Sunday, June 11, 2023

கலைஞர் வைர விழா பற்றி ...

 சோ சார் அவர்கள் இன்று துக்ளக் ஆண்டு விழா நடத்தினால் வாசகர் கேள்வி பதில்களுக்கு எப்படி பதிலளித்திருப்பர் என ஒரு கற்பனை ...

(அவர் பேசுவது போலவே படிக்கவும் )
வாசகர் கேள்வி - சார், இன்றைய மத்திய அரசு தொடர்ந்து கடினமான நடவடிக்கையை எடுக்குதே..ஏன் மக்களுக்கு சலுகைகள் லாம் கொடுக்க கூடாது ?
சோ சார் - (ம்ம்ம்ஹும் )சாகப்போற நிலைமைல ஒருத்தன ஹாஸ்பிடல் கொண்டு வராங்க ...டாக்டர் தொடர்ந்து ட்ரிப்ஸ் லாம் ஏத்தி, நிறைய கசப்பு மருந்து ,மாத்திரை கொடுத்து , இன்ஜெக்ஷன் லாம் போட்டுகிட்டு இருக்கிறப்போ ..
ஏன் டாக்டர் ,கொஞ்சம் கூட உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா ..இப்படி அவனை சித்திரவதை பண்றிங்களே ..
அவனுக்கு ஸ்வீட் குடுக்கணும் ,பிரியாணி கொடுக்கணும்னு கொஞ்சமாவது தோணுதானு கேட்பிங்களா ?.(பலத்த சிரிப்பொலி ).அப்படி தான் இதுவும் ...
நாம நாடு காங்கிரஸ்யின் பத்து வருட ஆட்சில ரொம்ப கெட்டு கிடந்தது .உசிர் ஒண்ணுதான் போகல(சிரிப்பொலி) ...அதனால இந்த நடவடிக்கைகள் தேவைன்னு தான் சொல்லுவேன் ...(பலத்த கைதட்டல்)
\
வாசகர் - இன்றைய நவீன சாணக்கியரே,வணக்கம் (சிரிப்பொலி)
சோ சார் குறுக்கிட்டு - என்ன சார் சிரிப்பு ..கலைஞர் பங்ஷன்ல அவரை வச்சுக்கிட்டே எத்தனை பட்டம் குடுப்பாங்க..அங்கெல்லாம் யாராவது சிரிப்பாங்களா..என்ன பண்றது ..ஏன் ஜாதகம் அப்படி (சிரிப்பொலி)
(வாசகரை பார்த்து )
அவ்ளோதானா ...மகாபாரத விளக்கம் எழுதுறதால ..நவீன வியாசரே,இந்தியாவின் சாக்ரடீஸே , இப்படி எதாவது சொல்லிட்டே போக வேண்டியதுதானே ..காசா..பணமா ..(கூட்டத்தை பார்த்து )
இவர் நினைக்கிறார் , எதோ போனாப்போவுது னு ஒரு பட்டம் குடுத்தா...இன்னும் வேணுமாம்ல (சிரிப்பொலி)
சாணக்கியர் பத்தி பேச்சு வந்ததால் ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறன் ...எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு ஆட்சி எப்படி நடக்கணும் , என்ன குற்றங்களும் நடக்கும், அதற்கு என்ன தண்டனை குடுக்கணும் , எப்படி வரி வசூல் செய்யணும் , இப்படி எல்லாத்தையும் ரொம்ப தெளிவா ஒருத்தர் சொல்றர்னா ...நம்ம நாடு எப்பேர்ப்பட்ட ஞானவான்கள் நிறைந்த நாடு ..(கைதட்டல்)
அதெல்லாம் ஞானமில்லன்னு எப்போ நினைக்க ஆரம்பிச்சமோ ,அப்போ ஆரம்பிச்சது நம்முடைய ஞானத்தின் வீழ்ச்சி ...சரி ..நீங்க கேள்வி கேளுங்க ...
வாசகர் -வோட்டிங் மெஷின் பாஜக விருப்பப்படி மாற்றப்பட்டதுனு குற்றசாட்டை பத்தி ...?
சோ சார் -
எதிர்க்கட்சி ஜெயிச்சா மெஷின் கரெக்ட் ...பாஜக ஜெயிச்சா மெஷின் பால்ட்..வீட்டுல சின்னப்பசங்க எக்ஸாம்ல குறைய மார்க் எடுத்தா..வாத்தியார் சரியாவே நடத்தலை, கொஸ்டின் கஷ்டமா இருந்துச்சுனு லாம் சொல்வாங்களே அது மாதிரி இருக்கு..(சிரிப்பொலி)
சார் , சிஸ்டம் மேல நம்பிக்கை வைக்கணும் ..எல்லாத்தையும் சந்தேக படுவேன், எதிர்ப்பேன் னு சொன்னா..முடிவே கிடைக்காது ...
ஆனா,தேர்தல் கமிஷனும் வரியா ஒண்டிக்கு ஒண்டினு சவால் விட்டுச்சு..கெஜ்ரிவால் போகாமேட்டேங்கிறார் ..அவர் சொல்றார், நானே ஒரு மெஷின் கொண்டுவருவேன்(சிரிப்பொலி) , அத எப்படி ஹேக் பண்ணமுடியும்னு காட்டுவேன்னு ,
இனிமே ஸ்டூடெண்ட்ஸ்லாம் சொல்லுவான், நானே கொஸ்டின் பேப்பர் கொண்டு வந்து நானே பரீட்சை எழுதிப்பேன், கவர்மெண்ட் மேலலாம் எனக்கு நம்பிக்கை இல்லனு (சிரிப்பொலி).
காமராஜ் தோத்து போன சமயம் , அவர் கட்சி காரங்களாம் சொன்னாங்க, மை சரியில்லை, கள்ள வோட்டு நிறைய விழுந்துச்சுனு ,ஆனா காமராஜ் தோல்வியை ஏத்துக்கிறேன்னு சொன்னார்.
அவர் தான் லீடர்.எந்த சூழ்நிலையிலும் ஒரு தலைவர் எப்படி இருக்கணும்னு அவர் தான் ஒரு எக்ஸாம்பிள். (கைதட்டல்)
வாசகர் கேள்வி- அரசியலில் சொதப்புவது எப்படி ?
சோ சார் -என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது ?ராகுல் காந்தி மாதிரி தெரியுதா ?அவர்ட்ட கேட்க வேண்டிய கேள்வியை என்கிட்டே கேக்குறீங்க ...(சிரிப்பொலி)
இந்த ஒரு கேள்விக்கு தான் அவரால ரொம்ப தெளிவா பதில் சொல்ல முடியும்.அதையும் நான் கெடுக்கணுமா...அந்த பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன் சார் (சிரிப்பொலி)
(கூட்டத்திலுருந்து குரல் ) அவர் என்ன பண்ணினாபெரிய ஆளாக முடியும் ?
சோ சார் - அரசியலை தவிர என்ன பண்ணினாலும் பெரிய ஆளாக முடியும் (பலத்த கைதட்டல்)
வாசகர் - கலைஞர் வைர விழா பற்றி ...
சோ சார் - அதுக்குள்ள அறுவது வருசம் ஆயிடுச்சா, காமெடி படம் பார்த்தா நேரம் போனதே தெரியாதுல (சிரிப்பு ,கைதட்டல்)
அதுமாதிரி அறுவது வருஷம் ஆனா மாதிரி ஏ தெரியல ...
இதுல தமிழக பாஜக பண்ற காமெடி ...எங்களை கூப்பிடுங்கணு இவங்க சொல்ல ...ஸ்டாலினுக்கு அப்பதான் ஞாபகமே வந்துச்சு , மதவாத கட்சிலாம் கூப்பிட மாட்டோம்னு சொல்ல..
(கைதட்டல்)..
Jokes apart..கலைஞர் மாதிரி ஒரு சிறந்த உழைப்பாளியை நான் பார்த்ததில்லை ஒரு வருடம் முன்பு வரையிலும்.. இந்த வயசுல , என்ன ஞாபக சக்தி , என்ன படிப்பு,அரசியலை கொண்டு செல்லும் விதம் , இப்ப அவர் ஹெல்த்தி யா இருந்தா,இன்னேரம் முதல்வராக கூட ஆகிருப்பார்...(சிறு கைதட்டல்)அவர் நலமடையணும்னு வேண்டிக்கிறேன்..
அப்புறம் இவர்,(பேர் என்ன சார் ),ம் .. ஹரிச்சந்திரா ..என் பேச்சு மாதிரியே எழுத முயற்சி செஞ்சுருக்கார் ..புடிச்சுருந்தா லைக் பண்ணுங்க , புடிக்காட்டியும் லைக் பண்ணுங்க ..நன்றி.. வணக்கம்.
May be an image of 2 people
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...