Thursday, September 8, 2016

ஸ்டான்லி மருத்துவமனையில் தோல் வங்கி..



இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரூ.70 லட்சம் மதிப்பில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய்துள்ளனர். தீ, அமிலம், மின்சாரம், ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் வங்கியில் இருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
மூளைச்சாவு, இயற்கை மரணம் அடைந்தவர்களிடம் இருந்து முதுகு, பின்னங்கால் மற்றும் பின்னால் தொடையில் தோல் பெறப்பட்டு உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்படுகிறது. அந்த தோல்கள் தீ, அமிலம், மின்சாரம், ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வங்கியில் இருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இதுகுறித்து மருத்துவமனை டீன்டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறியதாவது:"நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கப்பேடு லட்சுமிநகரை சேர்ந்த சித்ரா (41) என்பவரின் உடலில் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவருடைய தோலும் தானமாக பெறப்பட்டது.

அதேபோல இயற்கையாக மரணம் அடைந்த மற்றொருவரிடம் இருந்தும் தோல் தானம் பெறப்பட்டுள்ளது. தோல் வங்கி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய்துள்ளனர்.
தற்போது மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந்தவர்களிடம் இருந்து மட்டும் தோல் தானம் பெறப்படுகிறது. வரும் காலத்தில் உயிருடன் இருப்பவர்களிடத்தில் இருந்தும் தோல் தானம் பெறப்படும்.
மேலும் தோல் வங்கி விரைவில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும் தொடங்கப்பட உள்ளது. தீக்காயத்திற்கு தனி சிகிச்சை பிரிவு இங்கு உள்ளது. தோல் வங்கி அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டன " என்று அவர் கூறினார்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...