Friday, September 30, 2016

இதுதான் ஸ்திதி....

ஒரு முறை பழைய ஹாலில் மராமத்து வேலைகள் நடந்தன....
அப்போது பகவான் ஆசிரமத்தின் எதிரில் உள்ள கல் மண்டபத்தில் தங்கினார்....
ஒரு நாள் காலை அந்தப் பகுதியில் ஒரு விறகு வெட்டி விறகு வெட்ட ஆரம்பித்தான்.... உச்சி வேளை வரை வேலை செய்தான்.... பிறகு தான் கொண்டு வந்த உணவை ஒரு மரநிழலை அமர்ந்து உண்டான்....
அம்மர நிழலிலேயே ஓய்வாக்ச் சாய்ந்திருந்தான்....
அதைக் கவனித்து , அருகில் இருந்தவர்களிடம் அவனைச் சுட்டிக் காட்டி , “ இந்த விறகு வெட்டி இப்போ ஓய்வாக மர நிழலில் சாய்ந்திருக்கிறான் , பாருங்கோ. இதுதான் ஸ்திதி இப்படித்தான் நான் இருக்கேன் , ” என்றார்......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...