Sunday, March 26, 2023

டி.எம்.சௌந்தரராஜன் .

 இசைப்பேரரசர் கலைமாமணி, பத்மஸ்ரீ மறைந்த பின்னணிப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறன் வாய்ந்த டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் 100 வது ஆண்டு பிறந்தநாள் நினைவு.

🙏(24-03-1923)
மதுரையில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 ஆம் ஆண்டு சுமித்திரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தர்ராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அவர் ஒப்பந்தம் செய்ய மூல காரணமாக இருந்தவர் பழம்பெரும் நடிகர் பி.வி.நரசிம்ம பாரதி அவர்கள். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்.
கிருஷ்ண விஜயம் திரைப்படம் 1946 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. திரு.சௌந்தரராஜன் அவர்களும் அந்த ஆண்டு தான் இந்தப்படத்தில் பாடினார். ஆனால் ஏனோ படம் 1950 ஆம் ஆண்டு தான் வெளிவந்தது.
திரு.ஏ.எல்.ராகவன் அவர்கள் சிறுவன் கிருஷ்ணனாக நடித்தும் டி.எம்.எஸ்.அவர்களுடன் ஒரு பாடலும் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய கதாபத்திரத்தில் கிருஷ்ணனாக நடித்திருந்தவர் பி.வி.நரசிம்ம பாரதி அவர்கள். இந்தப்படத்தில் "எப்படி சகிப்பது" என்ற பாடலை டி.எம்.எஸ் அவர்கள் மணி பாகவதர் ஆகியோருடன் பாட, உடன் பாடியவர் ஏ.எல்.ராகவன். டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் இருவருக்கும் இதுதான் முதல் படம்.
அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
முதல் முதலாக தேவகி திரைப்படத்தில் டி.எம்.எஸ் அவர்கள் பிச்சைக்காரராக நடித்திருந்ததோடு ஒரு பாடலும் பாடியிருந்தார்.
1952 ஆம் ஆண்டு நடிகர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "வளையாபதி" (இதிலிருந்து அவர் வளையாபதி முத்துக்கிருஷ்ணன் என்றே அழைக்கப்பட்டார்) திரைப்படத்தில் புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அற்புதமாக இரண்டு பாடல்களை எழுத குரல் தந்தவர் டி.எம்.எஸ் அவர்கள். அவைகள்:
"குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு தாவலினால் நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே" என்று கே.ஜமுனாராணி அவர்கள் முதலில் பாட, அவரைத் தொடர்ந்து டி.எம்.எஸ் அவர்கள்,
"கொஞ்சிடும் அஞ்சுகமே
ஓடிவந்த ஜோடிப்புறா
கூடி ஆனந்தமாய்
கொஞ்சிப் பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே" என்று இனிமையாகத் தனது குரலைப் பதிவு செய்திருப்பார்.
ஜமுனாராணி அவர்களுக்கு வளையாபதி படம் தான் முதல் திரைப்படப்பாடல் என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் சொல்லுங்கள். நான் திருத்திக் கொள்கிறேன்.
அதே ஆண்டில் எம்.என்.நம்பியாருக்காக "கல்யாணி" (1952) திரைப்படத்தில் மூன்று பாடல்களைப் பாடியிருந்தார் டி.எம்.எஸ்.
1. "பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே"
2. "செல்வம் நிறைந்தவர் என்றாலே"
3. "வாழ்வதற்கே இடம் கொடுக்கும்" ஆகிய பாடல்கள்.
அதன்பின் 1953 ஆம் ஆண்டில் ஒரு இந்திப்படத்தின் தமிழ் வடிவமாக வெளிவந்த "நல்ல பிள்ளை" என்ற ஒரு படத்தில் மட்டும் பாட வாய்ப்பு கிடைத்த டி.எம்.எஸ் அவர்களுக்கு, 1954 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்காக "தூக்கு தூக்கி" திரைப்படத்தில் பாடுவதற்கு சந்தர்ப்பம் நன்றாகவே அமைந்தது. இதில் இசைமேதை ஜி.ராமனாதன் அவர்களின் இசையில் 8 பாடல்கள் பாடியிருந்தார் டி.எம்.எஸ் அவர்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்காகப் பாடியது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
1. ஏறாத மலைதனிலே,
2. சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,
3. பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே,
4. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
5. அபாய அறிவிப்பு அபாய அறிவிப்பு,
6. கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த,
7. காலம் வருகுது நல்ல காலம் வருகுது,
8. ஆணையும் பெண்ணையும் அழகு செய்வது ஆடை
ஆகிய பாடல்கள் டி.எம்.எஸ் அவர்களுக்குப் பெரும் புகழைத் தந்ததோடு, அவரது குரல் நடிகர் திலகத்துக்கு மிகச்சரியாகப் பொருந்தியிருந்தது ஆச்சரியம் தான்.
அதே ஆண்டில் வெளியான கூண்டுக்கிளி (1954) திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்காக டி.எம்.எஸ் அவர்கள் ஒரு பாடல் பாடியிருந்தார். சரியா? தப்பா? சரியா? தப்பா? என்ற பாடல் தான் அது. இந்தப்பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் குரல் நடிகர் திலகம் அவர்களுக்கு மிகச்சரியாகப் பொருந்தியிருக்கும்.
ஆக தொடர்ந்து டி.எம்.எஸ் அவர்களுக்கு என் மகள் (1954), மாங்கல்யம் (1954), புதுயுகம் (1954) என்று படங்கள் வரிசையாக பாடுவதற்கு சந்தர்ப்பம் அமைய, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்தில் "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" மற்றும் "தமிழன் என்றொரு இனம் உண்டு" ஆகிய இரண்டு பாடல்கள் டி.எம்.எஸ் அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க ஏ.கே.வேலன் அவர்கள் கதை, திரைக்கதை வசனம் எழுதிய "நல்ல தங்காள்" (1955) படத்தில்
"பொன்னே புதுமலரே
பொங்கி வரும் காவிரியே
மின்னும் தாரகையே
வெண்மதியே"
என்ற பாடலை ஏ.பி.என் அவர்களுக்காக டி.எம்.எஸ் அவர்கள் பாடியிருந்தது சிறப்பு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ரஞ்சன், எம்.என்.நம்பியார், நடிப்பு செல்வம் ஜெமினி கணேசன், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், கலைநிலவு ரவிச்சந்திரன், நவரசத் திலகம் முத்துராமன், லட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமார், மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன், ஏ.வி.எம்.ராஜன், தாய் நாகேஷ், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், சத்யராஜ், இளைய திலகம் பிரபு, டி.ராஜேந்தர் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
சௌந்தரராஜன் அவர்கள் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் இறுதியாக பாடிய பாடல்.
1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத்தரு பத்தித்திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது. மேலும் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன் அவர்களுடன் இணைந்து சௌந்தர் ராகவன் புரொடக்சன்ஸ் என்ற பேனரில் "கல்லும் கனியாகும்" என்ற திரைப்படத்தை தயாரித்து ஒரு முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.
முக்தா வி.சீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் வெளியான "பலப்பரீட்சை" திரைப்படத்தில் முதல் முதலாக இசையமைத்திருந்ததோடு, திருவிழா ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வரம் மற்றும் வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் அவர்களின் தவில் வாசிப்பையும் இணைத்து "மாப்பிள்ளை சாருக்கு
வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ" என்ற பாடலில் இடம்பெறச் செய்து தானும் பாடியிருந்தார்.
"வானில் முழுமதியைக் கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்" - சிவகாமி
"சுந்தரி சௌந்தரி நிரந்தரியே",
"பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே",
"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" - தூக்கு தூக்கி
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே,
சிந்தனைசெய் மனமே - அம்பிகாபதி
வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே - சாரங்கதாரா
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே - வணங்காமுடி
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா,
ஆடாத மனமும் உண்டோ - மன்னாதி மன்னன்
ஓ...வெண்ணிலா ஓ...வெண்ணிலா - வண்ணப்
பூச்சூடவா வெண்ணிலா,
நிலவென்ன பேசும்
குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே - ராணி சம்யுக்தா
யாரடி நீ மோகினி,
அன்பே அமுதே அருங்கனியே - உத்தமபுத்திரன்
கண்கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே,
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா,
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்வயதினில் வருவது ஒரு நினைவு - காஞ்சித்தலைவன்
பொன்னொன்ன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை,
ஓஹோ..ஹோ..ஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்,
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை,
அண்ணன் காட்டிய வழியம்மா,
நல்லவன் எனக்கு நானே நல்லவன் - படித்தால் மட்டும் போதுமா
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா,
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை,
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - பார்த்தால் பசிதீரும்
தேரோடும் நம்ம சிங்கார மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்,
தாழையாம் பூமுடித்து
தடம்பார்த்து நடை நடந்து,
பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு இந்தப் பிள்ளை யாரு,
ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ - பாகப்பிரிவினை
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழவாயில் புன்னகை செய்தே
கோலமயில் போல் நீவருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே,
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா - பாலும் பழமும்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா,
இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்றுதான் - இரவும் பகலும்
நான் யார்? நான் யார்? நீ யார்?,
குங்குமப்பொட்டின் மங்கலம்,
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்,
நீயேதான் எனக்கு மணவாட்டி,
உன்விழியும் என் வாளும் சந்தித்தால்,
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை - குடியிருந்த கோயில்
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ,
எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்,
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக - தோழா
ஏழை நமக்காக - சந்திரோதயம்
மலரும் வான்நிலவும்
சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே, (கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்),
கல்லாய் வந்தவன் கடவுளம்மா,
யார் தருவார் இந்த அரியாசனம்,
கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் - மகாகவி காளிதாஸ்
பாட்டும் நானே பாவமும் நானே,
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் - திருவிளையாடல்
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே,
குங்குமப் பொட்டுக்காரா,
- முதலாளி
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது - சூரியகாந்தி.
உலகின் முதலிசை தமிழிசையே,
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது
இறைவன் அருளாகும் - தவப்புதல்வன்
வெள்ளிக் கிண்ணம் தான்,
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,
என் கேள்விக்கென்ன பதில்,
சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்,
ஓ..மேரி தில்ரூபா (கலைச்செல்வி ஜெயலலிதா உடன்)
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு,
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்த சொல்லுதம்மா,
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி,
தூங்காத கண் என்று ஒன்று,
ஒருதாய் மக்கள் நாமென்போம்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்து,
பனியில்லாத மார்கழியா,
ஹலோ ஹலோ சுகமா,
தர்மம் தலைகாக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்,
ஒருவன் மனது ஒன்பதடா,
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை,
உலகம் பிறந்தது எனக்காக,
காவேரிக் கரையிருக்கு
கரைமேலே பூவிருக்கு,
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது,
உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்,
மஞ்சள் முகமே வருக,
வெள்ளி நிலா முற்றத்திலே,
பட்டு வண்ணச்சிட்டு
படகுத்துறை விட்டு,
கூந்தல் கருப்பு
குங்குமம் சிவப்பு,
எண்ண எண்ண இனிக்குது
ஏதேதோ நினைக்குது,
தரை மேல் பிறக்க வைத்தான்,
ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
மயக்கமென்ன இந்த மௌனமென்ன,
ஏன்? ஏன்? ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்,
இரண்டு மனம் வேண்டும்,
யாருக்காக இது யாருக்காக,
நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்,
கண்ணா....நீயும் நானுமா,
பாலூட்டி வளர்த்த கிளி,
அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன,
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்,
சபரிமலையில் வண்ண சந்திரோதயம்,
சுவாமி சரணம் சரணம் என் ஐயப்பா,
சித்திரம் பேசுதடி,
அத்திக்காய் காய் காய்,
நீயே உனக்கு என்றும் நிகரானவன்,
நான் என்ன சொல்லி விட்டேன்,
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே,
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா,
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்,
சீவி முடிச்சு சிங்காரிச்சு,
அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ,
இதய ஊஞ்சல் ஆடவா,
நான் அனுப்புவது கடிதம் அல்ல,
அவளா சொன்னாள் இருக்காது,
நதி எங்கே போகிறது? கடலைத்தேடி,
அழகு சிரிக்கின்றது,
கண் எதிரே தோன்றினாள்,
என இதுபோல் ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள் மற்றும் ஏராளமான பக்திப் பாடல்கள் பாடியவர், நம்மை என்றென்றும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் டி.எம்.எஸ் அவர்கள் இன்றும் நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று ஐயா டி.எம்.எஸ் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளில் அன்னாருக்கு முக்தா பிலிம்ஸ் 60 குடும்பத்தினர் சார்பாக புகழஞ்சலி.🙏
May be an image of 1 person and sitting
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...