Tuesday, June 13, 2023

இதிலென்ன தவறு?-

 OPS, EPS விவகாரத்தைப் பொருத்தவரை எடப்பாடியின் தேவையற்ற, தகுதியற்ற ஈகோவே அக்கட்சியை இன்று அழித்துவருகிறது என்று ஆணித்தரமாகக் கூறுவேன்-

ஜெயலலிதாவால் இரண்டு முறை நம்பிக்கையாக முதல்வராக்கப்பட்டவர் OPS அதிலும் இரண்டு முறையும் பதவியேற்கும் பொழுதும் அழுதுகொண்டும், இரண்டுமுறை ராஜினாமா செய்தபொழுது சிரித்துக்கொண்டும் இருந்த விசித்திர மனிதர் அவர்_
அவர் தன்னைத் தேர்ந்தெடுத்த ஜெயலலிதாவிற்கும், சசிக்கலாவிற்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்தவர்தான், நாமெல்லாம் நினைப்பதுபோல ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மமேதும் இல்லை என்பதும், சர்க்கரை காரணமாக ஏற்கனவே கால்விரல்களை இழந்திருந்த ஜெயலலிதா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது கால்களையும் இழந்துவிட்டார் என்பதும், எத்தனையோ ஆண்களை காலில் விழவைத்து ரசித்த ஜெயலலிதாவால் கால்களை இழந்தபிறகு வெளியில்வரப் பிடிக்கவில்லை என்பதும், அதன் காரணமாகவே மனமுடைந்து வியாதி குனமாகாமல் இறந்துவிட்டார் என்பதும் அதிமுக மேல்மட்டத்திலிருந்து எனக்குக்கிடைத்த நம்பகமான தகவல்கள் -
ஆனால் பாபம் ஒருபக்கம் பழி ஒருபக்கம் என்பதுபோல இருவரும் சேர்ந்து செய்த தவறுகளுக்கு சசியை மட்டுமே இந்த அடிமைகள் குற்றம்சாட்டி வருகின்றன, நடந்த தவறுகள் சேர்த்த சொத்துக்கள் பற்றியெல்லாம் ஜெயலலிதாவிற்குத் தெரியவே தெரியாது என்றால் இத்தனை வருடங்கள் ஆட்சி செய்தது யார் ஜெ- வ இல்லை வேலைக்காரியா என்றால் எவருக்கும் தெரியாது, ஆனால், எனக்குத் தெரிந்தவரையில் கூட்டணிப்பேச்சுவார்த்தை முதல், தொகுதிப்பங்கீடுவரை, வேட்பாளர் தேர்வுவரை கையில் வைத்திருந்தவர் சசிக்கலா, ஏற்கனவே சரத்குமார் கட்சியின் வடசென்னை மாவட்டத்தலைவர் ஒருவர் என்னுடன் பகிர்ந்திருந்த அந்த அசிங்கமான பதிவை அன்றே நீக்சியவன் என்ற முறையில் இவர்கள் செய்துவந்ததெல்லாம் சாதாரண மனிதர்கள் செய்ய அஞ்சும் கேவலங்கள் -
அந்தவகையில் ஜெ - இறந்த அன்று பண்ணீரைப் பதவியேற்கச் சொன்னவர் சசிக்கலா, சத்தமேயில்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள் அன்றைய எடப்பாடி உள்ளிட்ட MLA க்கள் -
அதன்பிறகு உண்மையிலேயே அ.தி.மு.கவின் தலைமையைக் கைப்பற்ற சசிகலா ஆசைப்பட்டிருந்தால் அவர் ஒரு ஆறு மாதங்களாவது பொருமையாக இருந்திருக்கலாம், ஆனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று OPS- சை மிரட்டிக் கையெழுத்து வாங்சியதுமில்லாமல், கைவேறு வைத்துள்ளார்கள் -
இதுதான் சசியின் மீது சனிபகவானின் பார்வை திரும்பக் காரணமாயிற்று-
அதற்குப்பிறகு நடந்தவை, கூவத்தூர் கேவலளங்களெல்லாம் நம் அனைவருக்கும் தெரியும், அன்று நடந்த யுக்தத்தில் சசியின் பின் நின்ற பெரும்பாலான MLAக்கள் அவர் என்ன சொன்னாலும் ஏற்கத்தயாராக இருந்தார்கள், இந்த நிலையில்தான் இருக்கும் அடிமைகளிலேயே சிறந்த அடிமையாகத் தான் நம்பிய எடப்பாடியை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார், அந்த எடப்பாடியும் தவழ்ந்தபாடியாக மாறி டேபிளுக்குக் கீழே தவழ்ந்து சென்று வேலைக்காரியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று முதல்வரானார் -
பிறகு வேகமாகக் காட்சிகள் மாறின தவழ்ந்தபாடியைப் புகழ்ந்து தள்ள புது அடிமைகள் உருவானார்கள், ops, Eps, இருவரையும் சமரசம் செய்துவைத்து நாண்காண்டுகால ஆட்சியைத் தொடற வைத்தார் மோடி-
அன்று, கட்சிக்காக ஏற்கனவே மூன்றுமுறை ஆட்சித் தலைமை வகித்த அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட OPS, சமரசத்திற்கு வந்து எடப்பாடியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டார், தான் கட்சியின் உயர்ந்த பதவியான தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியுடன் திருப்தி அடைந்தார்-
அதற்குப்பிறகும், சென்ற சட்டமன்றத் தேர்தலில் கூட சசி செய்த துரோகத்தையும் மறந்து, அவரைக் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்று அவர் கூறியதுகூட தி.மு.கவைத் தடுக்கத்தான், இதே கருத்தைத்தான் அமித்ஷாவும் கூறினார், ஆனால், எடப்பாடி ஏற்கவில்லை அதனால்தான் முக்கியமாக ஆட்சி அதிகாரத்தை இன்று தி.மு.கவிடம் பறிகொடுக்க நேர்ந்தது இதுதான் உண்மை -
இந்த நிலையில், ஏற்கனவே மனமுவந்து ஏற்றுக்கொண்ட இரட்டைத் தலைமை விவகாரத்தில் தேவையேயில்லாமல் குள்ளநரி போல அரசியல் செய்தவர் எடப்பாடிதான்-
இப்பொழுதும்கூட OPS தன்னை தலைமையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கவேயில்லை, இரட்டைத்தலைமையே நீடிக்கட்டும் என்றுதானே கேட்கிறார்? இதிலென்ன தவறு?-
வாஜ்பாய் - அத்வானி என்ற இரட்டைத் தலைமையும், மோடி-அமித்ஷா என்ற இரட்டைத் தலைமைகளும் இன்று இந்தியாவையே வெல்லவில்லையா?-
ஆனால், எடப்பாடி என்ற நரித்தந்திர மனிதனால் அ.தி.மு.க இரண்டாக உடைந்து ஆட்சியே பறிபோய்விட்டது, அடுத்து மூன்றாய்ப் பிரிந்தால் சல்லிக்காசுக்குப் பிரயோஜனப்படாது-
ஏனென்றால் MGR வகுத்த அ.தி.மு.க பைலாபடி 80% தொண்டர்கள் சேர்ந்து வாக்களிப்பவர்தான் கட்சியின் பொதுசசெயலாளராக முடியும் -
இன்றைய சூழ்நிலையில் எடப்பாடியால் 90% நிர்வாகிகளை மட்டுமே விலைக்கு வாங்க முடியும், தொண்டர்கள் பலம் இருவருக்கும் சரிசமமாகவே இருக்கும்-
இந்தப் போர் இன்னும் சிலவருடங்கள் நீடிக்கும் -
இறுதியில் பா.ஜ.கவே வெல்லும் -
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...