பெங்களுர் தமிழன் சந்தோஷை அவர்கள் அடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நம்முடைய அணுகுமுறையால்,டெல்லியில் உச்சநீதி மன்றம் ஒவ்வொரு கன்னடகாரனின் தலையில் கொட்டி இன்னும் சில ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க சொல்லி மரசுத்தியலில் அவன் மண்டையில் அடித்தது.மறு சீராய்வு மனு குப்பைத் தொட்டியில் உரமானது.இந்தியாவின் தலை சிறந்த வக்கீல் நாரிமன் இருந்தும் அவர்களின் கதை நாறிப்போனது.
காரியம் பெரியதா? வீரியம் பெரியதா? கன்னடர்கள் வீரியம் என்றார்கள்.தமிழர்கள் காரியம் என்றார்கள்.அதனால் தான் நாம் காவேரியில் தண்ணீர் பெற்றோம்.அவர்கள் டயரை கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தண்ணீரா வேண்டும்? மூத்திரம் குடி என்றார்கள்.காவேரி அங்கு பிறந்தாலும் அதில் நாகரீகம் கற்காத கன்னடர்கள்.அவன் இனத்திற்கு நாம் டெல்லியில் மனு மீது மனு போட்டு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறோம்.காவேரி நமக்கு சில நேரங்களில் பொய்த்திருக்கிறது.நாம் காவேரியை பழித்தது இல்லை.
அவன் நம்மை நோக்கி செருப்பை காட்டிக் கொண்டிருக்கிறான்.அவனுக்கு தெரியாமல் அவன் முதுகெலும்பை நாம் ஒடித்துக் கொண்டிருக்கிறோம்.இந்த மாதத்தில் அவன் இரண்டு பொது வேலை நிறுத்தம் செய்திருக்கிறான்.நஷ்டம் என்பது ஆயிரம் கோடிகளில் தாண்டி நிற்கிறது. அந்த பணத்தில் அவன் மாண்டியா விவசாயிகளை பட்டு வேட்டியில் அழகு பார்க்கலாம்.ஆனால் மூர்க்கத்தனமாக நடவடிக்கையில் அவனின் கோமணம் நழுவிக் கொண்டிருக்கிறது.
இன்று அவன் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. இன்று அவன் நிம்மதியாக இல்லை.இன்று அவன் உச்சநீதி மன்றத்தால் கண்டிக்கப் படுகிறான். இன்று அவன் அமெரிக்க அதிபரால் கண்காணிக்க படுகிறான்.புதிய முதலீடுகள் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை.கலவர பூமி என்று உலகம் முழுவதும் செய்தி பரவிவிட்டது.இப்போதைக்கு ஒரு பீடி சிகரெட் கடை கூட அந்நிய முதலீட்டுகாரன் கிள்ளி போடமாட்டான்.
அவன் எதை தின்றால் பித்தம் தெளியம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறான்.வன்முறை என்கின்ற புலி வாலை பிடித்துவிட்டு அதற்கே பலியாகி கொண்டிருக்கிறான்.அவன் முதல்வரே அவனை சுட்டு விழுத்த ஆர்டர் பிறப்பித்து இருக்கிறார்.
திரும்பி அடிப்பது தான் வீரம்.அது உண்மைதான்.புத்திசாலித் தனமாக அவன் விரல்களை கொண்டு அவன் கண்களையே குத்தவிடுவதும் ஒரு சாதுர்யமான வீரமே.
அவனுக்குள் விழித்துக் கொண்டிருக்கும் மிருகத்தை நம் புத்தியால் எப்போதும் பலிபோடுவோம்.
No comments:
Post a Comment