ஆமாம் நண்பர்களே நீங்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் குடிக்கும் போதும் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
இது என்ன புதுக் கதையா இருக்கேன்னு நீங்க நினைப்பது புரிகிறது.ஆனால் அதுதான் உண்மை.
அக்குவாபினா தண்ணீராய் இருந்தாலும் சரி அல்லது லோக்கல்ல போடர கேன் தண்ணீராக இருந்தாலும் சரி குடிக்கிற ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறோம்.
குடிநீர் சுத்திகரிப்பு RO முறையில்தான் சுத்திகரிக்கப் படுகிறது. அதாவது reverse osmosis முறை. இதன் காப்புரிமை அமெரிக்கா வசம் உள்ளது. நாம் எந்த கம்பெனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தாலும் சரி அல்லது வீட்டிலேயே RO சாதனம் பொருத்தினாலும் பில்டர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி செலுத்த வேண்டும்.
இப்போது புரிகிறதா? சுத்தமான மழைநீரை சாக்கடையிலும் கடலிலும் விட்டுவிட்டு கடல்நீரை ஏன் குடிநீராக்குகிறார்கள் என்று 1000 கோடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டமென்றால்
காலகாலத்திற்கும் RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம். அரசியல்வாதிக்கு கமிஷன்.
காலகாலத்திற்கும் RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம். அரசியல்வாதிக்கு கமிஷன்.
ஆற்று நீரையெல்லாம் கடலில் கொட்டிவிட்டு அம்மா நீர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி
ஏரி குளங்களில் மீன் வளர்கிறேன் இறால் வளர்க்கிறேன் என்று நீராதாரங்களை பாழ்படுத்திவிட்டு கிராமங்களில்கூட மக்களை கேன் தண்ணீர் குடிக்கவைத்து அமெரிக்காவுக்கு வரி
நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர். வளர்ச்சி என்ற பெயரில் ஆறு,ஏரி, கால்வாய், குளம், குட்டை, காடுகள்,மலைகள் என குடிநீர் பெறக்கூடிய எல்லா இயற்கை வளங்களையும் திட்டமிட்டு அழித்து நாசப்படுத்தியது மட்டும் அல்லாமல் பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் அக்குவாபினவுக்கும் அம்மா வாட்டருகும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்? ஆறுகள்தோறும் பன்னாட்டு நிறுவனங்களின் கார் கம்பேனிகள், ரசாயன ஆலை, சாய பட்டரை ஆலை தோல் பதப்படுத்தும் ஆலை,பேப்பர் சர்க்கரை ஆலை கட்டி நீர்நிலையை பாழாக்கி அமெரிக்காகாரனுக்கு வரி.
நீங்கள் குடிப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் இல்லை மாறாக குளோரின் ஆசிட் போன்ற நச்சு வேதிபொருட்கள் கலந்த மொல்ல கொள்ளும் விசம்(slow poison) என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நிலத்திற்கு கீழே உள்ள நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீர் மண்ணை விட சிறந்த வடிகட்டி உலகில் வேறு எதுவும் இல்லை என விழா (முந்நீர் விழவு) வைத்து அறிவித்த நம் முன்னோர்கள் எங்கே...... என் காலுக்கும் ஐந்தடிக்கும் கீழ் உள்ள குடிநீர் என் வாய்க்கு வருவதற்குள் நான் அமெரிக்காவுக்கு வரி கட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ள நாம் எங்கே.
(உங்கள் மனசாட்சி துடித்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்)
இந்திய தரகு முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நுகர்வு கலாச்சாரம் இவற்றிற்கு பின்னால் பன்னாட்டு நிறுவனங்களின்(கார்ப்பரேட்டுகளின்) சதி உள்ளது என்பதை நாம் எப்போது உணர்வோம்.
பின்குறிப்பு வழக்கம் போலவே ஆதாரம் இருக்கான்னு கேட்கறவங்களுக்கு RO அமெரிக்க காப்புரிமை எண்US4574049
No comments:
Post a Comment