Thursday, September 8, 2016

உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்

அந்த பொம்பள வந்தாலே எப்பவும் நம்ம கூட பிரச்சனைதான்.காவேரிக்கு கொஞ்சமும் சம்பந்தப்படாத வட கர்நாடக மாவட்டமான ஷிமோகவில் கூட ஜெயலலிதாவை இப்படிதான் கன்னடர்கள் திட்டுவார்கள்.கர்நாடகத்தில் தமிழக தலைவர்களில் ஜெயலலிதாவின் உருவபொம்மையை மட்டும்தான் கன்னடர்கள் அதிக அளவில் எரித்திருப்பார்கள்.ஏன்றென்றால் ஒவ்வொருமுறையும் உச்ச நீதிமன்றம் மூலம் அதிகளவில் செக் வைத்து காவேரியை மடை திறக்க வைத்தது ஜெயா மட்டுமே.
பங்காரப்பா வீரப்பமொய்லி தேவகவுடா முதல்வர்களாக இருந்த காலம் தொட்டு காவேரி தீராத பிரச்சனைதான் நமக்கு.காவேரி என்பது நதி என்பதை தாண்டி,காவேரி என்பது தண்ணீர் என்பதை தாண்டி,காவேரி என்பது அந்தஸ்து என்பது போல் கன்னடர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்.குறைந்தது 100 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைத்து கொள்வது அவர்களின் அணைகளின் அந்தஸ்து.அவர்கள் கொடுக்கும் இடத்தில் இருப்பதால் தங்களை வள்ளல் போல் கெளரவமாக பாவித்துக் கொள்கிறார்கள்.இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகளுக்கு பிறகு அதிகளவில் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தைகள் காவேரி விவகாரமாக தான் இருக்கும்.
மூன்று மாநிலத்திற்கு பொதுவான(பாண்டிச்சேரிக்கும் காவேரியில் பங்குண்டு) நதியை ஒரு வடிக்கால் கால்வாய் போல் மழை காலத்திற்கு மட்டும் திறந்து விட்டு மற்ற பருவத்தில் தங்கள் தரப்பின் நியாயத்தை எடுத்துரைப்பது நியாயமாகது.பிற மாநிலத்திற்கான தண்ணீர் பங்குகளை தராமல் ஒரு மாநிலம் மட்டும் சேகரித்து வைத்துக் கொள்வது நீர் மேலாண்மை இல்லை.அதற்கு பெயர் அடுத்தவர்களின் வயிற்றில் அடிப்பது.ஏமாற்றுதல்.ஒப்பந்த ஒருமைப்பட்டை மீறுவது என்பதாகும்.
நம்முடைய டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களுக்கு ஏற்ப மேட்டூர் அணையின் கொள்ளளவு இருக்கிறது.இதுப்போக டெல்டா பாசன பகுதிகளில் சிறிய தடுப்பணைகள் இருக்கிறது.புதிய அணைக்கட்டுகள் என்பது பாசன வசதிகளை பொறுத்துதானே தவிர,அணைகள் கட்டி மொத்த நீரையும் தேக்கி வைத்துக் கொள்ளும் பேராசை அல்ல.உபரி நீர் என்பது வெளியேற்றினால் மட்டும் ஆற்றின் வழித்தடம் உயிரோட்டமாக இருக்கும்.ஆங்காங்கே அணைகளை கட்டிக்கொண்டால் நதி என்பது அங்கங்கே தேங்கிய நீர்குட்டைகளாக மாறி போகும்.இது நீங்கள் வேண்டுமானல் அணைகள் கட்டி நீரை சேமிக்க வேண்டியதுதானே என்பவர்களுக்கு.
உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் வேறு விவகாரங்களை காவேரி பங்கீட்டை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.நடுவர் மன்ற தீர்பை மதித்து காவேரியில் தண்ணீரை திறக்க வேண்டியது கர்நாடகத்தின் கடமை.அதை செய்ய தவறினால் தட்டிக்கேட்பது நமது உரிமை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...