Thursday, June 15, 2023

(உண்மையிலேயே) கடுமையான நெஞ்சு வலி வரும் போது, என்ன நடக்கும்?

 

1. மூச்சுத் திணறல் ஏற்படும்.

2. கண்களில் நீர் வடியும்.

3. இரண்டு கைகளாலும் மார்பைப் பிடித்துக் கொள்வார்; பிசைந்து கொள்வார்.

4. தாகம் எடுக்கும்.

5. நோயாளி, தன் அன்புக்குரியவர்களை உதவிக்கு அழைப்பார்.

6. பேச்சு வராது அல்லது பேச்சு குளறும். விட்டு, விட்டு வார்த்தைகள் வருவதால், நோயாளி பேசுவது முழுவதும் புரியாது.

7. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரையை நோயாளி தேடுவார். அல்லது அருகில் இருக்கும் யாரையாவது எடுத்துத் தரச் சொல்லிச் சைகையில் கேட்பார்.

8. கண்களை மூடிக் கொள்ள மாட்டார்.

9. கீழே விழுந்து, அழுது புரள மாட்டார். கூக்குரல் இட மாட்டார்.

10. கண்களிலும், மனத்திலும் மரண பயம் தொற்றிக் கொள்ளும்.

11. 'யாராவது, எப்பாடு பட்டாவது, நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா?' என்னும் ஏக்கம் உண்டாகும்.

12. 'எவ்வளவோ பாடுபட்டு, துன்பத்துக்கும், அவமானத்துக்கும் ஆளாகிச் சேர்த்தவற்றை முழுவதுமாக அனுபவிக்காமல் போகிறோமே?' என்கிற ஆற்றாமை பொங்கும்.

13. நிறைவேற்ற முடியாமல் போன கனவுகளும், ஆசைகளும் நெஞ்சை வாட்டும்.

14. தன் வாழ்க்கையில் செய்த பெரிய தவறுகளும், மன்னிக்க முடியாத பாவங்களும், பிறருக்குச் செய்த துரோகங்களும், நண்பர்களாக இருந்தவருடன் அற்பக் காரணத்துக்காகக் கொண்ட விரோதமும் வரிசையாக ஒவ்வொன்றாய் நினைவுக்கு வரும்.

15. 'பிழைத்துக் கொண்டால், எல்லாவற்றுக்கும் பிராயச்சித்தம் செய்து விட வேண்டும்' என்கிற தீர்மானம் எழும்.

16. 'ஒரு வேளை தான் இறக்க நேர்ந்தால், யார் என்ன ஆவார்கள்?' என்ற கவலை எழும்.

17. 'தான் மரணம் அடைந்தால், யார், யார் தன்னுடலைக் காண வருவார்கள் என்றும், யார், யார் அந்த நேரத்தில் தன் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பார்கள்?' என்றெல்லாம் அந்த நேரத்தில் நினைக்கத் தோன்றும்.

18. 'உயில் எழுதி வைக்க மறந்து விட்டோமே?' என்கிற கவலை உள்ளூர வந்து போகும்.

19. கடவுள் மேல் இதுவரை இல்லாத அளவுக்கு நம்பிக்கை உண்டாகும். தன் ஆயுளை நீடிக்க உள்ளுக்குள் பிரார்த்திப்பார். மேலும், செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்கிறேன் என்று இறைவனிடம் ஒத்துக் கொள்வார்.

20. நோயாளி, தான் இதுவரை வெளியில் சொல்லாத ரகசியங்களை உடன் இருப்பவருடன் பகிர்ந்து கொள்ளத் துடிப்பார்.

21. இவ்வளவும், கடும் நெஞ்சு வலியால் துடிக்கின்ற அந்த 2 முதல் 5 நிமிடங்களில் விரைவாக நடக்கும்.

22. அந்த நிமிடங்கள் தான் அதி முக்கியமானவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...