நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும்.
ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும்?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும்.
இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். ஆற்றில் மட்டும் கரைக்க வேண்டும்.
ஆனால் இன்று ஆற்று நீர் நிலைகளில் நீர் இல்லாததால் ஏதாவது ஒரு நீர் நிலையில் கரைத்தாக வேண்டும் என்ற சடங்கிற்காக காலத்திற்கேற்ப மாறிவிட்ட கலர் கலரான ரசாயணம் பூசப்பட்ட விநாயகர் நிலைகளை சம்பிரதயாதிற்காக வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போது சாயம், வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் நிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் தான் மாசுப்படுகிறது.
மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் காரியம், இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியதே...

No comments:
Post a Comment