நாத்திகரை தீவிர ஆத்திகராக மாற்றிய மகா பெரியவர்! – மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்
நாத்திகரை தீவிர ஆத்திகராக மாற்றிய மகா பெரியவர்! – மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்
காஞ்சி மகாபெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் புரிந்த அதிசய ங்களும், பேசிய நல்தத்துவங்களும் ஏழை பணக்காரர், ஜாதி, மத இன வேறுபாடின்றி
அனைத்து தரப்புமக்களுக்கும் சென்றந்துள்ளது அவரது அற்புத நிகழ்வொ ன்றினை இங்கே காணவிருக்கிறோம்.
ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்.. காரில் போய்க்கொண் டிருந்தபோது மிகமோசமான விபத்துஏற்பட்டது . அ தில் சின்னப்பதேவருக்கு அவ்வளவாகக் காயம் இல் லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இரு ந்தார்.
காஞ்சிப்பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதை யும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் என ப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘ விபத்து நேர்ந்துவிட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன்எப்படியிருக்கிறான்’ என்றும்பெரியவர்கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினை வில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.
தேவரின் கவலையை உணர்ந்தபெரியவர், ‘சரி, கவலை ப்படாதே… இந்த விபூதியைக் கொண்டுபோய், அவ ன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவுபோடு, மீதி இருப் பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்க ளால் விபூதி எடுத்துமடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப்பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும பெரி யவரின் கட்ட ளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன், நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சி களின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத் தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசிவந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒருவாரத் திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட் டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவு படு த்திப் பேசியிருந்தார்.
எனவே அவரிடம்போய் இந்தவிபூதியை எப்படிக்கொடுப்பது என்பதுதான். தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது. ஆனா ல் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரிய வர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பதுபோல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத் திருந்தது.
இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பர நாதர்கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனி ன் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திரு வாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச்சென்றார். நினைவிழந்துபடுத்திருந்த கண்ணதாசனி ன் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதி யை வாயிலும்இட்டு, மீதியை தலையணையின்கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெ ல்லாம் கண்ணதாசன்,நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதா சனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்குநினைவு திரும்பி கண்விழித்திருந் தார். தேவரை பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணா டியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார் க்கணும்’ என் றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தே வர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்னவிபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்பார்க்க, வேறு வழியின்றிவந்தது வரட்டுமென தேவர், தான் பெரிய வரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிக ளில் அருவி யெனக் கொட்டியது கண்ணீர்.
திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாய ந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கரு ணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழு ததோடு, தேவரிடம்,ஒருவேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட் டிற்குச் செல்லமாட்டேன். இப்பாவியிடம் கரு ணை வைத்த அந்தமகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மன முருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்த து ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரி யவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித் தார், கண்ணதாசன். அக் கவிதை இதோ :
பார்த்த மாத்திரத்தில்
பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு,
திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக்
கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன்
தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு,
திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக்
கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன்
தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
கவிதை வரிகளைக்கண்ட பெரியவர், கண்ணதாசனை க்கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திரு வாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “ அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பல நாள் உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.
இந்து மதமே அர்த்தம் உள்ளதுதானே …
No comments:
Post a Comment