Wednesday, September 26, 2018

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைத்தாலே பெரும்பாலான முறைகேடுகளை தவிர்க்கலாம். செய்வாரா மோடி?!?

இந்திய உச்சநீதிமன்றம் அரசாங்கத்தில் சலுகைகள் பெறவும், வருமானவரித்துறையிலும் ஆதாரை கட்டாயப்படுத்தியுள்ளது மிகவும் வரவேற்கக்கூடியது. அதேசமயம் வங்கிகளிலும், செல்போன் நிறுவனங்களில்லும், கேஸ், எல் ஐ சி போன்ற நிறுவனங்களிலும் ஆதாரை 90% மக்கள் ஏற்கனவே பதிவு செய்து இருப்பதால் தாமதமாக வந்துள்ள இந்த தீர்ப்பு என்னைப்போன்றோர்களுக்கு முக்கியமானதாக படவில்லை. சாதாரண இந்திய குடிமகனாக நான் எதிர்பார்ப்பது தேர்தலில் ஓட்டு போடுவதற்கும் ஆதார் எண்ணும் அவசியம் என்று இந்திய அரசாங்கங்களும்,உச்சநீதிம்ன்றமும், தேர்தல் ஆணையமும், கொண்டுவந்தால் அது தேர்தலில் ஏற்படும் ஏராளமான குளறுபடிகளுக்கு ஏதாவதொரு வகையில் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே. தேர்தல் ஆணையம் ஆதாரை கட்டாயப்படுத்தினால் என்னைப் போன்றோர் மிகவும் வரவேற்போம். எதிர்பார்க்கலாமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...