Saturday, September 10, 2016

உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாப்பது எப்படி

இரவு கண் விழித்துக் கொண்டிருப்பதால், அதிக நேரம் புத்தகம் படிப்பதால், மன அழுத்தம், வயதாகும்போது, வெளிச்சம் மிகுந்த ஒளியில் தொடர்ந்து கண்கள் படும்போது என பலக் காரணங்களால் கருவளையம் வருகிறது. இறந்த செல்கள் கண்களுக்கு அடியில் குவியும்போது அங்கே கருமை படர்கிறது. அதனை போக்குவது எளிதுதான். 

கண்களுக்கு போதிய பயிற்சி தருவது மிக முக்கியம். இதனால் நரம்புகள் ஊட்டம் பெற்று ரத்த ஓட்டத்தை கண்களுக்கு அளிக்கின்றன. இது பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்து கருவளையத்தை போக்குகின்றன. 

இப்போது உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.

* உருளைக் கிழங்கின் சாற்றையும், வெள்ளரிக்காய் சாற்றையும் சமஅளவில் எடுத்து கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே கண் மூடி படுக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் படிப்படியாக உங்கள் கருவளையம் மறைந்து கண்கள் பிரகாசமாய் தோன்றும். 

* பாதாம் எண்ணெய் 5 துளிகள் எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கருவளையத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அற்புத பலன்களைத் தரும். 

உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாப்பது எப்படி?

* புதினா சாறை பிழிந்து அதனுடல் தக்காளி சாற்றினை கலந்து கண்களுக்கு அடியில் தடவவும். லேசாக காய்ந்ததும் கழுவி விடவும். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்தால், சருமம் பாதிப்படையும். ஆகவே லேசாக காய்ந்ததும் கழுவிவிடலாம். இது போல் வாரம் 2 முறை செய்து பாருங்கள். கருவளையம் காணாமல் போய்விடும். 

* மோர் 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கருவளையம் விரைவில் மறைந்து விடுவதை காணலாம்.

- இந்த குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாத்திடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...