறு கோடி ரூபாய் சொத்தை கொடுக்கும் அளவு அவர் பக்தி இருந்தது மெச்சதக்கது, விமான பணிப்பெண் ஏன் நடிகையானாள் எனும் கர்மா தீர்ந்தது
ஜெயலலிதாவும் காஞ்சனாவும் ஏறகுறைய சமகால நடிகைகள், ஜெயா முதல்வராகி பல்லாயிரம் கோடிகளை குவித்தார் அந்த வழக்கில் சிக்கி காலமுமானார்.
*ஆனால் வரலாற்றில் யார் நிற்பார்கள் என்றால்* *காஞ்சனாதான்* *நிற்பார், காரணம் தன்னிடம் உள்ளதையெல்லாம் பகவானுக்கு அள்ளி கொடுத்தது அவர்தான்.*
*ஜெயாவின் சொத்தும் மாளிகையும் ஏலம் வம்பு வழக்கு ஆக்கிரமிப்பு* *என சிக்கிகிடக்க, காஞ்சனாவின் சொத்து கோவிலாகின்றது*
*கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞன், அவனின்* *வரிகளெல்லாம் பெரும்பாலும் பலித்தன, ஆச்சரியமாக பல நடிகையர் நடிகருக்கு பலித்தது.*
*"சாந்தி நிலையம்" படத்தில் காஞ்சனா பாடுவதாக பாடல் எழுதினார்.* *கண்ணதாசன், இந்த ஆலயம் திறக்கபடும்* *பொழுது அந்த* *வரிகள்தான் மறுபடி* *மறுபடி நினைவுக்கு* *வந்தன‌*
*கண்ணதாசனின் ஞான கண்கள் அப்பொழுதே அவளை கண்டு பாடியிருப்பது புரிந்தது.*
*இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்*
*"உள்ளம் என்னும் கோயிலைக்*
*கட்டி வைத்தவன்*
*கண்கள் என்னும்* *வாசலை*
*தந்து வைத்தவன்*
*கண்ணில் வரும்* *பாதையை*
*காணச் சொன்னான் நல்ல நல்ல பாதையில்*
*போகச் சொன்னான்*
*கண்கள் அவனைக்* *காண்க*
*உள்ளம் அவனை* *நினைக்க*
*கைகள் அவனை* *வணங்க*
*ஒன்றுகூடி*
*கைகள் அவனை* *வணங்க*
*இறைவன் வருவான் - *அவன்*
*என்றும் நல்வழி தருவான்"*
*இதோ அந்த பாடல்படியே* *காஞ்சனாவுக்கு நல்வழி காட்டியிருக்கின்றான்* பகவான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...