Wednesday, June 8, 2016

ராஜீவ் கொலையில் திமுகவுக்கு மேலும் ஒரு பெரிய சிக்கலை கொடுத்துள்ளது பைபாஸ் Documentry படம் !!

1. ராஜீவ் கொலை வழக்கில் தடவியல் நிபுணர்களுக்கு தாதமாக, அதாவது கொலை நடந்த 10.20க்கு பிறகு தகவல் அளிக்காமல், காலை 6 மணிக்கு தகவல் அளித்து, 7.30க்கு சென்றவர்களை 1.30 மணி நேரம் காக்க வைத்து 9 மணிக்கு கொலை நடந்த இடத்திற்குள் அனுமதித்துள்ளனர். தடவியல் நிபுணர்கள் சென்றபோது இறந்தவர்களின் உடல்கள் அங்கு இல்லை. இதனால் ஆவனங்களை சரிவர தேட முடியவில்லை.
-
2. குற்றம் நடந்த இடத்தில் ஒரு சடலத்தின் மீது கேமரா இருந்துள்ளது. அந்த கேமராவை எடுத்துக்கொண்டு நெகடிவ் போட சென்றுள்ளனர். கலர் ப்ரின்ட் கிடைக்காது என்பதால் புகைப்படங்களை கட் செய்து நெகடிவ் போட்டுவிட்டு மீண்டும் கேமராவை அதே சடலத்திற்கு மேல் வைத்துள்ளனர். இது குற்றம் நடந்த இடத்தின் தன்மையை பாதிக்கும்.
-
3. புகைப்படத்தை நெகடிவ் போட்டு கொடுத்த நாராயணனை பைபாஸ் படக்குழுவினர் சந்தித்து பேசியபோது, என்னை அங்கே இரவு 12 மணிக்குக் கூட்டிப் போனார்கள். சம்பவ இடத்தில் நிறைய புகைப்படங்களை எடுத்தேன். அங்கு முழுக்க ரத்தத் துளிகள் நிரம்பிய ஒரு கேமராவைப் பார்த்தேன். அதைத் துடைத்து சுத்தம் செய்தேன். அந்தக் கேமராவில் பிளாஷ் இருந்தது என்று கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் நீதிமன்றத்தில் காட்டிய தடைய ஆவனங்களில் கேமராவில் பிளாஷ் இல்லை. ஹரிபாபுவின் கேமரா சேதமடைந்திருந்தாக நாரயணன் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறை காட்டிய கேமராவில் சேதம் எதுவுமே இல்லை.
-
4. தடயவியல் பேராசிரியர் சந்திரசேகர் படக்குழுவினரிடம், ''கேமரா பற்றி எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு மாலை நாளிதழுக்கு, சம்பவம் நடத்த தினத்தன்று, ''30 வயதுள்ள சடலத்தின் மீது கேமரா கிடந்தது. மறுநாள் அதைத் தேடிச் சென்றேன்.'' என்று பேட்டி கொடுத்துள்ளார். அதேபோல, தடா நீதிமன்றத்தில், ''கேமராவைப் பற்றி காஞ்சிபுரம் தடயவியல் உதவியாளர் ஏ.ஆர்.மோகன் கூறினார். பத்திரிக்கைகளில் இந்தப் படங்களை வெளியிட்டது யார் என்று தனக்குத் தெரியாது'' என்று குறுக்கு விசாரனையின் போது தெரிவித்துள்ள அவர், தற்போது ''பத்திரிகையாளர் ஒருவருக்கு குற்றவாளியின் படங்களைக் கொடுத்து, உண்மை வெளியில் வரட்டும் என தெரிவித்ததாக பேட்டி கொடுத்துள்ளார். இதில் எது உண்மை என்பது கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
-
5. சம்பவ இடத்தில் இரண்டு பூக்கூடைகள் காவல்துறையினருக்கு கிடந்துள்ளன. ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சுலைமான் என்பவர் தனது உதவியாளர்கள் மூலம் பூக்கூடைகளை அனுப்பி வைத்திருக்கிறார். சுலைமானின் உதவியாளரை தான் ஹரிபாபு என்று காவல்துறை திரித்து கூறியுள்ளது.
-
6. பத்திரிகையாளர் ராமசுந்தரத்திற்கு, சந்திரசேகர் கொடுத்த வீடியோ பேட்டியில், ராஜீவ் காந்தி லோட்டோ ஷு, தனுவின் சல்வார் கமீஸ், சுவிட்ச் ஆகியவற்றை தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இவைகளை எடுக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும்போது மட்டுமே நான் அனுமதிக்கப்பட்டேன்.'' என்று கூறியுள்ளார். இதுபற்றி மேலும் விளக்கும் ராமசுந்தரம் அவர்கள், ''சம்பவ இடத்திற்குப் போகாமல், இந்தப் பொருட்களை வீடியோ பதிவில் காட்ட முடியாது. இதை ஏன் சந்திரசேகர் மறைக்கிறார்? என்று தெரியவில்லை. எனக்கு ஒரு வீடியோ பேட்டி கொடுத்தேன் என்பதையே சந்திரசேகர் நீதிமன்றத்தில் மறைத்துவிட்டார்'' என்று தெரிவிக்கின்றார்.
-
7. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், போட்டோகிராபர் ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணி, உடலுக்கு உரிமை கோரி ஆஸ்பத்திரிக்கு வருகிறார். அவரிடம், தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்ட சடலத்தைத்தான், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ஜீவானந்தம் காண்பிக்கிறார். முகம் முழுக்க கருகிப் போய், மார்பில் குண்டு துகள்கள் துளைக்கப்பட்ட அந்த உடலை, ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறார்கள். தவிர, 'ஹரிபாபுவின் வயது 22. போஸ்ட்மார்ட்டத்தில் சொல்லப்பட்ட வயது 30. அதுவும் சுன்னத் செய்யப்பட்ட இளைஞரின் உடல் அது. ' உடலை ஒப்படைத்தவர்கள் ஏன் சுன்னத் செய்யப்பட்டது என்ற கேள்வியை எந்த இடத்திலும் கேட்கவில்லை. புதைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப்பட்ட உடலை, ஹரிபாபு குடும்பத்தினர் ஏன் எரித்தார்கள்?' எனப் பல கேள்விகள் எழுகின்றன என்கிறது அந்த டாகுமென்ட் படம்.
-
8. இதுபற்றிய பெரிய விளத்தை கொடுத்துள்ளது அந்த படம். அதில், ''ராஜீவ்காந்தி நடந்து வரும் சிவப்புக் கம்பளத்தின் தெற்கில் நின்றபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஹரிபாபு. அவருக்குப் பக்கத்தில் சங்கர்-கணேஷ் இசைக் குழுவின் போட்டோகிராபர் ஜெயபாலனும் போட்டோ எடுத்தபடியே நின்றிருக்கிறார். குண்டு வெடித்ததும் காதில் ரத்தம் வடிய மயக்க நிலைக்குச் சென்ற ஜெயபாலன் பிழைத்துவிட்டார். அவரோடு சேர்ந்து ஹரிபாபுவும் பிழைத்திருக்கவே வாய்ப்பு அதிகம். வடதுபக்கம் இறந்துகிடந்த ஒரு முஸ்லிம் இளைஞரின் உடலின் மீது காவல்துறை கேமராவைப் போட்டுவிட்டு, அவர்தான் ஹரிபாபு என நம்ப வைத்திருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
9. மேடையில், ராஜீவ்காந்தி பங்கேற்கும் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய ஏ.ஜெ.தாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். 10.12 மணிக்கு அவர் பேசும்போது, 'மேடைக்கு வலதுபக்கம் உள்ளவர்கள், மேடையின் இடதுபக்கம் உள்ள கார்பெட் ஏரியாவுக்கு வருமாறு' சொல்கிறார். மேடையின் பின்புறம் காங்கிரஸ் பிரமுகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அறிவிப்பு வெளியான உடன், பொதுமக்கள் கூட்டம் ரெட் கார்பெட் ஏரியாவை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. ராஜீவ்காந்தி நடந்து வந்த ரெட் கார்பெட்டில் போலீஸ் பந்தோபஸ்து இல்லை. ராஜீவை நோக்கி வருபவர்களைத் தடுக்க போலீஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேடைக்கு ராஜீவ்காந்தி வந்திருந்தால் வெடிகுண்டு வெடித்திருக்க வாய்ப்பில்லை. மாலை போட வருகிறவர்களை சோதனை செய்திருக்க முடியும். ஆனால், சிவப்புக் கம்பளத்தை குறிவைத்து ஏ.ஜெ.தாஸ் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டாரா? என்ற கேள்விக்கு, விடை சொல்கிறார் ராஜீவ்காந்திக்கு முதலில் மாலை போட்ட ரங்கநாத முதலியார். அவர் தனது வாக்குமூலத்தில், 'ஐ.ஜி ஆர்.கே.ராகவன்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிடச் சொன்னார்' என்கிறார். அப்படியானால், சிவப்புக் கம்பளத்தில் மக்களை நிற்க வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது ஆவணப்படம். 
-
10. ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குப் பின்புறம் சி.ஆர்.பி.எஃப் போலீஸார் 50 பேர் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என போலீஸ் தயார் செய்த பந்தோபஸ்து குறிப்பில் உள்ளது. சம்பவ இடத்தில் இப்படிப்பட்ட ஒரு போலீஸ் படை இருந்ததாக எவரும் குறிப்பிடவில்லை. கடைசிநேரத்தில், இவர்கள் வராமல் போனதற்கான ஆதாரம்தான் இருக்கிறது. இதற்கான மர்மம் என்ன?
-
இது எல்லாமே 1989 - 1991 திமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்துள்ள ஒரு படுகொலையை மையப்படுத்தியுள்ளது. அதுவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தியது. இதற்கு எல்லாம் திமுக தலைவர் கருணாநிதி பதில் தருவாரா ? காவல்துறை மூலம் திமுக ஆடிய நாடகத்தின் உச்சக்கட்டம் இதுதான். இதைக்கூட புரிந்துக்கொள்ளாமல் இன்னமும் திமுகவுடன் காங்., கூட்டணி வைத்துள்ளதை பார்த்தால் கேவலமாக திட்டத்தான் தோன்றுகிறது.

No comments:

Post a Comment