நிறைய உண்டு சிலவற்றை மட்டும் காண்போம்.
இந்து மதம் இறைவனால் நமக்காக உண்டாக்கபட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது.
இந்துக்களை பொறுத்தவரையில் கடவுள் கொள்கை எளிமையானது.
இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும்,
நீ என்னை வணங்காவிட்டால்
உன்னை தண்டிப்பேன் என்றோ,
என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால்
உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்றோ,
நீ எனக்கு அடிமை என்றோ சொன்னதாக எந்த வேதத்திலும் இல்லை.
நீ என்னை வணங்காவிட்டால்
உன்னை தண்டிப்பேன் என்றோ,
என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால்
உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்றோ,
நீ எனக்கு அடிமை என்றோ சொன்னதாக எந்த வேதத்திலும் இல்லை.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது, தான் ஒரு இனத்தை மட்டுமே முன்னுரிமை குடுத்து வாழ வைப்பேன் என்று இந்துக் கடவுளாவது சொன்னதாக இருக்கிறதா, எந்த இந்து மத நூல்களிலாவது அப்படிக் காட்ட முடியுமா என்று சொல்லி இருக்கிறார்.
இந்துக்கள் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கின்றனர். மசூதிக்கு சென்று சுகம் இல்லாத பிள்ளைகளுக்கு மந்திரிக்கின்றனர். தர்காவிற்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
பல உட்பிரிவுகளையும், அவரவர்க்கு தனித் தனியே கடவுள்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகளை கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதம் இந்து மதம்.
அனைவரும் இந்துக்களாக, நமது மதத்தின் உயிர்நாடியான வேதங்களையும், இதிகாசங்களையும், உபநிஷத்துகளையும் மூலாதாரமாக கொண்டு
" இறைவன் ஒருவனே " என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்தும், காண்போர் அதிசயிக்கும் மதம் நமது மதம்.
" இறைவன் ஒருவனே " என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்தும், காண்போர் அதிசயிக்கும் மதம் நமது மதம்.
இந்து மத்திலே எளிமையான மக்களின் இந்த அமைதியான கடவுள் கோட்பாடு,
மனிதனின் உயிர், கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும், அடைய முடியும் என்பதை யோக நூல்கள் சொல்லுகின்றன.
மனிதனின் உயிர், கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும், அடைய முடியும் என்பதை யோக நூல்கள் சொல்லுகின்றன.
ஒரே கடவுள்தான் உருவமற்ற நிலையிலும், உருவமுள்ள நிலையிலும் இருப்பதாகவும்,
அதே கடவுள் பல அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் இந்து மதம் சொல்கிறது.அதை பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது.
அதே கடவுள் பல அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் இந்து மதம் சொல்கிறது.அதை பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது.
இந்த நேரத்தில் தான் இறைவனை தொழ வேண்டும் இப்படி தான் வழிபட வேண்டும் என்று பிறர் கருத்துகளை நம் மீது திணிப்பதில்லை.
அவரவர் எண்ணங்களுக்கேற்ப இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து.
ஒரே பரமாத்மாவின் பல நிலைகளே பல கடவுளாக இருக்கிறது இந்து மதத்தில். இப்படி பல வடிவங்களில் யாரை வணங்கினாலும் நாம் அந்த ஒரே பரமாத்மாவையே வழி படுகிறோம்.
எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம்.
தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
இந்து மதத்தின் புனித நூலின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை என்று எல்லாவற்றிலும் கடவுளை காணும் மதம்.
ஞானத்தை வழங்கும் தேவாரம்,திருவாசகம், திருக்கோவையார்,பெரியபுராணம் முதலிய பன்னிருதிருமுறைகள் என்று எண்ணிலடங்கா வேதங்களை கொண்ட மதம்.
பெண் ஆசையை ஒழிக்க - இராமாயணம்,
மண் ஆசையை ஒழிக்க - மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த - பாகவதம்,
அரசியலுக்கு - அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு - காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு - சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு - வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு - யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு - வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு - கோள்கணிதம்.
மனதிற்கு சந்தோஷத்தையும், சமுகத்திற்கு பண்பாட்டையும் உணர்த்த அழகான பண்டிகைகள் கொண்ட மதம்.
யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து"கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
முக்தி எனப்படும் மர ணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.
சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
இந்துவாக வாழ்வதில் பெருமைகொள்வோம்.
No comments:
Post a Comment