Tuesday, June 28, 2016

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் உள்ள இருப்புகளை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம்:


தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில், இருப்பு உள்ள பொருட்கள் குறித்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா உத்தரவின்பேரில், உணவு மற்றும் கூட்டுறவுத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் அட்டைகளுக்கு முந்தைய நடவடிக்கையாக, குடும்ப அட்டைகளை கணினி மூலம் ஸ்கேன் செய்து, அந்த அட்டைகளில் உள்ள விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது, சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருமுறை பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்போனுக்கு, அவர் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும்.
அதன் அடிப்படையில், பயனாளிகள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விரைவில் இத்தகைய வசதி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது..
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி, மாண்புமிகு அம்மா அவர்களோடு இணைந்து தமிழகத்தினை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல தயாராகுங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...