கைதாவாரா...?
சென்னை செந்தில் பாலாஜி வீடு முன்பு திடீரென குவிக்கப்பட்ட அதிவிரைவுப்படை.. அமலாக்கத்துறை ஆக்சன்? பரபரப்பு...
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு மத்திய அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டு உள்ளது. திடீரென அதிவிரைவுப்படை அங்கே குவிக்கப்பட்டு இருப்பதால் கடும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது....
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஒரு மனுதாரராக இருந்தது. அதில் போக்குவரத்து முறைகேட்டில் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
அதுமட்டும் நடந்திட கூடாது! போனை போட்டு எச்சரித்த ஸ்டாலின்.. சுதாரித்த செந்தில் பாலாஜி! கவனிச்சீங்களா
ரெய்டு: இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது.
அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து கொண்டு இருக்கின்றன
கைதாகிறாரா? : இந்த நிலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு மத்திய அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டு உள்ளது. திடீரென அதிவிரைவுப்படை அங்கே குவிக்கப்பட்டு இருப்பதால் கடும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த முறை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கடைசி நேரத்தில் வந்து ரெய்டு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இந்த நிலையில் இந்த முறை முன்கூட்டியே திட்டமிட்டு.. போலீசுக்கு தெரிவிக்காமல் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறை போல இப்போது நடக்க கூடாது என்பதால் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போது துணை ராணுவ படையுடன் சேர்த்து மத்திய அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன் 20 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். திடீரென அதிவிரைவுப்படை அங்கே குவிக்கப்பட்டு இருப்பதால் அவர் எங்கே கைது செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை பொதுவாக வழக்குகளில் கைது செய்யும் அதிகாரம் கொண்டது என்பதால் இன்றே கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....

No comments:
Post a Comment