Wednesday, June 22, 2016

ஸ்ரீஹரிக்கோட்டா...

ஒரே ராக்கெட்டில் 20 செயற்கைகோள்களை அனுப்பிய இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள்..
இஸ்ரோ ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைக்கப்பட்டது எதார்த்தமான நிகழ்வு அல்ல. அதற்கான முக்கிய காரணங்கள்,
1) செயற்கைகோள்களை சுற்றுவட்ட பாதையில் நிறுத்த ஏவும் பகுதி பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும்.
2) புவியின் சுழற்சியால் கிழக்கு நோக்கி ராக்கெட்டை செலுத்தினால் அதன் திசைவேகத்தை நொடிக்கு 0.4 கிமீ அதிகரிக்க முடியும். இதற்கு ஏவுதளம் கிழக்கு கடற்கரையில் அமைந்திருக்க வேண்டும்.
3) பாதுகாப்பு காரணங்களுக்காக ஏவுதளம் குடியிருப்பு பகுதியிலிருந்து விலகி சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்தது போல அமைந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் நம் கிழக்கு கடற்கரையில் அமைந்த ஸ்ரீஹரிகோட்டா இந்தியாவிற்கு ஒரு வரம். புவியியல் அமைப்பில் இதே போன்ற அமைப்பை வரைபடத்தில் தேடினால் பூமத்திய ரேகைக்கு இதைவிட அருகில் ஒரு இடம் இலங்கையின் தமிழர் நிலமான திரிகோணமலை.
முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த காலின் பவல் ஈழம் அமைக்க அமெரிக்கா உதவுவதாகவும் பதிலுக்கு திரிகோணமலையை மட்டும் தரும்படியும் விடுதலை புலிகளிடம் கேட்டதாக ஒரு நண்பர் சொல்லி கேட்டுள்ளேன்.
அதற்கு விடுதலை புலிகள் மறுத்த பின்பு தான் போர் தீவிரமடைந்ததாகவும் கேட்டுள்ளேன். அதை இப்போது ஆராய அவசியமில்லை. ஆனால் திரிகோணமலையின் புவியியல் அமைப்பு அந்த சந்தேகத்தை அதிகபடுத்துகிறது.
இப்போதெல்லாம் உலகின் எந்த போரும் வீரத்தின் பெயரால் நடப்பதில்லை, பேரத்தின் பெயரால் தான் நடக்கிறது.. அதை ஏற்பவர்கள் தேசியவாதிகள்.. ஏற்காமல் போராடி தோற்பவர்கள் தீவிரவாதிகள் 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...