Saturday, November 4, 2017

எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை.

தெருக்குறள்---வெள்ளத்துப்பால்
---------------------------------------------------------------------------------------
தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட 
வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை
---------------------------------------------------------------------------------------------
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'டினில் பின் செல்பவர்
----------
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
---------------------
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்...இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
-------------------------
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
-----------------------------
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
-------------------------
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
----------------------------
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
---------------------------------
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
----------------------------------------------
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
----------------------------------------------
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
------------------------------------------------------------
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...