

#அடுத்த_நாள் சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா சிறிது நேரம் தானும் சும்மா இருந்து பார்க்கலாம் என்று கோவிலில் வந்து சும்மா இருக்கும் சாமியாருக்கு அருகில் அமர்ந்தார். மனம் அலைய ஆரம்பித்தது. கோவிலுக்கு சம்பந்தமில்லாத அனைத்து நினைவுகளும் வந்தது. மனம் அடங்க மறுத்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் என்று முயன்றார். சிறிது நேரத்திற்கு மேல் கண்களை முடி இருக்க முடியவில்லை தான் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் அதில் கவனத்தை செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார். மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. மகளுக்கு வரன் தேட வேண்டும். மகனுக்கு வேலை தேட வேண்டும். மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார். திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது. சுவாமிக்கு வைக்க நெய்வேத்யம் பள்ளிமடத்தில் தயாரித்து கொண்டு இருந்தார்கள். மனது அங்கு செய்கிறது. அதை நினைத்ததும் வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தார். அதிகாரி திணறி போனார். அவரின் சொல்லுக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள். உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது. அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று அது முடியாமல் சோர்ந்து போனார். சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவருக்குபுரிந்தது. உடனே மறுபடியும் பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் எழுதினார் சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு.



No comments:
Post a Comment