Tuesday, June 13, 2023

உண்மைதான். அன்புடன் வாழ்வதே அறவாழ்க்கை.

👇👇👇👇👇👇
என் வீட்டின் எதிரே ஒரு குட்டிக் காளியம்மன் கோவில் உள்ளது.. மாலை 5 மணியிருக்கும் ..
ஒரு நடுத்தர வயது மனிதர் கரங்களைத் கூப்பிஅந்த காளியம்மனை வணங்கியபடி இருந்தவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார்..
விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை ..காரணம் மாஸிவ் அட்டாக்..என்ன கொடுமை இது??
கோவிலுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்த மனிதர் ஒரு நொடியில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தந்தனர்..
அதற்குள் அவரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது..ஆனால் அவர் உயிர் பிரிந்து விட்டது என்பதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கதறிய கதறல்..
அப்பப்பா ..இதுதான் நிரந்தரமற்ற வாழ்க்கை..ஒரு நேரம் அவரின் அந்த மறைவு சரியாக அம்மனின் முன்னிலையில் நடந்ததை நினைத்து இந்த உலகில் கஷ்டப்படாமல் சென்று விட்டாரே என்று இருந்தாலும் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் பிணமாக திரும்பும் போது அந்த குடும்பத்தினருக்கு எத்தனை வேதனையாக இருக்கும் ?..
அதை நினைக்கும் போது மனது கஷ்டமாக இருக்கிறது ..
இந்த நிகழ்வு சொன்னது இதுதான்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
இப்படிப்பட்ட நொடியில் முடியும் வாழ்க்கைக்காகவா நாம் அடித்துக் கொள்கிறோம் ...
ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்கிறோம் ..
ஈகோவினால் ஒருவரை ஒருவர் சாடுகிறோம் ...
நினைத்து பாருங்கள் ...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒரு நொடியில் முடியும் இந்த உயிர் பிரிதலை நினைவில் வைத்தால் ஒவ்வொரு நொடியையும் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும். ..
அட்லீஸ்ட் அடுத்தவரை நோகடிக்காத குணத்தையாவது தரும் என்பதே உண்மை ....எண்ணிப் பார்ப்போமா..??? 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...