Thursday, June 30, 2016

அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை ...

கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரிந்திருக்கும்.. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே..
சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.
அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :
1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)
2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)
3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.
4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.
5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.
மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் ,
ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்.
இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

படித்ததில் மனம் நெகிழ்தது!


ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு
வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும்
ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம். நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார். அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், "உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், "அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்... இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் சடங்கில் இருந்தார். உங்கள் மகனுக்காக
அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன் அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.
நீதி: எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது, அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை... மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை...

சிவனைப் பற்றி அப்துல் கலாம்:-




இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?!
அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார்.
விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார்.
அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

கற்பழிப்புக்கு தண்டனை :


1.UAE-
ஏழு நாள்களில் தூக்கு தண்டனை
2.ஈரான்-
கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை..
3.ஆப்கானிஸ்தான்-
நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்..
4.சீனா-
மருத்தவ சோதனையில்நிரூபணமாகி விட்டால் உடன் மரணம்
5.மலேசியா-
மரணதண்டனை
6.மங்கோலியா-
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார்களால் தண்டனை
7.ஈராக்-
கல்லால் அடித்து கொலை
8.தாலிபான்-
உடலை வெட்டி எடுத்து மரணம்.
9.போலந்து-
கொன்று பன்றிக்கு உணவாகபோடப்படும்
10. ‪#‎INDIA‬ ‪#‎SRILANKA‬
உடனே ஜாமின்,
அரசியல், பணபலம், இருந்தால்,
முட்டாள்தனமான நீதித்துறை,
மற்றும் அரசு இயந்திரம் அனைத்தும் கற்பழித்தவனுக்கு ஆதரவாகஇருக்கும்....
பகிருங்கள்.... பரவட்டும்!!!

ஏன்... இப்படியிருந்தால் என்ன ?’



காதல் திருமணங்களில் மிகுதியாய்ச் சண்டை சச்சரவுகள் தோன்றுவதும், பெரியோர் பார்த்துச் செய்து வைத்த திருமணங்களில் ஒப்பீட்டளவில் முரண்கள் குறைவாக இருப்பதும் உண்மை.
அவ்வளவு தூரம் கனவு கண்டு, துரத்திக் காதலித்து, திருமணமும் செய்துகொண்ட காதலர்கள் தம் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்த பின்னும் ஏன் முட்டிக்கொள்கிறார்கள் ?
முன்பின் அறியா நிலையில் திருமணத்தின் வழியாக ஒன்றிணைந்தவர்கள் எவ்வாறு பொருந்திப் போகிறார்கள் ? இதற்கு உளவியல் காரணம் ஒன்றைக் கருதலாம்.
காதலிப்பவர்கள் தத்தம் விருப்பப்படி வாழ்வதில் முனைப்புள்ளவர்கள். அந்த முனைப்பின் தூண்டுதலால்தான் காதலில் குதித்தார்கள். தமக்குத் தோன்றிவிட்டால் அதை நிறைவேற்றிக்கொள்வதில் தடை தகர்க்கத் தயங்கமாட்டார்கள். அந்தத் தயக்கமின்மைதான் தம் காதலைத் தெரிவித்து நிறைவேற்றிக்கொள்வதற்கும் நகர்த்தியது.
‘இதுதான் இப்படித்தான்’ என்றிருந்தால் ‘ஏன்... இப்படியிருந்தால் என்ன ?’ என்று எதிர்க்கும் குணமுடையவர்கள். சமூக விதி இதுதான் என்று சொன்னால் விதியுடைக்கும் மதியுடையவர்கள். ‘நான் என் விருப்பப்படிதான் இருப்பேன்’ என்பதில் குறியாய் இருப்பவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால், காதலிப்பவர்கள் சமூகத்தின் இளநிலைக் கலகக்காரர்கள். அதனால்தான் அவர்கள் காதலில் துணிந்திறங்கினர். உறவுகளைப் பகைத்தேனும் தம் காதலை நிறைவேற்றிக்கொண்டனர்.
இந்த மனநிலையை அப்படியே குடும்ப வாழ்க்கைக்குள் பொருத்திப் பாருங்கள். இதே தன்முனைப்பு, இதே தயக்கமின்மை, இதே கலகமனம் இல்வாழ்வின் முரண்களையும் எதிர்கொள்கின்றன. அங்கே அவர்களுக்குள் முரண் முற்றி தன்வெறியாடலாகி அடிதடியும் பேச்சும் வலுத்துவிடுகின்றன.
திருமண வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க விட்டுக்கொடுப்பதால் நகர்த்த வேண்டிய ஒன்று. காதலின்போது செயல்பட்ட அதே புரட்சி மனப்பாங்கு இங்கே செல்லுபடி ஆவதில்லை.
இதற்கு நேர்மாறாக, ஏற்பாட்டுத் திருமணங்களில் இணைந்தவர்கள் இயன்ற வழியொற்றி வாழ்வதை விரும்புபவர்கள். இதன் எல்லை இதுதான் என்கின்ற நடைமுறை விளங்கியவர்கள். இவற்றோடு உறவுகளின் வலிமையான பக்கத்துணையும் சேர்வதால் இன்னும் இயல்பாகிவிடுகிறார்கள். எதுவாயினும் ஏற்று வாழ்கின்றனர்.
பொதுமைப்படுத்த முடியாதுதான். பெரும்பான்மையான காதல் திருமண முரண்களையும், ஏற்பாட்டுத் திருமண நலன்களையும் தீர்மானிக்கும் காரணங்கள் இவை என்று கருதலாம்.

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........
(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.
(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).
(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை, கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.........(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது. ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.
இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது......... உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன. ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது...... அன்புக்கு விலை இல்லை.....மற்ற தளங்களில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்.......
எப்போதும் உதவுங்கள்.....

Wednesday, June 29, 2016

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!


பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிறது!

பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி,
மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.
நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.
எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,
" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.
தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "
என்னை உற்று நோக்கியவராக,
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


ராகி என்னும் கேழ்வரகைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த ராகி பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஏனெனில் ராகியானது அவ்வளவு சுவையாக இருக்காது. அதிலும் ராகி உருண்டையை சாப்பிட வேண்டுமானால், கடித்து சாப்பிட முடியாது, மாறாக அதனை அப்படியே விழுங்க வேண்டும். இதனால் ராகி உருண்டையை சாப்பிட பலர் தவிர்ப்பார்கள். ஆனால் இந்த ராகி உருண்டையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
அதிலும் இதில் கால்சியம் இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த ராகி உருண்டையானது கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலின் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.
இங்கு ராகி உருண்டையை அதிகம் உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
எடையை குறைக்க உதவும்
தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், தினமும் காலையில் ராகி உருண்டையை சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளான ட்ரிப்டோஃபன், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.
எலும்புகளுக்கு நல்லது
ராகி உருண்டையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை உட்கொண்டால், எலும்புகள் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு...
நீரிழிவு நோய் இருக்கிறதா? அப்படியானால் அத்தகையவர்களுக்கு ராகி உருண்டை மிகவும் நல்லது. ஏனெனில் இது நீரிழிவு நோய் முற்றுவதை தடுத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்
ராகியில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் அமினோ ஆசிட்டுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.
இரத்த சோகை
ராகியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.
ரிலாக்ஸ் அடைய செய்யும்
ராகி உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் தன்மை கொண்டது. எனவே வேலைப்பளு அதிகம் நிறைந்தவர்கள், இதனை உட்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும்
கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
வலிமைக்கு...
உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இதில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
மலச்சிக்கலைத் தடுக்கும்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், ராகி உருண்டையை தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தைராய்டு
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், ராகி உருண்டையை உட்கொள்வது நல்லது.
புதிய தாய்மார்களுக்கு...
புதிய தாய்மார்களின் உடலில் சிவப்பணுக்களின் அளவை அதிரிக்கவும், பால் சுரப்பின் அளவை அதிகரிக்கவும், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும்

Venkatesan Venkatesan's photo.

மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.
இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..
சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

Tuesday, June 28, 2016

" காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

😡😡😡😭😭😭😭😭😭
லட்ச, லட்சமாக "WhatsApp company " காரன் எப்படிப்பா தருவdான்"...?
"எப்பையாவது நீங்க இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துகாரன் கிட்ட போய் கேட்டு இருக்கிருக்கிறேர்களா".?
"இதை பதிவு செய்த உனக்கு Net data Balance ல இருந்து 50Kb செலவாகும்.
"இதை Download செய்து பார்க்கும் , கேட்க்கும் எனக்கு Net Card balance லிருந்து
50 KB செலவாகும்.
" ஆக இந்த "குரூப்" ல் இருக்கும் மொத்த (100) பேரும் பார்க்கும் போது கூட்டி கழிச்சி (100 X 50 Kb = 5000 Kb ÷ 1000 = 5 GB ) பார்த்தா 5 GB (1GB ₹192 X 5 = ₹960) என்று சுமார் ₹1000/- ரூபாய் செலவாகும்.
"ஆக மொத்தம் ரூபாய் ₹1000/- த்தில் 20 ℅ (₹200/- ரூபாய்) இந்திய அரசாங்கத்திற்க்கும் ...
" Net Card விற்க்கும் கடை காரனுக்கு 5℅ (₹50/- ரூபாய்) Commission போக .......
"மீதி (₹750/- ரூபாய்) "Sim Card owner" க்கு தான் போகும்.
"இப்படித்தான் Accident ல ‪#‎கண்ணு‬ போச்சி,
‪#‎காலு‬ போச்சு,
‪#‎காது‬ போச்சு,
#"குழந்தைக்கு இருதயத்தில ஓட்டை விழுந்திருச்சி,
#"குழந்தை வயிற்றில் கத்தி போயிருச்சி,
#"தொன்டைக்குள்ளே தொடப்ப கட்டை போயிருச்சின்னு,
"இப்படி புதுசு, புதுசா எதையாவது எழுதி, பேசி இது மாதிரி "குரூப்" களுக்கு அனுப்புவாங்க.
"இது மாதிரி சோகமாக பேசி இதை நீங்கள் குறைந்தது 10 Group's க்கு அனுப்பு என்பான்.
"ஆக ஒரு " குரூப்" ல் 100 பேருக்கு அனுப்பும் போது "Sim Card Company" காரனுக்கு சுமார்
₹ 750/- ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
"இதுபோல்
01 X 10= 10/-
10 X 10= 100/-
100 X 10= 1000/-
1000 X 10= 10,000/-
10,000 X10=1,00,000/- பேருக்கு என்று அனுப்பி கொண்டே போனால்
(1,00,000 X 50 KB = 50,00 000 GB X ₹192= ₹96,00,00,000/- ÷ 25℅ -₹72,00,00,000 கிட்டத்தட்ட 72 கோடி ரூபாய் வரை) எவ்வளவு காசு கம்பெனி காரனுக்கு கிடைக்கும் என்று கூட்டி கழிச்சி பாருங்க தம்பி, தங்கைகளா"...!
"📱ஏர்டெல்,
📱ஏர்செல்,
📱டாடா,
📱டொக்கோமோ, 📱வொடாபோன், 📱ரிலையன்ஸ் இன்னபிற
"Sim Card Company" முதலாளிகளுக்கு"......
" காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
"இதற்காகவே இதுக்கென்றே
"Sim Card Company" காரன்கள் ஆட்களை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளான்கள்.
(இதில் வருத்தபட வேண்டிய விசயம் என்னவென்றால் கடைசியில் உண்மை செய்தி எது, பொய் செய்தி எது என்று பிடிபடாமல் போய் அனைத்தையும் மக்கள் அலட்சிய படுத்தி விடுவார்கள்.)
₹தம்பிகளா இனிமே உங்கள் நண்பர்களுக்கு "குரூப் " களுக்கு இது மாதிரியான (பொய்) செய்திகளை பதியும் முன்பு யோசனை செய்து விட்டு அப்புறமாக பதிவிடவும்.
"நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்"...!
👉🌷🌹💐🙏🏻🙏🏻🙏🏻👈

நாம் குடிக்கும் ஒவ்வொரு துளி சுத்திகரிக்கப்பட்ட நீருக்கும் அமெரிக்காவுக்கு வரி;

ஆமாம் நண்பர்களே நீங்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் குடிக்கும் போதும் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
இது என்ன புதுக் கதையா இருக்கேன்னு நீங்க நினைப்பது புரிகிறது.ஆனால் அதுதான் உண்மை.
அக்குவாபினா தண்ணீராய் இருந்தாலும் சரி அல்லது லோக்கல்ல போடர கேன் தண்ணீராக இருந்தாலும் சரி குடிக்கிற ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறோம்.
குடிநீர் சுத்திகரிப்பு RO முறையில்தான் சுத்திகரிக்கப் படுகிறது. அதாவது reverse osmosis முறை. இதன் காப்புரிமை அமெரிக்கா வசம் உள்ளது. நாம் எந்த கம்பெனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தாலும் சரி அல்லது வீட்டிலேயே RO சாதனம் பொருத்தினாலும் பில்டர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி செலுத்த வேண்டும்.
இப்போது புரிகிறதா? சுத்தமான மழைநீரை சாக்கடையிலும் கடலிலும் விட்டுவிட்டு கடல்நீரை ஏன் குடிநீராக்குகிறார்கள் என்று 1000 கோடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டமென்றால்
காலகாலத்திற்கும் RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம். அரசியல்வாதிக்கு கமிஷன்.
ஆற்று நீரையெல்லாம் கடலில் கொட்டிவிட்டு அம்மா நீர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி
ஏரி குளங்களில் மீன் வளர்கிறேன் இறால் வளர்க்கிறேன் என்று நீராதாரங்களை பாழ்படுத்திவிட்டு கிராமங்களில்கூட மக்களை கேன் தண்ணீர் குடிக்கவைத்து அமெரிக்காவுக்கு வரி
நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர். வளர்ச்சி என்ற பெயரில் ஆறு,ஏரி, கால்வாய், குளம், குட்டை, காடுகள்,மலைகள் என குடிநீர் பெறக்கூடிய எல்லா இயற்கை வளங்களையும் திட்டமிட்டு அழித்து நாசப்படுத்தியது மட்டும் அல்லாமல் பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் அக்குவாபினவுக்கும் அம்மா வாட்டருகும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்? ஆறுகள்தோறும் பன்னாட்டு நிறுவனங்களின் கார் கம்பேனிகள், ரசாயன ஆலை, சாய பட்டரை ஆலை தோல் பதப்படுத்தும் ஆலை,பேப்பர் சர்க்கரை ஆலை கட்டி நீர்நிலையை பாழாக்கி அமெரிக்காகாரனுக்கு வரி.
நீங்கள் குடிப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் இல்லை மாறாக குளோரின் ஆசிட் போன்ற நச்சு வேதிபொருட்கள் கலந்த மொல்ல கொள்ளும் விசம்(slow poison) என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நிலத்திற்கு கீழே உள்ள நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீர் மண்ணை விட சிறந்த வடிகட்டி உலகில் வேறு எதுவும் இல்லை என விழா (முந்நீர் விழவு) வைத்து அறிவித்த நம் முன்னோர்கள் எங்கே...... என் காலுக்கும் ஐந்தடிக்கும் கீழ் உள்ள குடிநீர் என் வாய்க்கு வருவதற்குள் நான் அமெரிக்காவுக்கு வரி கட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ள நாம் எங்கே.
(உங்கள் மனசாட்சி துடித்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்)
இந்திய தரகு முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நுகர்வு கலாச்சாரம் இவற்றிற்கு பின்னால் பன்னாட்டு நிறுவனங்களின்(கார்ப்பரேட்டுகளின்) சதி உள்ளது என்பதை நாம் எப்போது உணர்வோம்.
பின்குறிப்பு வழக்கம் போலவே ஆதாரம் இருக்கான்னு கேட்கறவங்களுக்கு RO அமெரிக்க காப்புரிமை எண்US4574049

"தன்னம்பிக்கை "

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது.
மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டான்...
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை.
ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான்.
கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே?
நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும்.
அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...