Sunday, September 30, 2018

ஜென்டர் ஈக்குவாலிட்டி அனைத்திலும் வேண்டும்-

உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து
வயது பெண்களும் செல்லலாம் என்று ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற ஆணுக்கு பெண் சமம்
என்கிற கோட்பாட்டை முன் வைத்து தீர்ப்பு
கூறி இருக்கிறது. இதில் காமெடி என்ன வென்றால்
இந்த தீர்ப்பு வழங்கிய 5 நபர் பெஞ்சில் இருந்த நீதிபதிக ளில் இந்து மல்கோத்ரா என்கிற பெண் நீதிபதிமட்டும் பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு எழுதி
யிருந்தார்..காமெடி யாக இருக்கிறது அல்லவா
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பு க்கு அடிப்படை வாதமான
ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற ஆணுக்கு பெண்
சமம் என்கிற கோட்பாட்டை தீர்ப்பு வழங்கிய பெண்
நீதிபதி யே என்று கொள்ள வில்லை என்பதில் இருந்து சபரிமலைக்கு பெண்கள் விரும்பி செல்
வார்களா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஜென்டர் ஈக்குவாலிட்டி நீதிமன் றங்களில் நீதிபதி நியமனங்களில் இருக்கிறதா? இல்லை
பாராளுமன்றத்தில் தேர்வாகும் எம்பிக்களில் இருக்கிறதா?இல்லையே ..ஒரு சராசரியான வேலை
சம்பந்தமான துறைகளில் கூட இன்னும் ஜென்டர் ஈக்குவாலிட்டியை கொண்டு வர முடியாத நம்முடைய
நாட்டின் உயர்ந்த அமைப்புகள் புனிதம் சம்பந்தமான
ஒரு கட்டுப்பாட்டை கடை பிடித்து வரும் சபரிமலை ஜயப்பன்கோயிலுக்கு ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற பெயரில் பெண்களை அனுமதி அளித்து
தீர்ப்பு வழங்கியது வேடிக்கையானது..
இறைவன் படைப்பில் ஆண் பெண் இருபாலின ருமே வித்தியாசமாக படைக்கப்பட்ட வர்கள். ஆணுக்கு பெண் சமம் என்று வாய்மொழியாக கூறப்
பட்டாலும் பெண்ணின் உடற்கூறுகள் ஆண் பெண். இருவரும் சம நிலையில் இருக்க முடியாது என்பதை
பல நிகழ்வு களில் இருந்து அறிந்து கொள்ளலாம்..
விக்ரம் படத்தில் கமல் தன்னிடம் ஜென்டர் ஈக்கு வாலிட்டி பற்றி பேசும் லிசியிடம் பேசும் வசனங்கள்
விரசமானவை என்றாலும் உண்மையானது. இங்கே
ஒரு ஆண் கோயிலுக்கு மேல் சட்டை இன்றி செல்ல
வேண்டும்.அதே மாதிரி பெண்களும் மேலாடை
இன்றி கோயிலுக்கு செல்வார்களா? செல்ல விரும்புவார்களா?
ஜென்டர் ஈக்கு வாலிட்டி என்கிற வாதமே இந்த உடை
விசயத்திலேயே உடைந்து விடும்.ஜென்டர் ஈக்கு வாலிட்டி பற்றி பேசிய நீதிமன்றம் முதலில் கோயிலுக்கு செல்லும் ஆண்கள் கடை பிடிக்கும் உடை விசயத்தில் பெண்களும் கடை பிடிப்பார்களா என்பதை உறுதி செய்து விட்டு ஜென்டர் ஈக்குவாலி ட்டி பற்றி நியாயம் பேசியிருக்கலாம்..
உடை விசயத்தில் ஆண்கள் மட்டும் இளிச்சவாய ர்களாக இருக்க வேண்டுமா? ஜென்டர் ஈக்கு வாலிட்டி என்கிற பெயரில் சபரிமலைக்கு பெண்கள்
செல்லலாம் என்று தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம்
அதே ஜென்டர் ஈக்கு வாலிட்டி என்கிற பெயரில்
ஆண்களும் கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து
செல்ல அனுமதிக்க கோயில் நிர்வாகத்துக்கு
உத்தர விட வேண்டும்.
இல்லை ஆண்களை போல
பெண்களும் மேலாடை இன்றி கோயிலுக்கு செல்
ல ஆலோசனை வழங்க வேண்டும்.. அப்பொழுது
தான் உச்சநீதிமன்றம் கூறிய ஜென்டர் ஈக்குவா லிட்டி என்கிற ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் பாலின வேறுபாடுகள் இல்லாமல் போகும்
. நாம் ஏன் கோயிலுக்கு செல்லும் பொழுது மேல்
சட்டையை கழற்ற சொல்கிறார் கள் என்றால் பழைய
காலங்களில் இறைவனுக்கு செய்யும் தீபாராதனை
களில் பச்சைக்கற்பூரம் தான் முக்கியமாக இருக்கும்
இந்த கற்பூரம் பல நோய்களை தீர்க்கும் குணம்
கொண்ட து.
இந்த கற்பூரம் தீபாராதனையின் பொழுது எரியும்
பொழுது உண்டாகும் வீச்சுகள் நம்முடைய உடலை
சென்றடைய வேண்டும் என்பதற்காகவே உடலில்
சட்டை அணியாமல் கோயிலுக்கு வர வேண்டும்
என்கிற அறிவுரையானது காலப்போக்கில் சில கோயில்க ளுக்கு விதிமுறையானது. இப்படி நம்
முடைய முன்னோர்கள் பெண் கள் கோயிலுக்கு வருவதையும் சில உடல் காரணங்களுக்காக தடை
செய்தார்களே தவிர ஜென்டர் ஈக்குவாலிட்டி பிரச்சினை க்காக அல்ல..
இன்னொரு விசயம் என்ன வென்றால் உலகிலேயே இந்து கோயில்களில் மட்டும் தான் ஜென்டர் ஈக்குவாலிட்டி அடப்படையில் கடவுள் கூட காட்சி யளிக்கிறார்கள்...அதனால் ஜென்டர் ஈக்குவாலிட்டி
என்கிற பெயரில் நமக்கு புத்தி சொல்லி சபரி மலைக்கு பெண்களும்செல்லலாம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு காமெடியானது என்கிறேன்..
அதே நேரத்தில் சபரிரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்ப டுத்தும். என்றும் ஜென்டர் ஈக்குவாலிட்டி என்கிற பெயரில் மதரீதியான பழக்கங்களை தொடர்பு படுத்த கூடாது. மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும் அதைப் பற்றி வழிபாடு நடத்துபவர்கள தான்முடிவு செய்ய வேண்டும் என்று கோயில் விசயத்தில் ஜென்டர் ஈக்குவாலிட்டியை ஓரங்கட்டுங்கள் என்று தனித்து
தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா
அவர்களுக்கு ஒரு சல்யூட்..
பாருங்கள்..ஜென்டர் ஈக்குவாலிட்டியை முன் வைத்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் கூட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் பெண்நீதிபதியே எங்களுக்கு சபரிமலைக்கு செல்லும் உரிமை வேண்டாம் என்று
ஒதுங்கியிருப்பதை நினைத்தால் இதுவே பெரும்
பாண்மையான பெண்களின் எண்ணமாக இருக்கும்
என்றே நினைக்க தோன்றுகிறது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...