நீங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா?
கிரிடிட் கார்டு பயன்படுத்து பவரா?
பங்கு சந்தையில் முதலீடு செய் பவரா?
சொத்துக்கள் வாங்குபவரா?
அப்படியானால், நீங்கள் வரு மான வரித்துறையின் கண்கா ணிப்பு வளையத்துக்குள் வருவ து நிச்சயம்.
கணக்கில் வராத பணபரிமாற் றத்தை கட்டுக்குள் கொண்டு வர வருமான வரித்துறை உங்கள் நடவடிக்கைகளை கண்காணி க்கலாம்.
அதுசரி…, உங்களைப் பற்றிய ரகசியங்களை வருமான வரி துறைக்கு கசிய விடுவது யார்? என்ற சந்தேகம் வருகிறதா?
இதில் முதலில் வருவது உங்கள் பான் எண். பொதுவாக எந்த பணப்பரிமாற்றத்தின் போதும் பான் கார்டு எண் விவரங்க ளை தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. எனவே நீங்கள் எந்த பிரிவி ன் கீழ் பணப்பரிமாற்றம் செய் தாலும் அதன் விவரங்கள் உங்கள் பான் எண்ணுடன் தொகுக்க ப்பட்டு விடும்.
மேலும், நீங்கள் பணப்பரிமாற்றம் செய்யும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகளில் செய்யும் முதலீட்டு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடும் வர்த்தக நிறுவன ங்கள், சொத்து விவரங்களை பதிவு செய்யும் பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் இவர்கள் தான் உங்கள் நிதி நடவடிக்கை கள் குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்கு தெரிவி ப்பவர்கள். தனித்தனி யாக வரும் இந்த தக வல்கள் அனை த்தும் உங்கள் பான் எண் அடி ப்படையில் தொகுக்கப் பட்டு உங்கள் நிதி பரி மாற்றங்கள் அனை த்தும் கண்காணிக்கப்ப டும்.
சரி, எப்போதெல்லாம் நீங் கள் இந்த கண்காணிப்பு வளைய த்துக்குள் வருகிறீர்கள்? என்று தெரிந்து கொள்ள விரும்பு கிறீர்களா?… இதோ அதன் விவரங்கள்:-
வங்கி சேமிப்பு கணக்கு:
உங்கள் வருமானத்துக்கு அதிகமாக வங்கி சேமிப்பு கணக் கில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்கிறீர்களா? அப்போது நிச்சயம் கண்காணி ப்புக்கு ஆளாவீர்கள். இந்த பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்தாலும் சரி அல்லது ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ் சமாக 10 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும் சரி.
அதே நேரம், ஆண்டொன்றுக்கு நீங் கள் டெபாசிட் செய்யும் தொகை ரூ 10 லட்சமாக இருந்து, எடுக்கும் தொ கையும் ரூபாய் 10 லட்சமாக இரு க்கும் பட்சத்தில் நீங்கள் கண்கா ணிப்பு வளையத்திற்கு வெளியே வந்து விடுவீர்கள்.
மேலும் உங்கள் வருமானம் எவ்வ ளவு?, அந்த வருமான த்துக்கு அதிக மான பணம் உங்கள் வங்கிக் கண க்கில் உள்ளதா? அப்படி பணம் இருந் தால் அந்த பணம் எவ்வாறு வந் தது? அந்த பணத்திற்கு உரிய கணக்கு உள்ளதா? அந்த பண த்தை எடுத்து நீங்கள் என்ன செலவு செய்கிறீர்கள்? என்று வருமான வரித்துறை விசாரிக்கலாம்.
எதற்கு இந்த பிரச்சனை? பேசாமல் பணத்தை கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் போட்டு வைத்தால் என்ன?, யாருக்கு தெரியப்போகிறது என்று எண்ணுகிறீர்களா? அப்போது ம் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். அ தாவது, வருமான வரி துறையின் விதிகளுக்கு கூட்டுறவு வங்கிகளு ம் விலக்கல்ல. அந்த வங்கிகளும் தங்களிடம் கணக்கு வைத்திருப்ப வர்கள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என் பது விதியாகும்.
கிரிடிட் கார்டு:
ஆண்டொன்றுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கும் அதிகமாக கிரி டிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்கிறீர்களா?. அப்படி என்றா ல் உங்கள் கிரிடிட் கார்டு செலவு குறித்த தகவல்களை, உங்களு க்கு கார்டு வழங்கிய வங்கி அல் லது நிறுவனம் உங்களை பற்றிய தகவல்களை வருமான வரி துறைக்கு தெரிவித்துவிடும்.
இதன் மூலம் உங்களது கிரிடிட் கார்டு செலவு கள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத் துக்குள் வந்துவிடும். கிரிடிட் கார்டு மூலம் செலவு செய்த பணத்தை எவ்வாறு திரு ப்பி செலு த்துகிறீர்கள். இதற்கான பணம் எங்கிருந்து, எப் படி வந்தது என்ற தகவல் களை வருமான வரித் துறை கிளற ஆரம்பித்து விடும்.
அசையா சொத்துக்களில் முதலீடு:
இது எதற்கு வம்பு, பேசாமல் கையில் உள் ள பணத்தை அசையா சொத்துக்களில் முத லீடு செய்தால் என்ன… ? என்று நீங்கள் நினைக் கலாம்.
30 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத் துக்களை வாங்கினா லும், விற்றாலும் சம்பந்தப்பட்ட பதிவாளர் மூலமாக உங்கள் பணப்பரிமாற்ற விவரங்கள் வருமான வரித் துறையை சென்றடைந்துவிடும்.
பங்கு சந்தை முதலீடு:
பங்குச்சந்தையில் பல் வேறு பிரிவுகளில் நாம் முதலீடு செய் ய முடியும். அதாவது நேரடி பங்கு முதலீடு, கடன் பத்திரங் களில் முதலீடு, குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அமலில் இருக் கும் பாண்டுகளில் முதலீடு என்று ஒருவர் முதலீடு செய் யலாம்.
இதில், நேரடி முதலீட்டு பங்குகளிலோ அல்லது உரிமை பங் குகளிலோ முதலீடு செய்கிறீர்களா? அப்படியானால் ரூபாய் 1 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.
அதேபோல கடன் பத்தி ரங்கள், பாண்டுகளில் முத லீடா?… ரூபாய் 5 லட்சம் வரை தகவல் பரிமாற்ற பிரச்சனை யிலிருந்து விடுதலை.
பங்கு சந்தை மூலமாக நடைபெறும் அனைத்து வர்த்தகமும் ஏற்கனவே இந்த வளையத்துக்குள் வந்துவிட்டது.
மியூச்சுவல் பண்டு
மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளில் முதலீடென்றால் ரூபாய் 2 லட்சம் வரை என்றால் தப்பித்தீர்கள்.
அதே நேரம், பங்கு சந்தை மூல மாக பரிவர்த்தனையாகும் மியூச் சுவல் பண்டு யூனிட்டுகளில் முத லீடு செய்தாலும் நீங் கள் கண் காணிப்பு வளையத்துக்கு வரமா ட்டீர்கள்.
அடுத்து, ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன் பத்திரங்களில் ரூபாய் 5 லட்சம் வரை முதலீடு செய்தாலும் வருமான வரித் துறையின் ராடாருக்குள் சிக்க மாட்டீர்கள்.
இதை எல்லாம் படித்த பின்னர், எந்த முறை யில் உங்கள் வருமானம் இருக்கிறது என்பதை யும், அதை எப்படி, எந்த துறையில் முதலீடு செ ய்ய வேண்டும் என்ப தை யும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எது எப்படி இருந்தாலும், அரசின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு நமது பணப்பரிமாற்றம் இருந் தால் நிம்மதியாய் இரவு உறக்கம் வரும்.
No comments:
Post a Comment