Thursday, August 31, 2017

தில்லு_முல்லு_தினகரன்_ஆதரவு_MLAக்களின்_கடிதம்_கூறுவது_என்ன???

ஆட்சி கவிழ்ப்பை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விரும்பவில்லை..என்பதையே இந்த கடிதம் அம்பலப்படுத்துகிறது...
ஆட்சி மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி கலைக்க வலியுறுத்தாத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும், வெறுமனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதுதான் தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறியிருப்பதில் உள்ளது சூட்சுமம்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், அவர் சசிகலா தினகரன் விரும்பியபடி நடக்கவில்லை என்பதால் தாங்கள் அவர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்
இந்த கடிதத்தின் மூலம் அவர்கள் ஆளுநரிடம் என்னதான் கேட்க வருகிறார்கள் என்பது யாருக்குமே புரியாத புதிராகும். ஏனெனில் ஆட்சியை கலைக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கை வாக்கெடுப்பாவது நடத்த வேண்டும் என்பதெல்லாம் அந்த கடிதத்தில் இல்லை.
அரசு மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட முடியும். ஆனால், எம்எல்ஏக்கள் தங்கள் கடிதத்தில் தனிப்பட்ட ஒருவரை குறிப்பிட்டு, அதாவது முதல்வர் பதவியில் உள்ளவரை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். முதல்வரை குறிப்பிட்டால் அது மொத்த அமைச்சரவையை குறிப்பிடுவதை போன்றதாகும் என்று எம்எல்ஏக்கள் தரப்பு விளக்கம் அளிக்க கூடும். அப்படிப்பார்த்தால், மொத்தமாக அரசை கலைத்துவிடுங்கள் என்று ஈஸியாக அவர்கள் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை என்பதில்தான் உள்ளது சூட்சுமம்.
டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களுக்கும் ஆட்சி கலைவதில் விருப்பம் இல்லை என்பதையே இந்த கடிதம் சுட்டுகிறது. தேர்தலுக்கு தண்ணியாக பணத்தை செலவிட்டு வெற்றி பெற்ற எந்த ஒரு உறுப்பினருமே மீண்டும் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கவிரும்புவதில்லை. அதிலும் ஆளும் கட்சியினர் என்றால் சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவேதான் கூழுக்கும் ஆசை, மீசையிலும் ஒட்டக்கூடாது என்பது போன்ற சங்கடத்தில் சிக்கியுள்ளனர் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள்.
ஆளுநரிடம் அவர்கள் வழங்கிய கடிதம் தங்கள் ஒற்றுமையை காட்டிக்கொள்ளத்தான் பயன்படுமே தவிர அதற்கு பெரிய அளவில் வலு இல்லை. எடப்பாடி குழுவை தங்கள் சொற்படி ஆட வைக்க வேண்டும் என்பது மட்டுமே தினகரன் குழுவின் தற்போதைய எண்ணம். அதைவிடுத்து ஆட்சியை கலைப்பதால் எந்த பலனும் கிடைக்காது. நஷ்டமே ஏற்படும் என்று தினகரன் தரப்பு நினைப்பதன் வெளிப்பாடே இந்த கடிதம்.
இந்த கடிதத்தை நம்பி எதிக்கட்சிகள் இலவுகாத்த கிளியாக காத்து கிடக்கின்றன
ஆட்சி யைக்கலைக்க தினகரன் தரப்பு விரும்பாத போது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் ஆளுநரிடம் கோரிக்கை வைப்பது கேலிக்குறியதாக இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...