Thursday, March 23, 2023

இந்த படம் ஓட வேண்டாம்: அன்னக்கிளி சுஜாதா .

 சரித்திரம் படைத்த இந்தப் படத்தின் கதாநாயகிக்கு உச்சபட்ச புகழ்.

ஆனால், அதை கொண்டாடும் மனநிலையில் சுஜாதா இல்லாமல் போனது துரதிஷ்டம்.
படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றியபோது என் காதுக்குள் -இந்தப் படம் நல்லா போகக்கூடாது சார். போனா திரும்பத் திரும்ப என்னைப் பல படங்களுக்கு ‘புக்’ பண்ணுவாங்க.
தொடர்ந்து நான் நடிக்கணும்.
இதே சித்ரவதையை அனுபவிக்கணும்.
வேண்டாம் சார்!
இந்தப் படம் ஓட வேண்டாம்!’ என்று கண்ணீருடன் சொன்னார்.
அது மட்டுமல்ல, தமிழகமெங்கும் நடந்த தியேட்டர் ‘விசிட்’களில் அவர் கலந்துகொள்ளவே இல்லை.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று கவிஞர்கள் பாடி விட்டுப் போய் விட்டனர்.
அந்த மங்கையர்க்கு -நாட்டில், வீட்டில், கணவனிடத்தில், பெற்றவர்களிடத்தில் உரிய மரியாதை, அன்பு, அரவணைப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதா?
40 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அந்தப் படத்தின் கதாநாயகி எரிமலையின் உச்சியில் அமர்ந்திருந்தால் எப்படிப் பொங்குவாளோ,
அப்படி பொங்கி,
‘சார்! என்னோட கடந்த காலத்தை கேக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு ஒரு குருவிக்காரனோ, கிளி ஜோசியரோ சொன்னா, பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நடிப்புக்குக் கும்பிடு போட்டுட்டு போயிடுவேன் சார்.
பணம் காய்க்கும் மரமா என்னை அப்பா அம்மா பயன்படுத்தறாங்க. என் உடம்புக்கு சரியில்லாமப் போனாலும், கால்ஷீட் குடுத்திடறாங்க.
எனக்குப் பிடிக்காத கேரக்டரா இருந்தாலும் பணத்துக்காக நடிக்கச் சொல்றாங்க.
எனக்குன்னு தனி அக்கவுண்ட் பேங்க்ல கிடையாது.
மார்க்கெட் இருக்கிற வரைக்கும் என்னை சாறாப் புழிஞ்சு எடுத்திட்டு, சாகடிக்கப் போறாங்க.
என் விருப்பு, வெறுப்பு பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை.
இந்த டார்ச்சர் தாங்காம தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட பல தடவை தோணிச்சு!’ என்று சொன்னபோது, எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை
May be an image of 1 person and standing
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...