Sunday, June 12, 2016

கருணாவின் கனவில் கல் விழுந்த பிறகு தேவையற்ற பிதற்றலும்

கேள்வி : பாஜக - அதிமுக கூட்டணி உருவாகிறதா? மத்திய மந்திரி சபையில் சேருகிறதா அதிமுக? என திமுக எம்.எல்.ஏ.கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளாரே?
பதில் : குட்டையை குழப்பிக்கொண்டே இருப்பதில் கருணாநிதிக்கு நிகர் அவரே. வழக்கமாக நடக்கும் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் மீண்டும் வரும். மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என கற்பனைக் கோட்டை கட்டிய கருணாவின் கனவில் கல் விழுந்த பிறகு தேவையற்ற பிதற்றலும், நடுக்கமும் அதிகமாகிவிட்டதாகவே தெரிகிறது.
ஆட்சி கனவு கனவாகிவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு அதைப்பற்றி நினைக்கவே முடியாது. அதனால் கருணாநிதியின் தற்போதைய எதிர்கால ஒரே திட்டம் மீண்டும் காங்கிரசுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சியை பிடிப்பதுதான்.
பாராளுமன்றத்தை பொறுத்தவரை 50 எம்.பிக்களுடன் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் திமுகவோ லோக் சபாவில் 0 .
அதிமுக தற்போதுவரை மத்தியில் காங்கிரஸ், பாஜக,மூன்றாவது அணி என எதிலும் சேராமல் தனித்து இயங்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் மேலிடம் பெரிய அளவிற்கு திமுகவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இல்லை.

மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட செல்வி ஜெயலலிதாவிற்கு பாஜக மட்டும் அல்லாது காங்கிரசின் சார்பில் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்தது கருணாநிதியை சற்று யோசிக்க வைத்திருக்கும். காங்கிரஸ் திமுகவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால் அதிமுக மீது பாஜக முத்திரை விழ வேண்டும். அப்போது தமிழகத்தில் எங்களை விட்டால் காங்கிரசுக்கு வேறு நாதியில்லை என சொல்வதுபோலும் ஆயிற்று, இதையே தொடர்ந்து சொல்லி வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்வரை காங்கிரசை கூட்டணியில் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நரித்தனமும் காரணம்.
இதே கதையைத்தான் கருணாநிதி 2014, 2016ல் சொன்னார். நடந்ததா?
காங்கிரசை தக்கவைத்துக்கொள்ள கருணாநிதி ஆடும் நாடகமே இந்த பாஜக அமைச்சரவையில் அதிமுக சேரும் என்ற கதை.
ஆறு மாதங்களில் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தல்வரை இதுபோன்ற அறிக்கைகளை கருணாநிதியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...