Monday, September 19, 2016

"தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும்

ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சி யோடு வாங்கிசெல்கின்றனர். இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்கமுடியமுடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!
மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!
குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!
திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...அவரை தடுத்து நம் செம்மல் கூறியதாவது : "நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...
திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா அவர்களுக்கு ப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...