Sunday, August 20, 2017

விவரம் தெரியாமல் உளறுகிறான் வெற்றிவேல்.

சசிகலா, இளவரசி உடமைகள் போயஸ் கார்டனுக்குள் இருப்பதால் போயஸ் கார்டனுக்குள் யாரும் நுழையமுடியாது. மீறி நுழைந்தால் என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். எடப்பாடி அரசு என்ன வீட்டைகாலி செய்யும் வேலையை செய்கின்றதா? - வெற்றிவேல்.
Mr. Vertivel அவர்களே,
சசிகலாவும், இளவரசியும் போயஸ் கார்டன் வீட்டில் புரட்சிதலைவி அம்மாவிற்கு பணிவிடை செய்ய உடன் இருந்தவர்கள். உடன் இருந்ததன் காரணத்தினால் வீடு அவர்களுக்கு சொந்தமாகாது. மேலும் அந்த இல்லம் இதயதெய்வத்திற்கு சொந்தமான Trust பெயரில் உள்ளது. இதயதெய்வம் அம்மா அவர்கள் மறைந்து 8மாதங்கள் கடந்த நிலையிலும் வீட்டை காலிசெய்யாமல் கட்டபஞ்சாயத்து நடத்திக்கொண்டிருப்பவர்கள் நீங்கள் தான்.
ஒருத்தர் வீட்டல் வாடகை இருப்பவர் நீண்டநாட்களாக வீட்டிற்கு வராமல், வாடகையும் கொடுக்காத பட்சத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் கிராமநிர்வாக அதிகாரி(VAO) மற்றும் வருவாய்துறை அதிகாரி(RI) உதவியுடன் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றது என்பதை பட்டியலிட்டு அருகில் உள்ள காவல்நிலையத்தில் அந்தபொருட்களை ஒப்படைக்கலாம் என்பது சட்டம்.
இங்கு சசிகலா வீட்டுஉரிமையாளரும் கிடையாது, வாடகைதாரரும் கிடையாது.
அவர்களது உடைமைகளை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த சட்டசிக்கலும் கிடையாது.
இப்படிஇருக்கும் நிலையில் அரசாங்கம், அனைவரும் தெய்வமாக வணங்கிய ஒரு அரசியல் சகாப்தம் இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் தமிழக அரசின் செயலை யாராலும் தடுத்திடமுடியாது. உரிமையும் கோறமுடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...