Sunday, September 30, 2018

தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்.

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
1. வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
2. வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
3.காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
4.ஆரஞ்சு:
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
5.பருப்பு வகைகள்:
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
6.கோதுமை:
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7.இறால், மீன் மற்றும் நண்டு:
அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
8.தேநீர்:
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு, நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
9.பாலாடைக்கட்டி:
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
10.முட்டைக்கோஸ்:
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
முட்டைக் கோஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்...

*எது இருந்தால், எது தேவை இல்லை... ?*

உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.
உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.
உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.
உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.
உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.
உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.
உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.
உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.
உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.
உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.
உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.
உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.
*தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?*
நீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.

இப்படியே போனால் இத்தாலி போல 5 நிமிட சுகத்துக்கு திருமணம் தேவையா என்றும் பேச ஆரம்பிப்பார்கள்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் வரலாற்று சாசனத்திற்கு எதிரானது என்று
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கக் காரணம் ????
இந்த பொது நலன் வழக்கை தொடுத்த
பெண்களின் ரட்சகர்‌
பெண்ணுரிமையின் அடுத்த முண்டாசுக் கவிஞன் பாரதி யாரென பார்த்தால்
உடலும் மனமும் புல்லரிக்கிறது போங்கள் நடுநிலை நக்கிகளே !
சமூக சீர்திருத்தவாதிகளே !
அப்படி யாரப்பா அது ?
பெண்களின் சுய கெளரவங்கள் நசுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுப்பவர் யார் எனப் பார்த்தால்
இந்த பொதுநல வழக்கை தொடுத்தவர்
நவ்சத் அகமத் கான் .
என்ன ஒரு இஸ்லாமியரா என்று தானே அனைவரும் யோசிக்கிறீர்கள் ?
S Sss
Noushad Ahmed Khan
President of Indian Young Lawyers Association .
The Great
மிஸ்டர் நவ்சத் அகமத் கான் !
ஆமாம் இவர்
இந்து பெண்கள் மீது உள்ள அதீத அக்கறையில் இந்த பொதுநல வழக்கை தொடுத்தார் என்றே வைத்துக் கொண்டாலும்
அதே வழக்கை அதே அக்கறையோடு அவர் மதத்தை சார்ந்த இஸ்லாமிய பெண்களும் மசூதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றல்லவா வழக்கு தொடுத்து இருக்க வேண்டும் .
இவர் அக்கறையும்
பரிதவிப்பும்
இந்து மதத்தை சார்ந்த பெண்கள் மீது மட்டும் தானா ????
தன் மதத்தை சார்ந்த பெண்கள் மீதில்லையா???
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரியக் கடவுள் என்று தெரிந்திருந்தும்
ஐயப்பன் கோவிலின் ஆகம விதிகளை அறிந்திருந்தும்
ஒரு தலைவர்
அதுவும் இளம் இந்திய வழக்கறிஞர்களின் தலைவர்
இந்த வழக்கை ஏன் தொடுத்தார் ?
ஆக இங்கே தன் மதப் பெண்களின் முகம் மூடிய அரேபிய கொடுமைகளின் சட்டங்களை உடைக்க முடியாதவர்
இந்துமதப் பெண்களின் உரிமைக்காக பாய்ந்து வரிந்து கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுத்திருக்கிறார் என்றால்
இவருக்குத் தான் மதத்தை கடந்து இந்துப் பெண்கள் மீது எத்தனை சமூக அக்கறை ?
சபாஷ் !
இந்தியாவின் பெருன்பான்மையான இந்துக்களில்
உள்ள எத்தனையோ ஆண்களுக்கு
இந்து பெண்கள் மீது இல்லாத அக்கறை
ஒரு இஸ்லாமிய மதத்தை சார்ந்த நவ்சத் என்ற இளம் வக்கில்களின் தலைவரான ஒருவருக்கு பொங்கி
பிரவாகித்த அக்கறை என்னவோ ?
ஆக இந்துக்கள் புனிதமாக எவற்றை எல்லாம் நினைத்து வழிபடுகிறார்களோ
அவற்றை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து இந்துமதத்தை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்பதே இவரின் சமூக அக்கறை .
அது தானே உண்மை .
தன் மதத்தை சார்ந்த பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை தொடுத்து சம உரிமை கேட்க துணியாத இவர் ????
தன் மத பெண்களின் முத்தலாக் கொடுமைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் நியாயம் கேட்க
முடியாத இவர் ?????
பாய்ந்தோடி வந்து இந்துமத பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறாராம் !
சபாஷ் மிஸ்டர்
நவ்சத் அகமத் கான் .
சபாஷ் !
அவர் இந்த பொதுநல வழக்கை தொடுத்த போது
மாண்பு மிகு நீதியரசர்கள் நால்வரும்
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க குரல் கொடுத்த நீங்கள் உங்கள் மசூதிக்குள்ளும் பெண்களை அனுமதிக்க ஏன் வழக்கு தொடுக்கவில்லை ?
இதன் ஒரு தலைப்பட்சமான உள்நோக்கம் என்ன என்று கேள்வி கேட்டிருக்கலாம் .
ஆனால் அவர்கள்
கேட்கமாட்டார்கள் .
இதே இந்து ஒருவர் மசூதிக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை தொடுத்திருத்தால் ????
மதரீதியில் அவர்களுக்கில்லாத அக்கறை உங்களுக்கென்ன வந்தது ?
இது மதரீதியிலான பிரச்சனை .
நாங்கள் இதில் தலையிட முடியாதென்று தீர்ப்பு வந்திருக்குமோ என்னமோ என்பதே ஒவ்வொரு சாமான்யனின் உள்மனதில் கேள்வியாக பதில் தேடி நிற்கிறது .
ஏனென்றால் இந்துக்கள் மீது தொடர்ந்து மாற்றுமத வெறியர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது .
மதசார்பற்ற நாட்டில் இதை நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது .
இதற்கு திராவிட அரசியலும் கைகோர்த்து வலம் வருகிறது .
அதிலுள்ள மானங்கெட்ட சூடு சொரணையற்ற இந்துக்களும் வெட்கமின்றி இதற்கு ஆதரவு தருவது தான் பெரிய வெட்கக்கேடு .
நாளைய தலைமுறையை நாசப்படுத்துவதற்கான அச்சாரம் இவர்களின் இந்து மத எதிர்ப்பு என்பதை உணராமலே அதிலுள்ள இந்துக்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தருவது தான் கொடுமையிலும் கொடுமை .
இந்துக்கள் தங்களுக்கான நியாயங்களை கேட்டால் அது மதவெறி .
இப்போது இந்துக்கள் புனிதமாக வணங்கும் கோயில்களின் மீது பெண்ணுரிமை , சம உரிமை என்ற ரீதியில் இது போன்ற மாற்று மத தாக்குதல்கள் பொதுநலன் வழக்கு
என்ற பெயரில் வந்தால்
இந்துக்கள் கலாச்சாரம் , பண்பாடு , ஆகம விதிகளை உடைத்தெறிய முடியும் என்ற யாரேனும் நினைத்தால்
அது நிச்சயம் நடக்காது .
அவர்களின் கனவு பலிக்காது .
இந்துமதத்தின் ஆணிவேரே பெண்கள் தான் .
அந்த பெண்கள் உரிமைக்காக எந்த மாற்றுமதமும் குரல் கொடுக்கத் தேவையில்லை .
ஏனெனில் எங்கள் தந்தை பரமசிவனே தன்னுடம்பில் பாதியை எங்கள் தாய் பார்வதிக்கு தந்து
ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்
என்று அன்றே பெண்ணுரிமைக்கு அச்சாரமிட்டு விட்டான் .
எந்த உண்மையான இந்துப் பெண்களும் சம உரிமை என்ற பெயரில் சாக்கடையில் போய் விழ மாட்டார்கள் .
அவர்கள் வீர இந்து தமிழச்சிகள் மட்டுமல்ல .
இந்திய தேசத்தின்
வீரமான இந்துப் பெண்கள் .
சம உரிமை எதிலெதில் தேவை என்ற வரையரை தெரிந்தவர்கள் .
எங்கள் மதத்தில்
பெண்கள் எந்தக் கோயிலுக்கு செல்வது ? செல்லக்கூடாது என்று யாரும் வரிந்து கட்டிக் கொண்டு பொதுநலன் வழக்கு தொடர வேண்டாம் .
அப்படித் தொடர்ந்தால் முதலில் வழக்கு தொடுத்தவர் அவர் மதத்து பெண்களுக்கான சம உரிமைகளை பெற்றுத் தந்து விட்டு வரட்டும் .
இந்து மதம் பல தெய்வங்களை வழிபடுவதின் புனிதம்
தந்தை தாய்
சகோதரன் சகோதரி
மாமன் மருமகன்
பெரியப்பா சித்தப்பா
அத்தை
என்ற மனித உறவுகளின் புனிதங்களை இறையாண்மையிலிருந்து தொடங்கி
உறவுகளின் தாத்பரியம் உணர்ந்து
சமூக கட்டமைப்போடு
வாழ்வது தான் இந்துக்களின் பண்பாடு .

ஜென்டர் ஈக்குவாலிட்டி அனைத்திலும் வேண்டும்-

உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து
வயது பெண்களும் செல்லலாம் என்று ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற ஆணுக்கு பெண் சமம்
என்கிற கோட்பாட்டை முன் வைத்து தீர்ப்பு
கூறி இருக்கிறது. இதில் காமெடி என்ன வென்றால்
இந்த தீர்ப்பு வழங்கிய 5 நபர் பெஞ்சில் இருந்த நீதிபதிக ளில் இந்து மல்கோத்ரா என்கிற பெண் நீதிபதிமட்டும் பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு எழுதி
யிருந்தார்..காமெடி யாக இருக்கிறது அல்லவா
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பு க்கு அடிப்படை வாதமான
ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற ஆணுக்கு பெண்
சமம் என்கிற கோட்பாட்டை தீர்ப்பு வழங்கிய பெண்
நீதிபதி யே என்று கொள்ள வில்லை என்பதில் இருந்து சபரிமலைக்கு பெண்கள் விரும்பி செல்
வார்களா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஜென்டர் ஈக்குவாலிட்டி நீதிமன் றங்களில் நீதிபதி நியமனங்களில் இருக்கிறதா? இல்லை
பாராளுமன்றத்தில் தேர்வாகும் எம்பிக்களில் இருக்கிறதா?இல்லையே ..ஒரு சராசரியான வேலை
சம்பந்தமான துறைகளில் கூட இன்னும் ஜென்டர் ஈக்குவாலிட்டியை கொண்டு வர முடியாத நம்முடைய
நாட்டின் உயர்ந்த அமைப்புகள் புனிதம் சம்பந்தமான
ஒரு கட்டுப்பாட்டை கடை பிடித்து வரும் சபரிமலை ஜயப்பன்கோயிலுக்கு ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற பெயரில் பெண்களை அனுமதி அளித்து
தீர்ப்பு வழங்கியது வேடிக்கையானது..
இறைவன் படைப்பில் ஆண் பெண் இருபாலின ருமே வித்தியாசமாக படைக்கப்பட்ட வர்கள். ஆணுக்கு பெண் சமம் என்று வாய்மொழியாக கூறப்
பட்டாலும் பெண்ணின் உடற்கூறுகள் ஆண் பெண். இருவரும் சம நிலையில் இருக்க முடியாது என்பதை
பல நிகழ்வு களில் இருந்து அறிந்து கொள்ளலாம்..
விக்ரம் படத்தில் கமல் தன்னிடம் ஜென்டர் ஈக்கு வாலிட்டி பற்றி பேசும் லிசியிடம் பேசும் வசனங்கள்
விரசமானவை என்றாலும் உண்மையானது. இங்கே
ஒரு ஆண் கோயிலுக்கு மேல் சட்டை இன்றி செல்ல
வேண்டும்.அதே மாதிரி பெண்களும் மேலாடை
இன்றி கோயிலுக்கு செல்வார்களா? செல்ல விரும்புவார்களா?
ஜென்டர் ஈக்கு வாலிட்டி என்கிற வாதமே இந்த உடை
விசயத்திலேயே உடைந்து விடும்.ஜென்டர் ஈக்கு வாலிட்டி பற்றி பேசிய நீதிமன்றம் முதலில் கோயிலுக்கு செல்லும் ஆண்கள் கடை பிடிக்கும் உடை விசயத்தில் பெண்களும் கடை பிடிப்பார்களா என்பதை உறுதி செய்து விட்டு ஜென்டர் ஈக்குவாலி ட்டி பற்றி நியாயம் பேசியிருக்கலாம்..
உடை விசயத்தில் ஆண்கள் மட்டும் இளிச்சவாய ர்களாக இருக்க வேண்டுமா? ஜென்டர் ஈக்கு வாலிட்டி என்கிற பெயரில் சபரிமலைக்கு பெண்கள்
செல்லலாம் என்று தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம்
அதே ஜென்டர் ஈக்கு வாலிட்டி என்கிற பெயரில்
ஆண்களும் கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து
செல்ல அனுமதிக்க கோயில் நிர்வாகத்துக்கு
உத்தர விட வேண்டும்.
இல்லை ஆண்களை போல
பெண்களும் மேலாடை இன்றி கோயிலுக்கு செல்
ல ஆலோசனை வழங்க வேண்டும்.. அப்பொழுது
தான் உச்சநீதிமன்றம் கூறிய ஜென்டர் ஈக்குவா லிட்டி என்கிற ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் பாலின வேறுபாடுகள் இல்லாமல் போகும்
. நாம் ஏன் கோயிலுக்கு செல்லும் பொழுது மேல்
சட்டையை கழற்ற சொல்கிறார் கள் என்றால் பழைய
காலங்களில் இறைவனுக்கு செய்யும் தீபாராதனை
களில் பச்சைக்கற்பூரம் தான் முக்கியமாக இருக்கும்
இந்த கற்பூரம் பல நோய்களை தீர்க்கும் குணம்
கொண்ட து.
இந்த கற்பூரம் தீபாராதனையின் பொழுது எரியும்
பொழுது உண்டாகும் வீச்சுகள் நம்முடைய உடலை
சென்றடைய வேண்டும் என்பதற்காகவே உடலில்
சட்டை அணியாமல் கோயிலுக்கு வர வேண்டும்
என்கிற அறிவுரையானது காலப்போக்கில் சில கோயில்க ளுக்கு விதிமுறையானது. இப்படி நம்
முடைய முன்னோர்கள் பெண் கள் கோயிலுக்கு வருவதையும் சில உடல் காரணங்களுக்காக தடை
செய்தார்களே தவிர ஜென்டர் ஈக்குவாலிட்டி பிரச்சினை க்காக அல்ல..
இன்னொரு விசயம் என்ன வென்றால் உலகிலேயே இந்து கோயில்களில் மட்டும் தான் ஜென்டர் ஈக்குவாலிட்டி அடப்படையில் கடவுள் கூட காட்சி யளிக்கிறார்கள்...அதனால் ஜென்டர் ஈக்குவாலிட்டி
என்கிற பெயரில் நமக்கு புத்தி சொல்லி சபரி மலைக்கு பெண்களும்செல்லலாம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு காமெடியானது என்கிறேன்..
அதே நேரத்தில் சபரிரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்ப டுத்தும். என்றும் ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற பெயரில் மதரீதியான பழக்கங்களை தொடர்பு படுத்த கூடாது. மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும் அதைப் பற்றி வழிபாடு நடத்துபவர்கள தான்முடிவு செய்ய வேண்டும் என்று கோயில் விசயத்தில் ஜென்டர் ஈக்குவாலிட்டியை ஓரங்கட்டுங்கள் என்று தனித்து
தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா
அவர்களுக்கு ஒரு சல்யூட்..
பாருங்கள்..ஜென்டர் ஈக்குவாலிட்டியை முன் வைத்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் கூட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் பெண்நீதிபதியே எங்களுக்கு சபரிமலைக்கு செல்லும் உரிமை வேண்டாம் என்று
ஒதுங்கியிருப்பதை நினைத்தால் இதுவே பெரும்
பாண்மையான பெண்களின் எண்ணமாக இருக்கும்
என்றே நினைக்க தோன்றுகிறது....

‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா"

மத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா" பற்றி விரிவாக எனக்கு தெரிந்தவரை எழுதியுள்ளேன் இதை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்ப்பதை உங்களிடம் விடுகிறேன் ...ஏதேனும் தவறு இருந்தால் குறிப்பிடவும் .. உங்களால் முடிந்த வரை அனைவர்க்கும் எடுத்து கூறவும் ...நன்றி 🙏🙏🙏🙏
உங்கள் அனைவருக்குமான வேண்டுகோள்!!!!
சென்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும்
”ஆயுஷ்மான் பாரத் யோஜனா"
என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நமது பாரத பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மொத்தம் 50 கோடி ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது
..
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்.....
No-1. முதற்கட்டமாக கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற கூலி தொழிலாளர்கள் உட்பட 10.74 கோடி மக்களுக்கு இதனைக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
No-2. வங்கி கணக்கு வைத்திருக்கும் 70 வயதுக்குட்பட்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
No-3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும்.
ஆண்டிற்க்கு ₹1000.00 ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
No-4.பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
No-5.இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்கப்படும்.
No-6.தடுக்கக் கூடிய 70 நோய்களுக்கும், மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய்களுக்கு கட்டாயம் சிகிச்சையளிக்கப்படும்.
No-7. ஆயுஷ்மான் பாரத்திட்டத்தில் பயனாளியாக இணைய ஆதார் அவசியமில்லை என மத்திய சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது.
இந்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் இத்திட்டத்தில் பயனாளியாக இணைய முடியும்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி பயன்பெறுங்கள்.....
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
... ஜெய் ஹிந்த் ...

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது.

உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.

எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.

நந்தியின் வாயிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டே இருக்கும் அதிசயம் !!


ரத்தம் போல் வழியும் திரவம்.... அதிசய நந்தி !
பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சிவகங்கை இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சற்றே வித்தியாசமான சிறப்பு வாய்ந்த ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது.
🔔 ஆம், அப்படி என்ன சிறப்பு என்றால், பல நூறு ஆண்டுகளாக இந்த நந்தியின் வாயில் இருந்து வித்தியாசமான ரத்தம் போன்ற திரவம் வழிந்தபடியே உள்ளது. அந்த அதிசய நந்தி சிலையை பற்றி பார்ப்போம்.....
🔔 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி" என்ற கிராமம். பல ஆண்டு காலத்திற்கு முன்பாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது.
🔔 இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வழவழப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தப்படியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
🔔 இந்த நந்தி சிலையை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தனர். அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தபடியே தான் இருந்தது.
🔔 அந்த ஊர் மக்கள், சிலையின் திரவ சுரப்பையே தங்கள் கால கடிகாரமாக நம்பி விவசாயம் செய்வதாக கூறுகிறார்கள். சிலையில் திரவம் அதிகமாக சுரந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.
🔔 அங்கு எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
திருச்சிற்றம்பலம்

Friday, September 28, 2018

*இதுவும்கடந்துபோகும்*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை *வெற்றிகள்* , 
எத்தனை *தோல்விகள்* ,
எத்தனை *மகிழ்ச்சிகள்* ,
எத்தனை *துக்கங்கள்* ...
எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை *நண்பர்கள்* ,
எத்தனை *பகைவர்கள்* ,
எத்தனை *உறவுகள்* நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
**வெற்றிகள்* கிடைக்கும் போது.,
*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.
*தோல்விகள் தழுவும் போது..,
*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட மாட்டீர்கள்.
*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,
*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,
*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,
*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.
வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,
அந்தப் *புன்னகை* நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்...🙏🏻

ஓர் வரலாறு உள்ளது .

புராணகாலத்தில் மகிஷி
என்ற கன்னி அய்யன் மீது காதல் கொண்டாள் அய்யன் தீவிர பிரம்மச்சரிய விரதம் கொண்டிருந்த காரணத்தால் மகிஷியை தவிர்த்தார் மகிஷி அப்போது ஒரு வரம் கேட்டாள் ஐயனே உங்களை மனம் கொள்ள வேண்டும் ஓர் உபாயம் சொல்லுங்கள் என்றாள் அப்போது ஐயன் என்று எனது சன்னிதானத்திற்கு கன்னி ஆண் பக்தன் வரவில்லையோ அன்று நான் உன்னை மன முடிக்கிறேன் என்று சொல்லி சபரியில் அமர்ந்தார் அன்னை மகிஷியோ சரங்குத்தியில் இன்றும் கன்னி பக்தர்கள் வருகை தராத ஓர் நல்ல நாளுக்காக அந்த மாளிகை புரத்து மகாராணி காத்திருக்கிறாள் ஆனால் ஒவ்வொரு வருடமும் சரங்குத்தியில் கன்னி சாமிகளின் வருகை அதிகரிக்கிறதே தவிர குறைந்ததாக சரித்திரம் இல்லை இது வரலாறு இது அங்கு சென்று வரும் பக்தர்களுக்கு மட்டுமே வெளிச்சம் இவ்வாறு இருக்க இன்று இறை மறுப்பாளர்களின் குரல் வென்றதாக கொண்டாடுகின்றனர் அது தவறு ஒவ்வொரு இறை இல்லத்திற்கும் ஓர் வரலாறு உள்ளது இதனை மீறுவது இறை நம்பிக்கைக்கு எதிரானது உங்க தொல்லை தாங்காமல்தான் நாங்க அங்க போறோம் அங்கேயும் வந்து எங்கள சோதிக்க வேண்டாம் கோடான கோடி நன்றி 48 நாள் ஒரு மண்டலம் விரதமிருந்து சபரி செல்லும் ஓர் உண்மையான ஐயப்ப பக்தர்களின் சார்பாக வேண்டுகோள்.

‘‘பணம் வந்த தும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’

தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார். ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண் டாம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தடுத்தார். ஆனால், அதையும் மீறி படத் தயாரிப் பில் தேங்காய் சீனிவாசன் ஈடுபட்டார். அவர் கையில் இருந்த பணம் படப் பிடிப்பு செலவுகளுக்காக கரைந்துவிட் டது. பணமும் புரட்ட முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வதென்று தெரியா மல், ராமாவரம் தோட்டம் சென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையைச் சொன்னார்.
‘‘நான்தான் ஆரம்பத்திலேயே சொன் னேனே, கேட்டியா? பட்டால்தான் புத்தி வரும். போ… போ…’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கோபமாகப் பேசி அவரை அனுப்பிவிட் டார். இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோன நிலையில், ஏமாற்ற மும் சோகமுமாய் நெடுநேரம் கழித்து இரவில் வீடு திரும்பினார். அங்கே தேங்காய் சீனிவாசனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது உதவியாளர்கள் மூலம் பெரும் தொகையை அவர் வீட்டுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியிருந் தார். விஷயம் அறிந்து, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கோரியதுடன், உதவிக்காக கண்களில் நீர்மல்க நன்றியும் தெரிவித்தார் தேங்காய் சீனிவாசன்!
‘நினைத்ததை முடிப்பவன்’ படத் தில், கிராமத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆர்., தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள மற்றவரைப் போல நடிக்க வேண்டிய நிலை. அடுக்கு மாடி ஒன்றில் இருந்து கீழே பார்க்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அங்கு சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனை மேலே அழைப்பார். படத்தில் இருவருக் கும் ஏற்கெனவே அறிமுகம். தனக்கு ஆரம் பத்தில் காசே வாங்காமல் சுக்கு காப்பி கொடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு 500 ரூபாய்க்கு காசோலை கொடுக்கு மாறு நடிகை லதாவிடம் சொல்வார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.! அப்போது அது பெரிய தொகை.
பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வியா பாரம் செய்யும் சுக்கு காபி வைத்திருக் கும் தூக்கை மறந்துவிட்டு செல்லும் தேங்காய் சீனிவாசனிடம், ‘‘பணம் வந்த தும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கேட்பார். தனது தவறை ஒப்புக்கொள்ளும் தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக் காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.
அப்படியேதான் இருந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.!

பெரியாரின் சிலை திறந்து வைத்தார்.

முதன் முதலாக தமிழக முதல்வராக #புரட்சித்தலைவர்பெறுபேற்ற அந்த ஆண்டில்தான் அவரின் தலைமையில்..
சென்னையில் நடுவன் பாதுகாப்பு துறை அமைச்சர் #பாபு_ஜெகஜீவன்ராம் #தந்தை_பெரியாரின் சிலை திறந்து வைத்தார்.
ஆம் நண்பர்களே சென்னை-யில் திராவிடத் தந்தை #பெரியார்அவர்களின் உருவச்சிலையை தன்னுடைய முதல் ஆட்சி காலத்தில் 17 செப்டம்பர் 1977-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர்#எம்ஜியார் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள, அன்றைய மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபுஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்து வைத்தார்.
 

ஒரு சாமானிய இந்துவின் நினைவூட்டல் கடிதம்:

கவிபேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்கு
ஒரு சாமானிய இந்துவின் நினைவூட்டல் கடிதம்:
அரசியவாதிகள் பலர் எங்கள் தாய்க்கு நீ‌ங்க‌ள் செய்த அவமரியாதையை மறந்து அவர்களின் அடுத்த வேலையை பார்க்க சென்று இருக்கலாம்
தொழிலதிபர்கள் சிலர் இதையும் தொழிலாக கருதிவிட்டு அவர்களது தொழிலை கவனிக்க சென்று இருக்கலாம்
ஒரு வேலையும் செய்யாமல் வைரமுத்துவை மேற்கோள் காட்டி வீட்டில் அமர்ந்து பத்து பேரிடம் பணம் வாங்கி எதையும் செய்யாமல் கூட சிலர் இருந்து இருக்கலாம்
ஆண்டாளை வைத்து கோடி கோடியாக குவித்தவர்கள் எல்லாம் ஒப்புக்கு கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இன்னும் ஆண்டாளை வைத்து எப்படி கோடிகளை சம்பாதிக்கலாம் என வீட்டில் அமர்ந்து யோசித்து கொண்டிருக்கலாம்
நான் அரசியவாதியோ, தொழிலதிபரோ, அடுத்தவன் பணத்தில் வயிறு நிரப்புபவனோ கிடையாது
இந்த உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான அதி தீவிர ஆண்டாள் நாச்சியாரின் அன்பு குழந்தைகளில் நானும் ஒருவன்
இந்த ஒரே தகுதி போதும் திரு.வைரமுத்துவை தனியாக எதிர்த்து நிற்பதற்கு...
கோடிக்கணக்கான அதி தீவிர ஆண்டாள் நாச்சியாரின் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் தங்கள் தாய் மேல், தங்கள் மதத்தின் மேல் நீங்கள் தொடுத்த தாக்குதலை நினைத்து நினைத்து மாய்ந்து தங்களை உருக்கி கொண்டு இருக்கின்றார்கள்
திரு.வைரமுத்து அவர்களே உங்களுக்கு ஒரு நினைவூட்டல்:
உங்களை எதிர்த்து எந்த வித அச்சமும் இல்லாமல் முதல் வீடியோ பதிவை நான் வெளியிட்டேன்.
பின் மதுரையில் இருந்து விமானத்தில் வரும்போது விமானத்தில் வைத்தே உங்களை, நேருக்கு நேராக சந்தித்து நீங்கள் செய்தது தப்பு என்று சொன்னேன்
திரு.H.ராஜா அவர்கள் உங்கள் தாயை பற்றி சொன்னதற்காக அவர் சார்பாக பறக்கும் விமானத்திலேயே உங்கள் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டேன்
உரையாடலுக்கு பின் நீங்கள் என்னிடம் உறுதிமொழி கொடுத்தீர்கள் நாளை மறுப்பு வெளியிடுவேன் என்று.
சொன்னது போல் இரண்டாம் விளக்கம் என மறுப்பு வெளியிட்டுவிட்டு என்னை தொலைபேசியில் அழைத்தும் உங்கள் மறுப்பை தொலைகாட்சியில் பார்க்க செய்தீர்கள்...,,,
நானும் பார்த்தேன்
ஏனோ நீங்கள் அதிகம் படித்த தமிழ் உங்களை கடைசி வரை மன்னிப்பு என்கின்ற வார்த்தையை உபயோகப்படுத்தவிடவில்லை
வருத்தம் மேலும் அதிகரித்தது..
வருத்தத்தின் விளைவால் நிறைய ஊர்கள் சென்று ஆண்டாள் பற்றி பேச வாய்ப்பும் கிடைத்தது.
தங்களால் திரு.நம்பி நாராயணன், திரு.சுதர்சன், Dr.MA.வேங்கடகிருஷ்ணன், Dr.அனந்த பத்மநாபசாமி, திரு.குருஜி கோபாலவல்லிதாஸர், நடிகர் திரு.விசு என நிறைய நல்ல மனிதர்களின் அறிமுகமும் கிடைத்தது.
இந்த கூட்டங்கள் மற்றும் நான் சந்தித்த புதுமுகங்களால் ஒரு விஷயம் ஊர்ஜிதமாக தெரிந்து கொள்ள முடிந்தது
அது
100000000 கோடி வைரமுத்துகள் வந்தாலும் இந்து மதத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.
ஆரம்பமே இல்லாத இந்து மதத்திற்கு முடிவு எழுத வந்ததாக உங்களை சொல்லி கொள்ளும் திரு.வைரமுத்து அவர்களே
பகுத்தறிவாளன் என்று தலை சுமையோடு அலையும் திரு.வைரமுத்து அவர்களே
பிற மதத்தினவர்கள் சந்தோஷப்படுவார்கள் என நினைத்து இராமனின் பிறப்பை கொச்சைப்படுத்தி பேசிய திரு.வைரமுத்து அவர்களே
பிராமணர்களை இன்று பேசும் இடங்களில் எல்லாம் கேலி செய்யும் திரு.வைரமுத்து அவர்களே
உங்களுக்கு இரண்டே இரண்டு கேள்விகள்
1.உங்களுக்கு, முதன்முதலாக Language commission - ல் வேலை கொடுத்த ஜஸ்டிஸ் திரு.மகராஜன் பிள்ளை ஆத்திகவாதியாயிற்றே.
அவரின் காலில் விழுந்து வேலை வாங்குவதற்கு முன் உங்கள் கொள்கை எந்த கடை தெருவில் என்ன செய்து கொண்டிருந்தது?
2.பின் நான் ஒரு பெண்ணை காதலிக்கின்றேன் அவளுக்கு பிராமணனான திரு.R.வெங்கடராமனிடம் (முன்னாள் ஜனாதிபதி) சொல்லி எப்படியாவது ஒரு வேலை வாங்கி கொடுங்கள் என ஜஸ்டிஸ் திரு.மகராஜன் பிள்ளை அவர்களிடம் அழுது புரண்டு வேலை வாங்கியபோது உங்களுடைய பிராமணர்கள் குறித்த கொள்கை முடிவு எந்த ஊருக்கு சுற்றுலா சென்று இருந்தது?
திரு வைரமுத்துவின் அறியாமையை அவருக்கு உணர்த்திட ஏதுவாக மூன்று கட்டமாக திட்டம் தீட்டி உள்ளேன்.
முதல் கட்ட நடவடிக்கையாக
உதவி தேவைப்படும் விவசாய குடிமக்களுக்கு ஜாதி, இனம், மதம், கோத்திரம், மொழி கடந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டாள் கோ தான திட்டத்தின் கீழ் நாட்டு பசு கொடுக்க உள்ளோம்
பின் நாட்டு பசுவினால் கிடைக்கும் சாணம், கோமியம் கொண்டு என்ன வகையான பொருட்கள் தயாரிக்கலாம் என்று பயிற்சியும் வழங்க உள்ளோம்.
கூடிய விரைவில் ஆண்டாள் கோவிலில் வைத்து 108 விவசாயிகளுக்கு நாட்டுபசுவும், நாட்டு பசுவினால் கிடைக்கும் சாணம், கோமியம் கொண்டு என்ன வகையான பொருட்கள் தயாரிக்கலாம் என்று பயிற்சியும் வழங்கப்படும்
நாட்டு பசு பெறுவதற்கு கீழ் கண்ட விதிமுறைகள் வரையறுக்கபட்டுள்ளது
1. ஆண்டாள் கோதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நாட்டு பசுவை எக்காரணம் கொண்டும் விற்க கூடாது
2. தினமும் 1 டம்ளர் எச்சில் படாத பாலை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு கொடுக்க வேண்டும்
3. நாட்டு பசு இறக்கும் பட்சத்தில் புதியதாக நாட்டு பசு பயனாளிக்கு கொடுக்கப்படும்
இரண்டாம் கட்ட நடவடிக்கையாக
ஒவ்வொரு ஊரிலும் நாட்டு பசு கோசாலை நிறுவப்படும்
மூன்றாம் கட்ட நடவடிக்கையாக
இதை படிக்கும் உண்மையான ஆண்டாள் பக்தர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
திரு.வைரமுத்து அவர்களுக்கு சாத்விகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க ஆசைபடுவோர்
1. வருகின்ற August 13,2018 காலை 7 மணிக்கு நடைபெற உள்ள ஆடி பூரத் தேரோட்ட விழாவில் பங்கேற்போம். தேரின் வடம் பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதிப்போம்.
இன்னொரு முறை யாரும் என் மதத்தை தொட கூட நினைக்க கூடாது. மீறி தொட நினைப்பவன் தொலைந்து போகும் அளவிற்கு நாம் பெரும் திரளாக ஆடியில் ஆண்டாள் அவதாரம் செய்த மண்ணில் கூடி நம்மை களங்கப்படுத்தியவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவோம்.
2. இந்த பதிவை அதிக பட்சம் ஷேர் செய்யுங்கள்
திரு.வைரமுத்து அவர்களே
எழுதி வைத்து கொள்ளுங்கள்
என்னை வெறும் தூசி என்று நினைத்து வீட்டீர்கள்
நான் வெறும் தூசி தான் உங்கள் கண் பார்வையில்
இந்த தூசி உங்கள் கண்ணில் விழும் போது
நீங்கள் எழுந்திருக்கவே முடியாது உங்கள் நிலையில் இருந்து
இது சத்தியம்
நான் சொல்வது
நடக்கப் போவது
சர்வ நிச்சயம்
தூங்கிய என்னை தட்டி எழுப்பி
பயணப்பட வைத்த ஆண்டாளுக்கு நன்றி
சைவம்,வைணவம் மறப்போம்
இந்துக்களாக ஒன்றாவோம்
அமைதியான,சாத்விக வாழ்க்கை வாழ்வோம்.

பெற்றோர் பிள்ளை உறவு.

பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம்பழம் போன்றது. புளியம்பழம் பிஞ்சாக இருக்கும்போது அதன் ஓடும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் ஒன்றோடொன்று ஒட்டி, பின்னிப்பிணைந்து நிற்கும். இரண்டையும் எளிதில் பிரிக்கமுடியாது. அதேபோல் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது பெற்றோரும் பிள்ளையும் பின்னிப் பிணைந்து பிரிக்கமுடியாதவர்களாய் இருக்கவேண்டும். பெற்றோர் புளியங்காயின் ஓடுபோன்றவர்கள். பிள்ளைகள் உள்ளிருக்கும் சதைப்பகுதியைப் போன்றவர்கள்.
புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு, சதைப்பகுதியை விட்டு மெல்லமெல்ல விலகும். அதேபோல் பிள்ளைகள் வளரவளர பெற்றோர் பிள்ளைகளின் நெருக்கத்தைக் குறைத்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.

புளியங்காய் நன்றாக முற்றிப் பழமானவுடன் அதன் ஓடு சதைப்பகுதியை விட்டு தனியே விலகி, உள்ளிருக்கும் சுளைப்பகுதியை பாதுகாத்து நிற்கும். அதேபோல், பிள்ளைகள் வாலிப வயதை அடைந்து, வளர்ச்சி பெற்ற முழுமனிதர்களாய் ஆகும் நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து விலகிநின்று, புளியம்பழ ஓட்டைப் போல, பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
புளியம்பழம் பழுத்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஓடு சுளையிலிருந்து தனியே பிரிக்கப்பட்டு, புளிச்சுளை பயன்பாட்டிற்குச் செல்லும்போது ஓடு ஒட்டிக்கொண்டே செல்லாது. சுளை விருப்பப்படி பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்படவும் வேண்டும். அதேபோல் பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி இலக்குப்படி, தங்கள் வாழ்வைத் தீர்மானிக்க வேண்டும். பிள்ளைகள் விருப்பத்தைப் புறக்கணித்து தங்கள் விருப்பத்தை பெற்றோர்கள் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. புளியம்பழ ஓட்டிற்கு உள்ள பெருந்தன்மை பெற்றோருக்கும் வேண்டும்.

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!!

வாழ்வின் அடிப்படை சாராம்சங்களில் ஒன்று உணவு. நல்ல உணவைக் கொடுத்தால் ஒருவரை மயக்கியே விடலாம். ஆனால் ஒரு சராசரி நாளில் நம் உணவானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித நல்ல அல்லது தீய விளைவுகளைக் கொண்ட பலவித பொருட்களை கொண்டது. சில உணவுகள் உடலுக்கு தீங்கு என்று சொல்லப்படும் அதே வேளை சில நல்ல உணவுகளும் சரியாக உண்ணப்படாவிட்டால், நம் உடலில் தீமையை ஏற்படுத்தும். நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில உலகிலேயே மிக ஆபத்தான உணவுகள் என்பதை நாம் சரியாக இன்னும் உணரவில்லை. இந்தக் கட்டுரையில், நாம் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகளை காணலாம். இந்த உணவுகள் எந்த வித சந்தேகமும் இன்றி உலகிலேயே மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதோடு பல கொடுமையான நோய்களுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகின்றன.. நோய்களை எதிர்க்கும் திறன் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவினைப் பொருத்தது. பல உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன என்பது உண்மையே. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றாலும், நாம் இப்போது கவனம் செலுத்தப்போவது உலகின் மிக ஆபத்தான உணவுகள் - உடலுக்குத் கேடு விளைவிக்கக் கூடிய உணவுகளாக நிரூபிக்கப்பட்டவை. உலகின் மிக ஆரோக்கியமற்ற, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களை எதிர்க்கும் உடலின் எதிர்ப்பு சக்தியை அழிக்கவல்ல உணவுகள் இவை. நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய இந்த ஆபத்தான உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம். உலகின் மோசமான சில உணவுகளின் பட்டியல் இதோ.

குளிர்பதனப்படுத்தப்பட்ட உணவு
பல உணவகங்கள் இதுப்போன்ற உணவுகளை நல்ல தரம் வாய்ந்த உணவு என்று சொல்லி உங்களுக்குத் தருவதுண்டு. இது உண்மையில்லை என்பதோடு, உணவகங்களில் தரப்படும் இந்த குளிர்பதனப் பொருட்கள் மிகவும் ஆபத்து நிறைந்த உணவுகள். முக்கியமாக கேன்சரை உருவாக்கும் பெரும்பாலான காரணிகளை உள்ளடக்கியவை.
பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவே உண்ணுங்கள். இதில் உபயோகப்படுத்தப்படும் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமற்றவை.
உறையிடப்பட்ட சிப்ஸ்
இவை சுவைகூட்டச்செய்ய பெரும்பாலும் எம்எஸ்ஜி எனப்படும் மோனொசோடியம் க்ளூட்டாமெட் எனப்படும் உப்பைக் கொண்டவை. சாதாரண உப்பைப் போல் அல்லாமல், இது கார்சினோஜன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் காரணியைக் கொண்டது. எனவே பாக்கெட்டிலிடப்பட்ட சிப்ஸ் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
சோடாக்கள்
சோடா அல்லது கோலா பானங்கள், அதிக அளவு சர்க்கரையைக் கொண்டவை. கேன்சர் செல்கள் அதிக சர்க்கரை மூலமாக பெருகுகின்றன. எனவே எல்லா குளிர்பானங்களும், சோடாக்களும் மிகவும் ஆரோக்கியக் கேட்டினைத் தரக்கூடியவை.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இவையும் சாப்பிடத்தகாத உணவுகளே. பதப்படுத்தப்பட்ட இறைச்சி குறிப்பாக சுவையூட்டப்பட்ட அல்லது பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டவை. உயிருக்கு ஆபத்தான கேன்சர் போன்ற கொடிய நோய்களை ஊக்குவிக்கக்கூடியவை.
பர்கர்
பெரும்பாலான பர்கர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டவை. இவை உப்பை அதிகமாகக் கொண்டுள்ளதோடு, இதில் உபயோகப்படுத்தப்படும் சாஸ் எனப்படும் சுவையூட்டிகள், சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் உடலுக்கு ஆபத்தான கொழுப்பைக் கொண்டவை.
பிரெஞ்சு ஃப்ரைஸ்
மிகவும் மோசமான உணவுகளில் ஒன்றான இவை குறிப்பாக நீங்கள் அதிக உடல் எடையுடன் திணறிக் கொண்டிருக்கும் போது, அதிக அளவு உப்பு மற்றும் கொழுப்பை கொண்டுள்ளதோடு, உலகின் ஆரோக்கியமற்ற உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
மைக்ரோவேவ் பாப்கார்ன்
ஆரோக்கியமற்ற ஆபத்தான கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் நோய்களின் பட்டியலில் நிச்சயம் இந்த மைக்ரோவேவ் பாப்கார்ன் இடம் பிடிக்கும். இதில் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் ஊறு விளைவிக்கும் உப்பின் அளவு இடம் பெற்றுள்ளது.
உப்பு சேர்க்கப்பட்ட பண்டங்கள்
அதிக அளவு உப்பு கொண்ட அனைத்து உணவுப் பொருட்களும் இதில் அடக்கம். இந்த அதிக அளவு உப்பு உடலுக்குக் கொடியது. உப்பிடப்பட்ட பண்டங்களை நீங்கள் உண்டால், உடல் எடையைக் குறைப்பது கடினமாகிறது.
செயற்கையான சுவையூட்டிகள்
செயற்கையான உணவுச் சுவையூட்டிகள் மற்றும் செயற்கையான இனிப்பூட்டிகள் மிகவும் கொடியவை. மிகவும் ஆபத்தான நோய்களை இவை ஊக்குவிக்கும்.
வெள்ளை சாதம்
வெள்ளை சாதம் உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து ஆகியவற்றை, தொடர்ந்து பல வருடங்களுக்கு உண்டு வந்தால், இவை உடலுக்கு கவலை அளிக்கக்கூடியதாக மாறலாம்.

கன்னிகாதானம்" என்றால் என்ன?

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.
நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!
இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.
ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...
*மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்*
🙏🙏🙏🙏

Thursday, September 27, 2018

அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி பேசு என்று எந்த மதத்திலும் இன்று வரை சொல்லப்படவில்லை.

நேத்திக்கு ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன். தமிழ்நாடு முழுக்க சாத்தான்கள்( கோவில்களில்) இருக்கறாங்க. , குறிப்பாக கும்பகோணத்தில அவ்வளவு சாத்தான்கள் இருக்கறாங்கன்னுபப்ளிக்காக பேசறார்..
"சிலரின்" தவறான பேச்சுக்களால், மத்த மதத்தினரில் உள்ள நட்புக்களை காயப்படுத்திடறாங்க.
மோகன். சி. லாசரஸ் அவர்களே, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு.
விவரம் தெரிஞ்சு, நீங்க வளர்ந்து வந்த பாதையில், ஒரு இந்து சமயத்து மக்கள் உங்களுக்கு உதவியாக டாக்டராகவோ, கார் மெக்கானிக்காகவோ, எலக்ட்ரீசியனாகவோ, இருந்திருப்பார்கள் தானே.
அப்ப உங்க பாஷையில் கேட்கிறேன், சாத்தான்களைக் கும்பிடுவர்கள் சாத்தானாகத் தானே இருப்பார்கள். உங்களுக்கு எதற்கு அவர்களிடம் இருந்து உதவி??
நீங்கள் ஏசுநாதரைப் பற்றி போதிப்பவராக இருந்தால், நீங்கள் ஏசுநாதராக மட்டுமல்ல, அனைவரையுமே ஏசுநாதராக மாற்றி இருக்க வேண்டுமல்லவா.?.
அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி பேசு என்று எந்த மதத்திலும் இன்று வரை சொல்லப்படவில்லை.
எங்கள் கோவிலை சைத்தான் என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் தான் "சைக்கோவாக" மாறிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
நீங்கள் "அல்லேலுயா" என்று சொல்வது ஞாயம் என்றால்
நாங்கள் "ஆஞ்சநேயா" என்று சொல்வதில் உங்களுக்கென்ன ப்ரச்சனை?. சபையில் நாவடக்கம் இருக்கட்டும். திருந்துங்கள். இல்லை என்றால் திருத்தி விடுவார்கள்.
தன் வினை தன்னைச் சுடும். !!! .

தற்போது நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் இரசாயன மருந்துகள் கலந்து உள்ளது..

ஆகவே, நம் வீட்டுக்கு அருகில் எளிதாக கிடைக்கும்
மணத்தக்காளி, நாயுருவி, பிரண்டை, முடக்கத்தான், முருங்கை கீரை, இன்னும் பல உள்ளன.
இவைகளை அடையாளம் கண்டு நாம் சாப்பிடவும்,
நம்முடைய சந்ததியினருக்கும் ஊக்கப்படுத்தலாம்.
நகரத்தில் உள்ளவர்களும்
வாரம் ஒருமுறை அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று இப்படிபட்ட
மூலிகை உணவுகளை சேகரித்து
உண்ணலாம்.
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இயற்கை உணவு வகைகளை பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
மூலிகை உணவு பொருட்களை
சாப்பிடுவது நல்லது என நான் நினைக்கிறேன். இன்று எனது வீட்டில் பிரண்டை துவையல் செய்து சாப்பிட போகிறோம்.
உங்களுக்கு பிடித்திருந்தால்
நீங்களும் பின்பற்றலாம்.

21 நாள் தொடர்ந்து இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க!


ஆயுர்வேத மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன
தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.
விளாம்பழத்தின் நன்மைகள்
விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.
சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்
தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.
தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும். மேலும் வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம்பழ மரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

இந்நாட்களில் பகல் நீளமாகவும், இரவு குறுகியும் இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முன்வரும் அமாவாசை வரையுள்ள காலம் மஹாலயபட்சம் எனப்படும். இந்த 15 நாட்களும் பித்ருக்கள் பூமிக்கு வந்து, வழிபடுகிறோமா என்று பார்ப்பார்களாம். ஆகவே 15 நாட்களிலும் தர்ப்பணம் செய்வர். வழிபாடு நடத்துவர்.
தட்சிணாயணகாலம் விசர்க்காலம் எனப்படும். மழைபொழியும் இக்காலத்தில் உடலில் உயிர்ச்சத்துக்களுக்கு பாதிப்பு இருக்காது. உடல் பலம் அதிகமாக இருக்கும்.
இந்நாட்களில் பகல் நீளமாகவும், இரவு குறுகியும் இருக்கும். ஆகவே பகல் சாப்பாட்டுக்குபின் குட்டித்தூக்கம் போடலாம். இனிப்பு, உப்பு, புளிப்பு சுவைகள் அதிகமாக இருக்கும்.
ரிதுசந்தி
பருவமாற்றத்துக்கான ஒரு தேதியை குறித்து, அக்குறிப்பிட்ட நாளில் பருவம் மாறிவிட்டது என்று கூறமுடியாது. பழக்கவழக்கங்களை மாற்றுவதும் கூடாது. வெயில் காலம் முடிந்து மழை தொடங்குவதற்கான கடைசி ஒரு வாரத்தில் வெயில் காலம் பழக்கங்களை குறைத்துக் கொண்டே வந்து, அடுத்த ஒரு வாரத்தில் மழைக்கால பழக்கங்களை பழகி கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட காலம் குதுசந்தி எனப்படும். இச்சமயத்தில் வயிற்றை சுத்தப்படுத்தி கொள்வது நல்லது. பாட்டி வைத்தியமாக விளக்கெண்ணை கொடுப்பர்.
இந்தியாவின் 6 பருவ நிலைகள்
ஹேமந்தருது - முன்பனிக்காலம் - கார்த்திகை, மார்கழி - மனிதபலம் அதிகபட்சம்.
சிசிரருது - பின்பனிக்காலம் - தை, மாசி - அதிகபட்ச மனிதபலம்.
வசந்தருது - வசந்தகாலம் - பங்குனி, சித்திரை - மத்திமமான மனிதபலம்
கிரீஷ்மருது - வெயில் காலம் - வைகாசி, ஆனி - மிக குறைந்த மனிதபலம்
வர்ஷிரது - மழைக்காலம் - ஆடி, ஆவணி - மத்திமமான மனிதபலம்
சரத்ருது - இலையுதிர் காலம் - புரட்டாசி, ஐப்பசி -
ஹேமந்தருது சர்யா (முன் பனிக்காலம்)
இப்பருவத்தில் மக்கள் பலமுள்ளவர்களாக இருப்பர். செரிமான சக்தி அதிகமாக இருக்கும். நெருப்பு தன்னருகே உள்ள பொருட்களை விழுங்குவது போல ஜடராக்னி உடலில் உள்ள திசுக்களை கூட விழுங்கி விடும். இனிப்பு, உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகளை உண்ண வேண்டும்.
இரவு நீண்டிருப்பதால் அதிகாலையில் பசி அதிகரித்து, வாதத்தை தூண்டும். ஆகவே எண்ணெய் தேய்க்கலாம்.
வெதுவெதுப்பான நீரையே குடிக்க, குளிக்க பயன்படுத்த வேண்டும்.
சிஷிரருது (பின்பனிக்காலம்)
இந்த பருவத்திற்கான நிலைப்பாடுகள் முந்தைய காலத்தை போலவே இருக்கும். இன்னும் சற்று அதிக வேகத்தில் இருக்கும். (குளிரும், வறண்ட தன்மையும் கடுமையாக இருக்கும்).
வசந்த ரிதுசர்யா (வசந்த காலம்)
குளிர்காலத்தில் அதிகம் உண்டான கபம், வசந்த காலத்தில், வெயில் காரணமாக உருகத் தொடங்கும். பசி (அக்னி) குறையும். ஆகவே கபத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டும். உணவு, கபத்தை குறைப்பதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும், கொழுப்பு சத்து குறைந்ததாகவும், நீர்ச்சத்து குறைந்ததாகவும் இருக்கவேண்டும்.
உடற்பயிற்சி செய்யலாம். பொடி தேய்ப்பு செய்யலாம். குளிர்ந்த உணவுகள், இனிப்பு, புளிப்பு, கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் கபத்தை அதிகரிக்கும். ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
பகலில் தூங்கக்கூடாது
க்ரீஷ்ம ரிது (வெயில் காலம்)
சூரிய கதிர் அதிக வெப்பமுடையதாக இருக்கும்.
கபம் குறையத் தொடங்கும். வாதம் கூட தொடங்கும். ஆகவே உப்பு, காரம், புளிப்புசுவை உள்ள உணவுகளை அதிகம் உண்ணல்
திரவ உணவுகள், குளிர்ந்த உணவுகள், இனிப்பு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.
அதிக உடற்பயிற்சி செய்யக்கூடாது.
வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது வெளியே செல்லக்கூடாது.
வர்ஷரிது (மழைக்காலம்)
ஜடராக்னி வெயிலில் குறைய தொடங்கியது. இப்போது அதிகம் குறைந்து விடும்.
நீர்நிறைந்த மேகங்கள், குளிர்ந்தகாற்று, பூமியின் கதகதப்பு ஆகியவற்றால் தோஷங்களின் சமன்பாடு குறையும்.
தோஷங்களின் சமன்பாட்டை சீராக்கவும், செரிமானத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
வெயிலின் தாக்கம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஆற்று தண்ணீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சூரிய வெளிச்சம் இல்லாத நாட்களில் உணவு எளிதில் செரிமானம் ஆக கூடியதாக இருக்க வேண்டும்.
அதிகம் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
ஷரத்ரிது (குளிர்காலம்)
மழைக்கால குளிருக்கு மனிதன் பழக்கப்பட்டு விடுவான். குளிரில் இருந்து சூரிய வெப்பத்துக்கு மாறும்போது பித்தம் அதிகமாகும். கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி, பயிறு, சர்க்கரை, தேன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
பனியில் போகக்கூடாது.
ஹம் ஸோதகம் (குளிர்காலத்தில் தண்ணீரை சுத்தப்படுத்துதல்)
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை பகலில் வெயிலிலும், இரவில்சந்திரனின் கதிர்கள் படும்படியாகவும், சில நாட்கள் வைத்திருக்க வேண்டும். அப்போது தண்ணீரில் இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படும். சுத்திகரிக்கப்படும். மலங்களை அழிக்கக்கூடிய தன்மை ஏற்படும். இத்தகைய தண்ணீரை அகஸ்திய நட்சத்திரம் அது அமிர்தத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது. இதை குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
பருவங்களின் போது பயன்படுத்தும் உணவுகளின் சுவையும், குணமும்.
சிஷிரரிது (குளிர், பனி) - இனிப்பு, உப்பு, புளிப்புச்சுவை - சூடுள்ள உணவுகள்.
வசந்தரிது (வசந்தகாலம் ) - கசப்பு, துவர்ப்பு, காரச்சுவை - சூடுள்ள உணவுகள்
கிரிஷ்மரிது (வெயில் காலம்) - இனிப்பு சுவை - குளிர்ந்த உணவுகள்.
வர்ஷரிது (மழைக்காலம்) - இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை - சூடுள்ளவை. சீசன் முடியும் போது குளிர்ந்தவை.
விரத்ரிது (குளிர்காலம்) - இனிப்பு, கசப்பு, சுவை ஹேமந்தரிது (முன்பனிக்காலம்) - இனிப்பு, உப்பு, புளிப்பு சுவை - சூடுள்ள உணவுகள். தினமும் அறுசுவைகளும் நிரம்பிய உணவை சாப்பிடுவது உடல் நலத்தை சீராக பாதுகாக்க உதவும். குறிப்பிட்ட பருவங்களின் போது, அந்த காலத்துக்குரிய சுவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...