Sunday, August 13, 2017

இந்தியராக கொண்டாடுவோம்.



என் நாடு.. நாளை சுதந்திர தினம்..எல்லார்க்கும் வாழ்த்துக்கள்...
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ...ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?? நல்ல பாட்டு...இப்பவும் வங்கிக்கணக்கு எண்ணை கொடு என்று கையை ஏந்தி ஸ்விஸ் வங்கியிடம் கேட்டுக்கொள்கிறோம்..
அடிமைப்பட்டிருந்தோம். சுரண்டப்பட்டோம்..ஆனாலும் சுருங்கவில்லை..
முஸ்லீம் படையெடுத்து சுரண்டிய பல பொக்கிஷங்கள். கிறித்துவ ஆங்கிலேயர் சுரண்டாதது எதுவும் இல்லை..ஆனாலும் நாம் தரம் குறையவில்ல..
இந்த மண்ணின் மகிமை விட்டுக்கொடுத்து வாழ்தல்..கூட்டுக்குடும்பமாக பாசமும் பரிவும் கலந்த வாழ்வியல் முறை.. பல நல்ல விஷயங்களை முன்னோர்கள் எளிதாக சொல்லி சென்றவர்கள்..
அன்று கட்டிய ஒவ்வொரு கோயிலும் ஒரு வரைப்படம் இல்லாமல், ஸ்கேல் இல்லாமல் எந்த அளவு சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது..
நமது நாகரீகம் தான் மிகச்சிறந்தது.. நாம் பெண்மையை போற்றுவது போல் யாரும் மதிப்பதில்லை.
ஒரு தாயின் பாசத்துக்கு எடுத்துக்காட்டு இந்திய தாய். அதனால் தான் நாம் பாரத மாதா என்கிறோம்..அவளும் நமது தீய செயல்களை பொறுத்துக்கொள்கிறாள்..
இன்றைய பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் பல்லாயிரம் வருடம் முன்பு ஏட்டில் எழுதப்பட்டன நமது நாட்டில்..
எனது நாடு எனது உயிர்.. நான் இதை மிகவும் நேசிக்கிறேன். இதன் பாரம்பரியமும், வளமும், வாழ்வியல் முறையும் என்னை மிகவும் கவர்ந்து எனக்குள் இருந்து ஆட்சி செய்கிறது.
வாருங்கள் நாளை புத்தாடை அணிந்து நமது சுதந்திர நாளை வெடிகள் (பட்டாசு மட்டுமே,,,பாம் அல்ல) தீபாவளி போல, ரம்ஜான் போல், கிறிஸ்துமஸ் போல....வேற்று மதம் என்றில்லாது ..இந்தியராக கொண்டாடுவோம்.
வாழ்க பாரத மாதா..வாழ்க என் நாடு என்றும்.
ஜெய்ஹிந்த்.Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...