Tuesday, September 13, 2016

வினோதமான தேர்வு வைப்பாராம்.

சாக்ரடீசிடம் நிறையப் பேர் தம்மை சீடராக்கிக் கொள்ளனும்னு தேடி வர்றதுண்டு. அப்போ சரியான சீடனைத் தேர்வு செய்ய அவர் ஒரு வினோதமான தேர்வு வைப்பாராம்.
வந்தவர்கிட்ட அவர் ஒரு குளத்தை காட்டி அதில் என்ன தெரிகிறது? ன்னு கேட்பார். அதுக்கு அவன் சொல்லும் பதிலை வைத்தே சீடனைத் தேர்ந்தேடுப்பாராம். அவர் எப்படித் தேர்ந்தேடுக்கிரார்னு யாருக்கும் புரியவில்லை.
நண்பர் ஒருத்தர் அவர்கிட்ட இதுபற்றி விபரம் கேட்டாரு. சாக்ரடீஸ் ரொம்ப சாதாரணமாச் சொன்னாராம். அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நண்பரே! நான் குளத்தில் நீந்தும் மீன்களை பார்க்கிறேன் என்று சொல்பவர்களை எனது சீடராக ஏற்றுக் கொள்வேன். அதற்கு மாறாக தண்ணீர் தெரிகிறது. அதில் எனது முகம் தெரிகிரதுன்னு சொல்பவர்களை நான் நிராகரித்து விடுவேன்.
ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். தன்னையே மறக்காத ஒருவர் பிறரையும் மற்றவற்றையும் கண்டறிய முடியாதுன்னாராம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...