Tuesday, August 22, 2017

வாந்தி எடுப்பது கல்வியா?

உலக தர வரிசை பட்டியலின் முதல், 200 பெயர்களில், இந்திய பல்கலைக்கழகம் ஒன்று கூட இடம் பெறவில்லை. சீனாவின், ௧௦ பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன; இதையெல்லாம், நாட்டின் கல்வியாளர்கள் ஆராய வேண்டாமா... கல்வியில் நிலவும் குறைபாடுகள் நீங்க வழிகள் தான் என்ன...நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டாகி விட்டது. 'டெங்கு' காய்ச்சல் போன்று பாதிக்கப்பட்டு முடங்கிய உயர் கல்வியை, நிலவேம்பு கஷாயம் போல் கடுமையான நடவடிக்கை மூலம் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு, கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் தேவை; தகுதியான ஆசிரியர்களின் அறிவு திறனை ஆராய்ந்து, உயரிய பதவிகளில் அமர வைக்க வேண்டும்!
எல்லா துறைகளிலும், மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது, சீனா. அங்கு, ஆரம்ப பள்ளி முதல், பல்கலை வரை தாய்மொழியான சீன மொழியில் தான் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பாடங்களின் சாரத்தை புரிந்து கொள்கின்றனர்.நம் கல்வித் துறையில் பாடத்தை புரிந்து படிக்கும் வகையில் எளிமைப்படுத்தப்படவில்லை. பாடங்களை மனப்பாடம் செய்து, வெள்ளை தாளில் வாந்தி எடுப்பது கல்வியாக கருதப்படுகிறது. தாய் மொழியில் கல்வி கற்பதை கூட பலர் எதிர்க்கின்றனர். அன்னிய நாட்டு மொழியான ஆங்கிலத்தில் அரைகுறையாக கற்பதை கல்வி என, பீற்றிக் கொள்கின்றனர்.
தமிழகத்தில், பல்கலை துணைவேந்தராக வருவோர், உலகளவில் புகழ் பெற்றுள்ள இதழ்களில் எழுதிய கட்டுரைகள் எத்தனை; உள்நாட்டு நாளிதழில் எத்தனை கட்டுரைகள் தான் எழுதி உள்ளனர் என, பட்டியலிட்டு காட்டுங்கள்... பார்ப்போம்!அரசியல்வாதிகளின் துணையுடன், பல்கலை துணைவேந்தராக வந்தால், கல்வி எப்படி உருப்படும்... பல்கலையில் நியமிக்கப்படும் துணைவேந்தர், அதற்கான தகுதியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நபர்கள், இனி பிறந்து தான் வர வேண்டும் என, ஆய்வு குழு கருதினால், பேசாமல் சசிகலாவின் உறவினர்களையே துணைவேந்தராக நியமித்து விடுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...