கருணாநிதியின் "தமிழர்களே, தமிழர்களே கட்டுமர வசனத்தை" மட்டும் அவரின் குடும்பத் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்டதால் நம் அனைவரும் கண்டும், கேட்டும் உள்ளோம்.
அதனால்தான் அவரை நாம் அனைவரும் "கட்டுமரம்" என்று அன்பின் மிகுதியால் அழைத்தோம்.
அதோடு இன்னும் சிலவற்றை அப்போது சேர்த்தே பேசினார் கருணாநிதி.
எனவே உங்கள் அன்பு இன்னும் மிகுதியாகி "அடுப்பு விறகு, சிதறு தேங்காய், வீட்டுநாய்" என்று இன்னும் பலவாறு உங்கள் உள்ளத்தில் தோன்றும் செல்லப் பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பதே என் பேரவா.
_____________
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தால் நான் கட்டுமரமாவேன்! அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்.
நீங்கள் என்னை நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக மாறி அடுப்பெறிக்க பயன்படுவேன்! நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம்.
நீங்கள் என்னை பாறையிலே மோதினால் வெறும் கல்லைப் போல பொடியாகிவிடமாட்டேன்! தேங்காய் சிதறுவதைப் போல சிதறி உங்களுக்கு திண்பண்டமாக மாறுவேன்.
என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.
எத்தனை தோல்விகள் தந்தாலும் நான் உங்கள் வீட்டு நாய். தெருநாயாக இருந்தால் துரத்தினால் ஓடிவிடும். நான் வீட்டு நாய் நீங்கள் எத்தனை முறை அடித்துத் துரத்தினாலும் வீட்டையே சுற்றிக் கொண்டிருப்பேன்.
-1980ல் சீரணி அரங்கில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கருணாநிதி பேசியது.

No comments:
Post a Comment