Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்
Zee TVயில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்
தொடக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுக மான அர்ச்சனா, தனது
நகைச்சுவை ஆற்றலாலும், தனித் திறமைகளா லும் மெல்ல மெல்ல முன்னேறி வந்தார். மேலும் சன் தொலைக் காட்சியில் இருந்து விடுபட்டு சில தொலைக்காட்சிகளில் அவ்வப்போது தோன்றி வந்தார். கடந்த ஓராண்டுகாலமாக ஜீ.தொலைக் காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தனக்கே உரிய நகைச்சுவை உணர் வுடன் நடத்தி, ரசிகர்களை சிரிக்கவைத்து வந்தார். இந் நிலையில் இவரது திறமைக்கு மேலும் ஒரு அங்கீகாரமாக ஜுனியர் சூப்பர்ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் இயக்குநர் K.பாக்கியராஜ், நடிகை குஷ்பு ஆகியோரும் 3வது நடுவராக அர்ச்சனாவு க்கு அளித்தது ஜீ. தொலைக்காட்சி, அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சியினை தொகு த்து வழங்குவதில் விடுவித்தது. இவருக்கு பதிலாக கமல், மற்றும் மகேஷ்வரி ஆகிய இருவருக்கு இந்த வாய்ப்பு தர ப்பட்டு, அவர்களும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள்.
அர்ச்சனா அவர்களின் அபாரதிறனுக்கும் நகைச்சுவைக்கு கோடானகோடி ரசிர்களில் நானும் ஒருவன்தான் என்றாலும், விநயாகர் சதுர்த்தி (இன்றைய) தினத்தில் நட்சத்திர கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை Mr. அண்டு Mrs. கில்லாடி அணியும், ஜூனியர் சூப்பர்ஸ்டார் இணைந்து கலக்கும் நிகழ்ச்சியாக தொடங்கியது. ஆனால் தொடங்கிய சில மணி த்துளிகளிலேயே ஒரு ஆபாசம் நிகழ்வு நடந்தே றியது ஒரு கவலைக்குறிய அதே நேரத்தில் கண்டனத்திற்கு உரிய விஷயமே.
அர்ச்சனாவிற்கு பிறகு அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு ம் இருவரில் ஒருவரான கமல் என்பவரை அரங் கத்தின் நடுவே அழைத்த அர்ச்சனா, அவர் உடுத் தியிருந்த வேட்டியை உருவி, என்னடா இது வேட்டி, உள்ளே பட்டாப்பட்டி போட்டுத்தான் பார் த்திருக்கேன், இதுஎன்ன ட்ரவுசர் எனகேட்கிறா ர். இக்காட்சியை அரங்கத்தில் உள்ளவர்கள் சிரி க்கின்றனர். அதுமட்டுமல்ல, ஜீ தொலைக்காட்சி யை பார்த்துக் கொண்டிருக்கும் பல லட்சோப லட்ச மக்கள் பார்துள்ளனர்.
இதே ஒரு பெண்ணை, ஒரு ஆண், இதேபோல் அவர் அணிந்திருந்த ஆடையை உருவி இவர் கேட்டதுபோல் கேட்டிருந் தால், அவ்வளவுதான் மாதர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியிருக்கும் ஊடக உலகமே கொதித் தெழுந்திருக்கும். அந்த ஆண்மீது ஈவ் டீசிங் வழக்கு பாய்ந்து, சிறை வாசம் அனுபவித்திரு ப்பார்.
ஒரு பெண்ணை, ஆண் மானப்பங்கப்படுத்து வதை நான் இங்கே நியாயப் படுத்தவில்லை. அது தண்டனைக்குரிய குற்றம் என்பதை நான் இங்கு மறுக்கவுமில்லை. ஆனால் அதேநேரத் தில் ஒரு ஆணை, ஒரு பெண் மானப்பங்கப் படுத்துவதை வாய்மூடி மௌனமாக இருக்கவும் நான் விரும்ப வில்லை.
ஒரு பெண்ணுக்கு மானம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒருஆணுக்கும் மானம் என்பது அதே அளவுக்கு முக்கியம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த அவச்செயலை செய்த அதிர்ஷ்ட லட்சுமி அர்ச்சனாவிற்கு விதை2விருட்சம் தனது கடுமை யான கண்டனத்தை தெரிவிக்கிறது.
(வாசக பெருமக்களே,
இதுபோன்று ஆண்களை மானப்பங்கம் செய்யும் செயல் இனி தொடராமல் இருக்க, நீங்களும் உங்கள் கண்டனங்களை நாகரீ கமாக Commentஎன்ற பகுதியில் தெரிவியு ங்கள். தயவுசெய்து அநாகரீக வார்த்தைக ள் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment