Wednesday, September 21, 2016

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.
ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.
மஞ்சள் கருவில் விட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.
முட்டையில் இயற்கையாகவே விட்டமின், 'பி12' மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் விட்டமின்கள் உள்ளன.
இந்தச்சத்துகள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை.
முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின், 'டி' முட்டையில் உள்ளது.
அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் 'ஈ' மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.
செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற நுண்ணூட்டச் சத்தும் முட்டையில் உள்ளது.
மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும் 185 மில்லி கிராம் உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதய நோய், சர்க்கரை நோய் பிரச்னை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம்.
கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...