Tuesday, September 18, 2018

தெரிந்தவர்களே மௌனமாக இருக்காங்க. என்ன செய்வது?

இந்தியாவில் முதன்முதலில் தலித் ஆலயபிரேவசம் செய்வித்தவர் ஶ்ரீமான் வைத்தியநாத ஐயர்தான்... எத்தனை பேருக்கு தெரியும் இந்த வரலாற்று உண்மை..

வைக்கம் போராட்டத்தை ஈவேரா தொடங்கவில்லை, தலைமைதாங்கி வழிநடத்தவில்லை, முடிக்கவில்லை’
ஈவேரா வைக்கம்போராட்டத்தில் பங்குபெற்றார், அவ்வளவுதான். அவர் பங்கெடுக்கும் முன்னரே அது ஆரம்பித்தது. அவர் விலகியபின்னும் நடந்தது. அவர் பங்கேற்றபோதுகூட அதை தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள் வேறு சரித்திரநாயகர்கள். ஈவேராவின் பங்களிப்பு அதில் மிகச்சிறியதே
ஆனால் ஈவேரா வைக்கம்போராட்டத்தை ‘நடத்தினார்’ [பாடநூல்களில் கூட launched என இருக்கிறது] அங்கே தாழ்த்தப்பட்டவர்கள் நடமாட உரிமையை ‘வாங்கிக்கொடுத்தார்’ என்றெல்லாம் இங்கே எழுதப்பட்டுவருகிறது. இவை அப்பட்டமான வரலாற்றுத்திரிபுகள் என்பதே நான் சொல்வது.
வைக்கம்போராட்டம் நாராயணகுருவின் சீடர்களான காந்தியவாதிகளால் நடத்தப்பட்டது. அது அவர்களால்நாராயணகுருவின் உதவியுடன் முடிக்கப்பட்டது. அது ஒரு தொடக்கம். அதன்பின் கேரளத்திலும் இந்தியாமுழுக்கவும் அப்போராட்டம் காந்தியால் முன்னெடுக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில்.
இந்த கூற்றுக்கு இன்றுவரை எவரும் எந்த தர்க்கபூர்வமான, ஆதாரபூர்வமான மறுப்பையும் முன்வைக்கவில்லை. மாறாக, பக்கம்பக்கமாக வைக்கம்போராட்டம் பற்றி ஈவேரா சொன்னவற்றையும், ஈவேரா பற்றி வேறு யாராவது சொன்னவற்றையும் எடுத்து வைக்கிறார்கள். ஈவேரா வைக்கத்தில் பங்கெடுக்கவில்லை என்று நான் சொன்னதாக வலிந்து காட்டி அதற்குப்பதில் சொல்கிறார்கள்.
வைக்கம்போராட்டத்தை ஈவேரா ‘தொடங்கியதற்கு’ ‘முழுமையாக தலைமைதாங்கி வழிநடத்தியதற்கு’ ‘முடித்துவைத்து உரிமைகளை பெற்றுத் தந்தமைக்கு’ ஒரே ஒரு ஆதாரத்தையாவது வரலாற்றிலிருந்து காட்டுவார்கள் என்றால் பேசலாம். மற்றபடி யார் என்ன திரித்தாலும் கோலத்தில் பாய்ந்தாலும் வசைபாடினாலும் நான் சொன்னவை நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளாகவே நீடிக்கும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...