Friday, September 9, 2016

"காவிரியில் தண்ணீர் திறக்க கன்னட நடிகர்கள் எதிர்ப்பு: கபாலியின் கருத்து என்ன?"

இந்திய தேசத்தின் உச்சமான அரசியல் சாசன அமைப்பு உச்சநீதிமன்றம். காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவு தண்ணீரை திறக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு வெற்றிகரமாக நடக்கிறது.
-------------------------
"கன்னட நடிகர்கள் போராட்டம்"
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் இன்று கன்னட சினிமா நட்சத்திரங்களின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றுள்ளது. இதில் கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், ரமேஷ் அரவிந்த், ஜக்கேஷ், உபேந்திரா, நடிகைகள் தாரா, ஸ்ருதி, ராகினி திவேதி, பாரதி விஷ்ணுவர்த்தன், லீலாவதி உள்ளிட்டோர் பங்கேற்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசியுள்ளனர். 53 தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
-------------------------
"கபாலியின் கருத்து என்ன?"
இந்நிலையில், கபாலி திரைப்படத்தில் மலேசிய தமிழர்களுக்காக போராடிய நடிகர் ரஜினிக்காந்த் அவர்களின் கருத்து என்ன? நடிகர் விஷால் தலைமையிலான நடிகர் சங்கத்தின் கருத்து என்ன? தமிழ்த்திரையுலகினரின் கருத்து என்ன? என்பதை தெரிந்துகொள்ள தமிழக மக்கள் ஆவலாக உள்ளனர்.
இது தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல், உரிமைப் போர் என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் - இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பது, இந்திய தேசப்பற்றுக்கு எதிரானது இல்லையா?
இப்போதாவது, ரஜினிக்காந்த் அவர்களும், திரைத்துறையினரும் தமது இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும். இந்திய உச்சநீதிமன்றத்துக்கு ஆதரவாக பேச முன்வர வேண்டும்.
--------------------------

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...