Friday, March 24, 2023

பைனான்ஸ் கம்பெனியில் ஏமாந்து விட்டு எல் ஐ சி யை குறை சொல்லும் மக்கள் மிக அதிகம்.

 INSURANCE முகவர்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்பதால் தான், காப்பீட்டு முகவர்கள் உங்களை விடாமல் பின்தொடர்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அவர்கள் நமக்கு நன்மை தான் செய்கிறார்கள் என்ற உணர்வு வரவேண்டும். இது அவர்கள் தொழில்.

1. நீங்கள் துணிகளை வாங்கினால், அதன் உரிமையாளருக்கு 10 முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் துணிகளை வாங்குவதை நிறுத்துகிறீர்களா..??
2. நீங்கள் 50 லட்சத்திற்கு வீடு வாங்கினால், அந்த பில்டருக்கு குறைந்தது 5 லட்சம் லாபம் வைத்துதான் விற்பார், இருந்தும் வீடு வாங்குவதை நிறுத்துகிறீர்களா..??
3. ஓட்டுநர் உரிமம் பெற 200 ரூபாய்தான் செலவு ஆகும் என்பதை அறிந்தும் அதற்காக நீங்கள் 2000 ரூபாயை ஆர் ட்டி ஓ முகவருக்கு கொடுக்கிறீர்கள் ...
4. நாம் எதையாவது வாங்கும் போதெல்லாம், நமக்கு என்ன பயன்.. அதனால் என்ன லாபம்.. குடும்பத்திற்கான அத்தியாவசியம்.. போன்றவற்றை ஆராயாமல், மற்றவர்கள் அதில் என்ன ஆதாயம் பெறுகிறார்கள் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினால், நாம் வாழ்க்கையில் எப்படி அமைதியாக.. மகிழ்ச்சியாக..
நிம்மதியாக.. இருக்கமுடியும் என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.
Insurance காப்பீட்டு முகவர் உங்களை பணத்திற்காக மட்டுமே கவனிப்பதில்லை, ஆனால் .....
1. உங்களுக்குப் பிறகு, உங்கள் பிள்ளைகள் யாரிடமும் கைகளை பரப்புவதற்கான வாய்ப்பை எதிர்கொள்ளவே கூடாது என்பதற்காகவே காப்பீட்டு முகவர் உங்களைப் பார்த்துக் கொள்கிறார்.
2. வயதான காலத்தில், டெபாசிட் செய்யப்பட்ட பணம் முதிர்வு பெறும் போது, ​​குழந்தைகளால் அதைக் கையாள முடியாத நிலையிலும் , அந்த நேரத்தில் கூட நீங்கள் தலை நிமிர்ந்து வாழலாம், ஏனென்றால் காப்பீட்டு முகவர் உங்கள் நலன் கருதி உங்களைப் பின்தொடர்கிறார்.
3. உங்கள் பிள்ளைகளின் உயர் கல்வி, மற்றும் திருமணத்திற்கு, நீங்கள் எந்த வங்கியின் அல்லது எந்தவொரு உறவினரின் வாசலிலும் நிற்க வேண்டியதில்லை, ஏனெனில் காப்பீட்டு முகவர் உங்கள் நலன் கருதிஉங்களைப் பின்தொடர்கிறார்.
4. மிக முக்கியமானது, இன்றைய பணவீக்க காலத்தில், ஒரு குடும்பத் தலைவரை இழந்த, உதவியற்ற நிலையில் இருந்து ஓரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக காப்பாற்ற ஒரு காப்பீட்டு முகவர் உங்களைப் பின்தொடர்கிறார்.
எப்படியிருந்தாலும், நல்ல விஷயங்களை வீடு வீடாக சென்று விற்க வேண்டியது உலகின் வழக்கம்,
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானத்தை வாங்க வரிசையில் கால்கடுக்க காத்திருக்கிறார்கள்.
ஆனால்
உடலுக்கு நன்மை பயக்கும் பாலை,
பால்காரர் வீடு வீடாகச் சென்று பால் விற்பது போல,
முகவர் உங்கள் குடும்ப நலன்கருதி உங்களைப் பின்தொடர்கிறார்.
இன்றய காலகட்டத்தில் ஒரு நபர் இறந்த பிறகு, சொந்த சகோதரர் கூட நிதி உதவி செய்யமுன்வராத போதும், அந்த நேரத்தில் இந்த காப்பீட்டு நிறுவனம் தனது முகவரின் மூலம் உங்களுக்கு உதவ ஒரு இறை தூதர்போல ஓடி வந்தது சேவைக் கரம் நீட்டுகிறார்.
வளர்ந்த நாடுகளில், காப்பீடு செய்வது என்பது சட்டத்தால் அரசு கட்டாயமாக்கியுள்ளது, ஆனால் இங்கே நடையாய் நடந்து, அதை வீடு வீடாக சென்று மக்களுக்கு விளக்க வேண்டியதாகிறது.
மருத்துவர்கள் உயிரைக் காக்கிறார்கள்
LIFE Insurance முகவர்கள் உங்கள் குடும்பத்தையே காக்கிறார்கள்..........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...