Wednesday, September 7, 2016

நம்முடைய கவனம் சிதறும்போது, நாம் தவறு இழைக்க வாய்ப்பிருக்கிறது.



அந்த விமான நிலையத்தில், குறிப்பிட்ட ஏர்லைன்ஸ் ஒன்றின் விமானம் தாமதாமாகப் புறப்படும் என்று அறிவித்தார்கள். ஒரு பெண்மணி சூடாக ஒரு கப் காப்பியும், ஒரு பாக்கெட் பிஸ்கெட்டும் வாங்கி கொண்டு, ஹாலில் உள்ள நாற்காலியொன்றில் அமர்ந்தார். ஹால் முழுவதும் உள்ள இருக்கைகளில் மனிதர்கள் நிரம்பியிருந்தார்கள்.
பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் காப்பியைப் பருகினார். திடீரென பக்கத்து சீட்டில் இருந்த வாலிபன் இரண்டாவது பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டான். அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒருவிதப் பதட்டத்துடன், தன கையில் வைத்திருந்த புத்தகத்தில் மூழ்க ஆரம்பித்தார்.

சில மணித்துளிகளுக்கு அப்புறம், அந்தப் பெண்மணி மூன்றாவது பிஸ்கெட்டினை எடுத்து சாப்பிட்டார். அந்த வாலிபன் நான்காவது பிஸ்கெட்டினை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, கடைசி பிஸ்கெட்டை அந்தப் பெண்மணியினை நோக்கி நீட்டினான்.
அந்தப் பெண்மணியால் தாங்கமுடியவில்லை. மிகவும் கோபத்துடன் இருக்கையை விட்டு எழுந்து, அந்த வாலிபனை, ஒரு பூச்சியினைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, செக்யூரிட்டி பரிசோதனைக்காக சென்றார்.
சில மணித்துளிகளுக்கு அப்புறம் விமானத்தில் ஏறும்போது பரிசோதனை செய்தவரிடம், டிக்கெட்டைக் காண்பிப்பதற்காக தன்னுடைய கைப்பையைத் துழாவியபோது, அவர் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட் பிரிக்கப்படாமல் இருந்தது. !
நம்முடைய கவனம் சிதறும்போது, நாம் தவறு இழைக்க வாய்ப்பிருக்கிறது.
நாம் நினைப்பது அல்லது செய்வது எல்லாம் சரி என்று நினைக்கிறோம்.
அது தவறாகவும் இருக்கலாம் என்பதுதான் சரி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...