Sunday, March 26, 2023

சுருளி ராஜன்!

 (1)சிறுவயதிலேயே பெற்றோர்களின் இழப்பால் படிப்பை பாதியிலே கைவிட்டு மதுரையில் உள்ள தன் அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தார்.

(2)சிறு வயதில் இருந்தே நாடகம் மற்றும் சினிமாவின் மேல் இருந்த ஆர்வத்தால் நாடகத்தில் சேர ஆசைப்பட்டு .பின்னாளில் O. A. K. தேவர் ,பிசிர் ராமராவ் , T.N. பாலு ஆகியோரின் நாடக குழுவில் பணியாற்றி சிறப்பான நடிப்பை ஒவ்வொரு மேடையிலும் வெளிப்படுத்தினார்.
(3)1965 -ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த "எங்க வீடு பிள்ளை" படத்தில் "நான் ஆணையிட்டால்" என்ற பாடலில் நம்பியார் வீட்டு வேலைக்காரராக ஒரு சின்ன வேடத்தில் தோன்றியிருப்பார்.இது தான் அவர் பெரிய திரையில் தோன்றிய முதல் காட்சி.ஆனால் ரசிகர்கள் பலரும் இதை கவனித்திருக்க மாட்டார்கள்.
(4)பிறகு இதே 1965 -ஆம் ஆண்டு வெளியான "இரவும் பகலும்" என்ற படத்தில் வில்லனின் கூடவே வரும் எடுபுடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.
(5)1966 -ஆம் ஆண்டு இவர் நடித்த "காதல் படுத்தும் பாடு" என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தந்தை வேடத்தில் நடித்திருப்பார். வெறும் 27 வயதில் 60 வயது கதாபாத்திரத்தை இந்த படத்தில் நடித்து அசத்தி இருப்பார்.
(6)நகைச்சுவை ஜாம்பவான்களான நாகேஷ்,சந்திரபாபு,தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் உச்சத்தில் இருந்த சமயத்தில் கரகர குரலில் மக்கள் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முக பாவனையோடு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் நம்ம சுருளி.
(7)திரைத்துறையில் ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் பின் படி படியாக தனது நகைச்சுவை நடிப்பால் மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தார்.
(8)இவர் மக்களின் மனதில் இடம் பிடித்தமைக்கு முக்கிய காரணம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் இவர் நடித்தது தான்.
எடுத்துக்காட்டு:
திருநங்கை,கம்பௌண்டர்,மெக்கானிக்,
கழிவு அகற்றும் தொழிலாளி,பாம்பாட்டி போன்ற பல கதாபாத்திரங்கள்.
(9)இவர் நடிப்பை பார்த்து அசந்துபோன இயக்குனர் A.V நாகராஜன் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் சுருளிக்கு வாய்ப்பளித்தார்.
(10)1980-ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த "முரட்டு காளை" படத்தில் இவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.வில்லன் கூடவே இருந்து கொண்டு அவனுக்கு குழி பறிக்கும் வேலையையும் இன்னொரு பக்கம் நாயகனை தூண்டி விட்டு மோத விடுவதுமான ஒரு நயவஞ்சகமான கதாபாத்திரம் அது.இந்த படம் ரஜினிக்கு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.
(11)1970 -80 -களில் வெளிவந்த முக்கால்வாசி சூப்பர் ஸ்டாரின் படங்களில் இவர் கண்டிப்பாக இருப்பார்.அந்தளவுக்கு ரஜினியின் மனம் கவர்ந்த ஆஸ்தான தோழனாக இருந்தவர்.இவர்கள் சேர்ந்து நடித்த படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை,தாய் மீது சத்தியம்,பொல்லாதவன்,நான் போட்ட சவால்,ஜானி போன்றவைகளாகும்.
(12)திரைத்துறையில் 15 ஆண்டுகாலம் பணியாற்றி அதிகமான படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தமிழ் திரைத்துறையில் முன்னேறி உச்சத்துக்கு வந்தார்.1980 -களில் இவரில்லாமல் எந்த படங்களும் இல்லை.
(13)கிட்டத்தட்ட 19 மணிநேரம் உழைத்தார்.உடல் நலத்தில் அக்கறை காட்டாமல் சரியான ஓய்வின்றி இரவு பகல் பாராது உடலை வருத்தி நடித்தார். திரையுலகில் மிக பெரிய உச்ச நடிகராக இருந்த சமயத்தில் 1980 -ல் உயிரிழந்தார்.அந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 50 -கும் மேற்பட்ட படங்கள் வெளியானது.
(14)இவர் நடித்து கொடுத்த படங்கள் கிட்டத்தட்ட 1984-ஆம் வருடம் வரை வரிசையாக வெளியானது.தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது கூட சில வருடங்களுக்கு பிறகு இவரின் சார்பாக இவரது மகன் பெற்று கொண்டார்.
(15)இவரின் பல கதாபாத்திரங்களை தழுவி தான் அதன் பிறகு கவுண்டமணி,செந்தில்,வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி நடித்து மக்களை சிரிக்க வைத்தனர்.இது சினிமாதுறையில் உள்ள பலருக்கும் தெரியும்.
(16) மாந்தோப்புக்கிளியே படத்தில் அவருடைய கஞ்சத்தனத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய நடிப்பு அமைந்திருந்தது..
சுருளி ராஜன் என்ற நகைச்சுவை சூறாவளியின் இறப்பு அவரின் உடலுக்கு மட்டும் தான் இவர் என்றென்றும் தன் படங்களினால் நம் உள்ளத்தில் நிறைந்திருப்பார் என்பதே ஒப்பற்ற உண்மை.
நன்றி:கூகிள்(படங்கள்)
நன்றி:Suruli Rajan - Wikipedia
May be an image of 2 people and people standing
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...