Friday, August 25, 2017

சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டம் கிடைத்த கோவில்.

கும்பகோணத்தை சுற்றி உள்ள சோழ மன்னர்களின் பல கோவில்கள் கவனிப்பார் இன்றி கிடக்கின்றன. அந்த வகையில் தலவரலாறு சுவடிகள் கூட இல்லாமல் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவில் இந்து அறநிலையதுறையின் கீழ் உள்ளது. கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 9 km தொலைவில் உள்ள சோழபுரம். இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் ராஜகோபுரம் இன்றி மொட்டை கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இறைவன் பெயர் கைலாசநாதர், இறைவி சிவபூரணி அம்மன். தஞ்சை பெரிய கோவில் அமைப்பில் கோவில் அமையப்பெற்றுள்ளது. சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டம் கிடைத்தது இந்த கோவிலில் தான் என்று கூறப்படுகிறது. மகாலெட்சுமிக்கு தனி சன்னிதி குருபகவானுக்கும் தனி சன்னிதி உள்ளது. துர்க்கை அம்மன் அஷ்ட பஜங்களுடன் 5 அடி உயரத்தில் காட்சி தருகிறாள். எல்லா இறைவனின் சிற்பங்களும் மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் கொண்ட இக்கோவில் அரசின் ஒருகால பூஜை திட்டதில் உள்ளது. சிவ பக்தர்கள் தன்னார்வலர்கள், பொது மக்கள் சேர்ந்து இந்த பொக்கிஷமான கோவிலை பாதுகாக்கலாம். கோவிலை சுற்றிலும் பிற மதத்தினரின் குடியிருப்புகள் உள்ளன. இருப்பனும் கோவிலை பற்றிய விபரங்களை கூறுகின்றனர். புல் புதர் மண்டி பிரகாரம் உள்ளது. வருமானம் தான் முக்கியம் என அரசாங்கம் உள்ளதால் இது போன்ற பொக்கிஷங்களை பராமரிக்க அரசுக்கு மனம் வருவதில்லை. இக்கோவிலுக்கு அருகிலேயே பைரவர்களுக்கு தலைமை பைரவர ்ஸ்தலம் உள்ளது. நான் சென்ற சமயம் பைரவர் கோவில் மூடப் பட்டிருந்தது. இருபுறம் வீடுகளுக்கு இடையில் பைரவர் கோவில் அமைந்துள்ளது. கைலசநாதர் கோவிலுக்கு சென்றால் வெளியே வர மனம் வராது. அனைவரும் தரிசிக்க வேண்டிய ஸ்தலம். கோவிலை மேன்மை படுத்த அறநிலையதுறை முன்வரவேண்டும். ( வருமானம் வந்தால் கஜானாவிற்கு அள்ளி செல்ல வந்துவிடுவார்கள்).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...