Saturday, September 10, 2016

தங்கமகன்மாரியப்பன் பற்றி: அறிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்......

1. சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். 5-வது வயதில் விபத்து ஒன்றில் சிக்கி மாரியப்பனின் வலது கால் சிதைந்தது.
2. தற்போது 20 வயதாகும் மாரியப்பன், சேலத்தில் உள்ள‌ தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
3. மாரியப்பனின் தந்தை தங்கவேல் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்; தாய் சரோஜா காய்கறி வியாபாரம் செய்கிறார்.
4. . 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தகுதி சுற்றிலேயே வாய்ப்பை இழந்தார்.
5. மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட மாரியப்பன், கடந்த மார்ச் மாதம் துனிஷியாவில் நடைபெற்ற‌ ஐபிஎல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 1.78 மீட்டர் தாண்டி ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்தார். தகுதியை தங்கவேலு பெற்றார்.
6. ரியோ ஒலிம்பிக் இறுதிச்சுற்றில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்து பெருமை சேர்த்தார்.
7. பாராலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் மாரியப்பன் பெற்றுள்ளார்.
8. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
9. ஐந்து வயதில் விபத்தில் பாதிக்கப்பட்ட மகனின் காலுக்கு மருத்துவம் பார்க்க மாரியப்பனின் பெற்றோர் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று அந்தக் கடனை இப்போது வரை கட்டி வருகின்றனர்.
10. மாரியப்பனுக்கு, தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...