Saturday, March 25, 2023

இங்கு.. சிபாரிசு பணம் தேவை..இட ஒதுக்கீட்டில். திறமை அடிபடும்..எனவே வெளிநாடே தேவலை.

 நேற்று ஒரு நண்பர் வெளிநாட்டில் நம் குழந்தைகள் படிப்பது பற்றியும் அங்கேயே வேலை தேடிக்கொண்டு மற்றும் திருமணமாகி குழந்தைகள் பெற்றுக் கொண்டு இருப்பதில் உள்ள நன்மை தீமைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன விஷயங்களில் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உண்மையாகக் தான் தோன்றுகிறது. நம் நாட்டில் வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் குறைந்த வருமானம் என்ற உண்மையான காரணங்களும் உண்டு. ஒன்றை இழந்தால் தான் மற்றவைகளை பெறமுடியும் என்கிற நிலை.

90% வெளிநாட்டில் வசிப்பவர்கள் காசுக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவுமே அங்கு செல்கிறார்களே தவிற வேறு காரணம் இல்லை. பெற்றோர்களும் இந்த மாயையில்தான் குழந்தைகளை அனுப்பி வைக்கிறார்கள். பின்பு, குழந்தைகள் நம் பக்கத்தில் இல்லையே என்று புலம்புவது அறிவீனம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதைதான்.
என்னைப் பொருத்தவரை அத்தகைய பெற்றோர்கள் பணக்கார அநாதைகள். நாளடைவில் அவர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் மேல் உண்மையான பாசம் போய் எதோ கடமைக்காக பெற்றோர்களை பராமரிக்கும் மனப்பான்மை வந்துவிடுகிறது. பணம் ஒன்றே ப்ரதானம் என்று நினைப்பவர்கள் இதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
எனக்தெரிந்த என் நன்பரின் வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு அவர்களுடைய தாத்தா பாட்டியை ஐந்து வருடங்களுக்கு பின்னால் நேர்முக அறிமுகம் செய்து வைத்தார்கள். The child is asking "Who is this old man".
குழந்தைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பது பெருமையல்ல அது நமது பலவீனம் தான் என்பதுதான் நிதர்சனமானஉண்மை.
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...