Thursday, June 23, 2016

நீயா நானா போயா வேணா

தாலி தேவையா? கார்பரேட் சாமியார்கள்? கோவில் திருவிழா அபத்தங்கள்? சித்த மருத்துவம் சிறந்ததா ? கலாச்சார உடை தேவையா? 
செலவு செய்து திருமணம் அவசியமா? என பாரத கலாச்சாரத்தையும் பண்பாட்டையும்
கேலி பொருளாய் மாற்றும் விவாத நிகழ்ச்சி


பிண்னணியில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த ஆண்டனி என்ற கிறிஸ்தவனின் கருத்தாக்கம்
கடந்த நீயா நானாவோடு கோட்டு கோபி நாத்(தம்) மூன்றாவது முறையாக பேயோட்டியிருக்கிறார்.
இதற்கு முன்னரும் சில பல நிகழ்சிகளில் ஜாதகமா? விஞ்சானமா? ஆத்திகமா, நாத்திகமா? பேய் இருக்கா, பேய் இல்லையா? ஆயுர்வேதாவா, ஆங்கில மருத்துவமா? இப்படியான பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.
அதில் ஜாதகத்தை நம்புகிறவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், பேயை நம்புகிறவர்கள், பரம்பரை மருத்துவத்தை நம்புகிறவர்கள் என பங்கேற்க வருபவர்களை நன்றாக கவனித்தீர்களென்றால் ஒன்று சரியாக  புரியும்.
மிகச்சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள் அல்லது கீழ் நிலையில் இருக்கும் மக்களை ஒரு பக்கத்தில் உட்காரவைத்து அவர்களுக்கு எதிர்புறமாக படித்தவர்கள் அல்லது மேல் தட்டு மக்களை அதுவும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களோடு மோதவைத்து அரசியல் செய்வதை தெளிவாய் கண்டுக்கொள்ளலாம்.
ஏன் கோபி நாத்தால் மிகச்சிறந்த முறையில் வாதம் செய்ய முடிந்தவர்கள் அல்லது திறமையாளர்களை கொண்டு வரமுடியாதா?
கோபிநாத் நம்மை அரங்கிற்கு அழைத்து ஒருதலைபட்சமாக அசிங்கப்படுத்துவார் எனத்தெரிந்து சிலர் பங்கேற்க மாட்டார்கள்
அடுத்து இன்னும் சிலர் எப்படியும் தங்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பை சொல்லுவார் எனத்தெரிந்து பங்கேற்க மாட்டார்கள்.
அதற்காக மேல் சொன்ன எல்லாமே சரியானவை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் பொதுவான மக்கள் நிகழ்ச்சிகளில் இரண்டுப்பக்கமும் சம பலத்துடன் ஆட்கள் இருக்கவேண்டும்.
ஒன்றுமே அறியாத அரைகுறை ஆட்களை அழைத்து வந்து அவர்களை பேசவைத்து பின்னர் அவர்களை அவமானப்படுத்தி, நீங்கள் மிட்டாள்கள் என திருப்பி அனுப்புவதொன்றும் கோபிக்கு கை வந்த கலை.
இந்தமாதிரி நிகழ்ச்சிகளை நடத்தும் கோபி ஏன்...
* பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொருட்கள் தரமானவையா, இல்லையா? என்று நிகழ்ச்சிகள் நடத்தவில்லை?
* நகரங்களில் கட்டிய வீடுகள் நல்ல தரமானவையா இல்லையா? என ஏன் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை?
* காஸ்மெடிக் பொருட்கள் உடலுக்கு தீமையா இல்லையா? என ஏன் நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை?
* தனியார் பள்ளிகள் தரமானவையா என ஏன் நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை?
* பாட்டிலில் விற்கப்படும் நீர் தரமானவையா என ஏன் நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை?
* மது குடிப்பது நல்லதா, கெட்டதா என ஏன் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை?
* ஆங்கில மருந்துகள் பக்க விளைவு கொடுக்குமா? கொடுக்காத என நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.
* குதிரைக்கு கொடுக்கும் ஓட்ஸ் உண்மையில் சர்க்கரை நோயக்கு சிறந்ததா ?
* தனியார் பொறியியல் மருத்துவ கேட்டரிங் கல்லூரிகள் தரமதா ?
* தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்கள் உண்மை தன்மை வாய்ந்ததா?
* காதலின் பெயரால் மதம் மாற்றப்படுவது உண்மையா ?
* பர்தா பெண் சுதந்திரமா?
* தினசரி செய்திகளில் வரும் சர்ச் பாதிரிகள் காம வேட்டைக்கு காரணம் எது ?
* இந்து கோவில் மட்டும் அரசு கட்டுபாட்டில் ஏன்?
* பைபிளில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு வேறுபாடு என்ன?
* கிறிஸ்தவ மற்றும் வேற்று மத திருமணங்களின் கலாச்சார மாற்றம் என்ன?
*யார் தமிழன்? தமிழ் பண்பாட்டை யார் கடைபிடிக்கிறார்கள்?
* மதம் மாறி போனவர்களுக்கு சாதி கொடுமை தீர்ந்ததா ?
இதை ஆராய்ந்தால் மேல் சொன்ன பொருட்கள் ( சாம்பிளுக்கு - மசாலா, சோப்பு, பில்டர்ஸ், எனர்ஜி டிரக்ஸ்) யாவுமே நீயா நானாவுக்கோ அல்லது விஜய் டிவிக்கோ கோடிகளை கொட்டும் விளம்பரதாரர்கள். அவர்கள் கோவித்துக்கொண்டால் விஜய் டிவிக்கு எப்படி லாபம் வரும்?
கிறிஸ்தவ பின்னணி கொண்ட தொலைகாட்சி இதை நடத்துமா?
ஆக...கோபி மீடியாவின் உதவியால் மிகப்பெரிய அரசியலை செய்துக்கொண்டிருக்கிறார். பணக்காரர்களுக்கும், பலவீனமானவ்ர்களுக்குமிடையிலான போட்டியை விவாதம் என்கிற பெயரில் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். சமுகத்திற்கு தேவையான நிகழ்க்சிகளை நடத்தாமல் ஏதோ ஒரு வகையில் கார்பொரேட்களை வளர்க்கவே நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
உருப்படியான பல விவாதங்களை விஜய் டிவி நடத்தலாம். அதைவிட்டுவிட்டு சிலரின் மதம், நம்பிக்கை மற்றும் இயலாமை போன்ற மனம் புண்படும் நிகச்சிகளை காட்டி காசுப்பார்ப்பதை நிறுத்தினால் நல்லது.
இறுதியாக.., விவாதத்தில் இரண்டுப்பக்கமும் திறமையாளர்களைக்கொண்டு சரியான முடிவை அறிவிப்பதுதான் நிகழ்ச்சியின் வெற்றியேத்தவிர அந்தப்பக்கம்தான் சரி, இந்தப்பக்கதையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நழுவுவது விவாத நிகழ்ச்சியும் தீர்ப்பாய்யா??? இப்படி ஒப்புக்கு சப்பாக முடிப்பதற்கு என்னத்துக்கு விவாதம் செய்யணும்???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...