Thursday, June 23, 2016

தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா ? – வாரியார்

* கடவுளுக்கு அடுத்தது காலம்; காலம் மிகப் பெரியது. காலம் என் ற ஒன்றுக்குள் உலகம் முழுவதும் அடங்கி விடும்.
* கடவுள் தன்னைப் பற்றி நினைக்காதவர்கள் உள்ள த்தில் பாலில் நெய் போல் மறைந்து இருக்கிறார். நினைப்பவர் உள்ளத்தில் தயி ரில் வெண்ணெய் போல வெளிப்பட்டு இருக்கிறார். 
* பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழல் தந்து மரம் உறை விடமாக உதவுவது போல் இல்லற த்தான் எப்போதும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். மனதா லும், வாக்காலும், உடம் பினாலும் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும்.
* வயலில் மணியான நெல் விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும். அது போல் அடியார்களுக்கு நல்ல உணவு வழங்கினால் புண் ணியம் விளையும்.
* தெய்வ சிந்தனையே, விலங்கிடம் இருந்து மனிதனைப் பிரிக் கும். ஆதலால், நீ உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக் கலாம். ஆனால், கடவுள் சிந்தனையின்றி இருக்கக்கூடாது.
* ஒற்றுமையில் உயர்ந்தது எறும்பு. சாமர்த்தியத்தில் உயர்ந்தது வான்குருவி. நன்றியில் உயர்ந்தது நாய். வலிமையில் உயர்ந் தது யானை. தந்திரத்தில் உயர்ந்தது குள்ளநரி. ஒழுக்கம் இருந் தால் தான் மனிதன் உயர்ந்தவனாகிறான்.
* உயிர் இருப்பதால் தான் உடம்பு அசைகிறது என்று உணர்வது போல், கடவுள் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது என்று நம்புதல் வேண்டும்.
* நல்ல உணவுகளை உண்பதனால் உடல் வளரும். நல்ல நூல் களைப் படிப்பதனால் நல்ல உணர்வுகள் மலரும்.
* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகிற்குச் சேவை செய்வதோடு, கண்ணுக்குக் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.
* எப்போதும் இறைவனை நினைக்க வேண்டும். அது உன்னால் ஆரம்பத்தில் முடியாவிட்டால் காலையில் எழுகின்ற போதும், சாப்பிடும் போதும், இரவில் படுக்கும் போதும் தவறாமல் நினைக்க வேண்டும்.
* தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல் மனதையும் பரி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
* போதும் என்ற திருப்தி ஒருவருக்கு எப்போதுவருகிறதோ, அன் றே அவருக்கு மகிழ்ச்சி மாளிகையின் கதவு திறக்கப்படுகிறது.
* உறவினர்களையும், நண்பர்களையும் உபசரிப்பதற்குப் பெயர் விருந்ல்ல. ஏழைகளுக்குச் செய்யும் உபசாரம் தான் விருந்து.
* முதுமைக்குத் தேவைப்படுவதை இளமையில் தேடிக் கொள்வது அறிவுடைமை. அதேபோல் மறுமைக்கு வேண்டி யதை இம்மையில் தேடிக் கொள்ள வேண்டும்.
* பசுவின் வாயில் இரையைத் தந்து அதன் மடியில் பாலைக் கறக் கிறோம். அடியார்கள் வாய்; இறைவன் மடி; அடியார்களுக்குச் செய்தால் இறைவனாகிய மடியில் திருவருள் என்னும் பால் சுரக்கும்.
* மனிதன் என்ற சொல்லுக்கு “நினைப்பவன்’ என்று பொருள். நினைக்க வேண்டியதை நினைக்க வேண்டும். நினைக்கின்ற கரு வி மனம். மனம் மனிதனுக்கு மட்டுமே அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...