சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.
நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.
‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே?”
ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.
‘என்ன டியூன்’? என்றார்.
பாடிக் காட்டினேன்.
ஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.
பாடலைப் பாடியவர், ‘இதுதான் புதிது! சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே? அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே!’ என்று மனம் விட்டுப் பாராட்டினார்.
No comments:
Post a Comment