இது அமெரிக்காவில் உண்மையில் நடந்தது. ஒருவனுடைய காதலிக்குப் பரிசாக வாசனைத் திரவியம் (Perfume) வாங்குவது என்று காதலன் முடிவு செய்தார். ஆனால் அவள் வாங்கும் ‘பெர்ஃப்யூம்’ எது என்று தெரியாது.
அவள் வசிப்பதோ அவளுடைய அம்மா வீட்டில். அவளிடம் கேட்டால் ‘ஆச்சர்யம் (surprise)’ போய்விடும். ஆகவே கேட்கவும் தயக்கம். அவள் எப்போது வந்தாலும் அவளுடைய செல்லமான நாய்க்குட்டியைத் துணைக்கு அழைத்துவருவாள்.
அவளை மறுமுறை சந்தித்தபோது, உன்னுடைய நாயை ஒரு வாக்கிங் கூட்டிக்கொண்டு போய்விட்டு மாலையில் உன் வீட்டில் கொண்டுவந்து விடுகிறேன் என்றான். அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
காதலன் நாயைக் கூட்டிக்கொண்டு நேரடியாக கடைக்குப் போனான். பெர்Fயூம் விற்கும் பிரிவிலுள்ள பெண்களிடம் பல வகையான பெண்கள் வசனைத் திரையங்களின் மாதிரி சாம்பிள் கேட்டான். பொதுவாக அவைகளைக் சின்னக் கார்டில் “ஸ்ப்ரே” செய்து முகர்ந்து பார்க்கக் கொடுப்பார்கள்.
நமது காதலனோ அந்த அட்டைகளை நாயின் மூக்கிற்கு நேரே காட்டச் செய்தான். அந்தப் பிரிவிலுள்ள பெண்களுக்கு ஒரே வியப்பு; புரியவுமில்லை. ஒரு குறிப்பிட்ட பெர்ஃப்யூமை, நாயிடம் காட்டியபோது அது ஆனந்தமாக எம்பிக் குதித்தது. அதுதான் மனைவி, பயன்படுத்தும் பெர்ஃப்யூம் என்பது தெளிவாகியது. அதை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றான்.
அ
வளுக்கும் மகிழ்ச்சி. தனது கணவனுக்குத் தான் பயன்படுத்தும் பெர்ஃப்யூம்முதற்கொண்டு எல்லாம் தெரிந்திருக்கிறதே! என்று அன்பும் அதிகரித்தது.
ஆண்கள் மது அருந்தியபின் தேவை இல்லாததை யெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள், அதிகமாக உணர்ச்சி வசப்படுவார்கள், மிக மோசமாக வண்டியோட்டுவார்கள் சிந்திப்பதையே நிறுத்தி விடுவார்கள்..சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்குவார்கள். காரணம் இல்லாமல் சண்டைக்கு வருவார்கள்.என்றைக்கோ நடந்தை இன்று மென்று வம்படிக்கு அலைவார்கள்..
அனால் பெண்கள் இவை அனைத்தையும் மது அருந்தாமலேயே செய்ய கூடியவர்கள்..
பெண்கள் தான் திறமைசாலிகள் என்று நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.,
No comments:
Post a Comment