நிதம் மொழி கலவரம் உருவாக எத்தனிக்கும் இவர்,
ஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர் தான் இந்த கருணாநிதி என்கிற தட்சிணா மூர்த்தி.
ஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர் தான் இந்த கருணாநிதி என்கிற தட்சிணா மூர்த்தி.
மேளம் இசைக்கும், தெலுங்கு சின்ன மேளம் சமூகத்தை சேர்ந்தவர். தான் முதல்வரானவுடன் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து சின்ன மேளம் என்பதை தமிழ் பெயரில் இசை வேளாளர் என்ற புதிய பெயரில் தனது சமூகத்தை மாற்றி கொண்டார்.
எம். ஜி.ஆர் தமிழக முதல்வராக வந்ததை பொறுக்க முடியாமல், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் எம்.ஜி.ஆர் கேரளத்தில் பிறந்ததை வைத்து மலையாளி தமிழரை ஆள்வதா என தொடர்ந்து பரப்புரை செய்து வந்ததால்,
எம் ஜி ஆர் இவரின் பூர்வீகத்தை தோண்டி எடுத்து அன்று சட்டமன்றத்தில் 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக பேசியது இன்றும் சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதை காணலாம்.
அதை அன்று கருணாநிதி மறுக்கவோ விவாதம் செய்யவோ இல்லை. அன்றிலிருந்து எம் ஜி ஆரை மலையாளி என்று விமர்சிப்பதை நிறுத்தினார்.
தாய் மொழியான தெலுங்கில் புலமை பெற்றவர். வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ போன்ற தெலுங்குத் திரைப் படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதியவர். அந்த அளவிற்கு தெலுங்கு மொழி ஆளுமை பெற்றவர். தன் வீட்டில் வீட்டாரோடு தெலுங்கு பேசுகிறவர்.
தமிழ் மொழியில் இவரின் புலமை என்பது சொற்பமானதே .தன்னுடன் தமிழ் மொழி அறிஞர்களை அடிமையாக வைத்துக் கொண்டு அவர்களின் அறிவாற்றாலை மொழி வல்லமையை தனதாக்கி கொண்டு தமிழரை இன்று வரை ஏமாற்றி வருபவர்.
தெலுங்கு வருட பிறப்பிற்கு முதன் முதலாக அரசு விடுமுறையை அறிவித்தவர். ஆந்திர முதலவர் ராஜசேகரரெட்டி இறந்ததற்கு விடுமுறை அறிவித்து தனது கட்சிக் கொடியை அரை கம்பத்தில் பறக்க வைத்து தனது இனப் பற்றை வெளிப்படுத்தியவர்.
தமிழ்க அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் தெலுங்கர்களே. தலைமை செயலகத்தில் 100 விழுக்காடு தெலுங்கர்களே. இதற்கு காரணம் கருணாநிதி.
தன் இனத்தை சேர்ந்தவர்களுக்கே தமிழன் என்ற போர்வையில் முன்னுரிமை கொடுத்து அரசு ஊழியராக்கினார். அதற்கு தகுந்தவாறு பதினைந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தால் அவர்களும் தமிழர்களே என்று சட்டம் இயற்றி மாற்றினத்தவர்களை வளமை பெறச் செய்து தமிழர்களை பிச்சை காரர்களாக்கினார்.
தி மு க அரசியலில் சட்ட மன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக , மாவட்ட பொறுப்பாளர் முதல் அடிமட்ட பொறுப்பு வகிப்பவர் வரை பெரும்பாலோர் தெலுங்கர்களே. அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.
தமிழ், தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழித்தவர். தமிழை விற்று பிழைப்பு நடத்தியவர். தனது நிறுவனகளுக்கு சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி. என ஆங்கில பெயரை சூட்டி மகிழ்ந்தவர். தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆபாசாமாக நடன மாட வைத்து, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி கட்ட ஈழப் போரின் அவலங்களை பற்றி தமிழர்கள் அறியாமல் பார்த்து கொண்டார்.
No comments:
Post a Comment